Sunday, 9 July 2017

20 ரூபாய் இன்வெல்ட்மெண்ட் - 4, தாறுமாறு தங்கம் - புதுசா ஏதாவது செய்வோம்.



கைரேகையும் , சாமுத்திரகா லட்சனமும் முக்கியதுவம் பெற்றுந்த காலம் அது. ஒரு மாணவன் கல்வி கற்க குருகுலம் வந்தான். குரு அவனை அவனை ஏற இறங்க பார்த்து விட்டு, அவன் கை ரேகையை பார்த்தார். " உனக்கு கல்வி ரேகை இல்லை, உனக்கு இங்கு இடமில்லை" என்றார். உடனே அவன் " கல்வி ரேகை எப்படி இருக்கும் " என்றான். குரு விளக்கினார். அவன் பரபரவென அருகில் இருந்த மரப்பட்டையை உறித்து, அவர் சொன்னது போல் தன் கையை கிழித்துக் கொண்டான். " இப்போது நீங்கள் சொன்ன, அந்த ரேகை வந்துவிட்டது குருவே " என்றான். அவன் வேறு யாரும் இல்லை மெளரிய சாம்ராஜ்ஜியம் உருவாக காரணமாக இருந்த சாணக்கியர்.


இந்த கதைக்கும் தங்கத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்கு. இருக்கு நாம கொஞ்சம் பின்னாடி போவோம், " இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் " - இது ஓடாத ஒரு நியூஸ் சேனலே இருக்காது அப்போது பெரும்பாலான வீடுகளில் இத பார்த்து தான் டெஷசன் மேக்கிங்கே. நம் கிட்ட என்னதான் சொத்து இருந்தாலும், தங்கம் இருந்தே ஆகனும். ஏன்? நம்ம சொத்து புதுசா போற இடத்துல தெரியாது. ஆனா தங்கம் நம்ம சொந்த பட்டியல் போட்டு கட்டும். கல்யானத்துக்கு போன கூட பொண்ணு எப்படிங்கிறத பார்குறத விட நகையை பாக்குறவங்க அதிகம், இதே கதைதான் கோயிலையும். சில பேர் மத்தவங்க நகையை விட்டு, நகையையே கம்பேர் பன்ன ஆரம்பிச்சுட்டாங்க. எது எப்படியோ தங்கமும் ஒரு முதலீடாக உள்ளது.


இப்ப கொஞ்சம் டெக்னிகலா போவோம். தங்கம் ஏன் எப்போதும் பொருளாதாரத்தின் முக்கியதுவம் பெறுகிறது. தங்கத்த பொருத்த வரைக்கும் அதோட சப்ளை எப்போதும் கம்மி. அதாவது 60 மடங்கு தேவை உள்ளது. அதுனால அது எப்போவுமே வெல அதிகமா இருக்கு. தங்கம் எப்போதும் டாலர் பொருத்து விலை மாறும். சிம்பிள சொல்லனும்னா டாலர் வேல்யூ அதிகமானால், தங்கம் விலை குறையும். வேற சில காரணமும் உண்டு.
1) பெட் (Fed) ரேட் அதிகப்படுத்துதல் - டாலர் வேல்யூ அதிகமாகும்.
2) USA ன் பொருளாதார வளர்ச்சி டாலருக்கு சாதகமாக உள்ள போது
3) டாலருக்கான டிமாண்ட் உலக அளவில் அதிகமாக இருககும் போது.


அது எப்படி நாங்க பிசிகலா கோல்டு வாங்குறோம். அதுக்கும் டாலருக்கும் என்ன சம்பந்தம்? சில பேர் மட்டும் தான் கோல் டை மெட்டீரியல வாங்குறோம், பெரு நிறுவனங்கள், நாடுகள் அதை டீ மெட்டீரியல தான் வாங்கு வாங்க. "ஹட்ஜிங் ".



ஹட்ஜிங் - அதிகம் கேள்விபடாத வார்த்தை, பங்கு சந்தை ( Share Market) அங்கு சாதரணமாக சேர் வாங்கலாம், ஒரு, இரண்டு, மூன்று மாத காண்ட்ராக்ட் மூலமாகவும் வாங்கலம் அல்லது பிரிமியம் செலுத்தி காண்ட்ராக் டை லாட்மூலமாக வாங்கலாம். நிறைய கம்பெனிகளின், பேலன்ஸ் ஹீட்டுகளில் இதர வருமானம் அதிகமாக அதாவது செயல்பாட்டு வருமானத்தை விட அதிகமாக இருக்கும். அப்படியென்றால் அது கண்டிப்பாக ஹட்ஜிங் செய்திருக்கும்.

அதாவது ஒரு குறிப்பிட்ட பிரீமியம் செலுத்து ஒரு விலைக்கு பங்கு கான்ட்ராக்டை வாங்கி பின் சேரில் முதலீடு செய்து அதன் விலையை உயர்த்துவது அதில் இருந்து லாபம் பார்ப்பது. புரியலயா? இன்னும் சிம்பிளா போவோம்.

இப்போ நான் டாலர் விலையேறும் அப்படினு நினைச்சு டாலர் காண்டர்ராக்ட் வாங்குறேன். ஆனா விலை சரியா போகல, நான் முன்னாடியே சொன்ன மாறி, டாலர் வேல்யூ குறையும் போது கோல்டு வேல்யூ ஏறும். உடனே அத வித்துட்டு லாஸ் புக் செய்து, கோல் டில் முதலீடு செய்து லாபம் பார்ப்பது. இதையே பெரிய அளவுல செய்யும்போது தங்கம் விலை தாறுமாற ஏறும். டாலர் வேல்யூ குறையும். இத பெரு நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் பலர் உலகம் முழுவதும் செய்யும் போது தங்கம் விலை நிர்ணயிக்கப்படும். லைட்டா புரிஞ்சுதா? இன்னும் சிம்பிளா

நம்ம வீட்டுல என்ன பண்ணுவோம், பத்து லட்சம் ரூபாய் எப்படி பாதுகாப்பா முதலீடு செய்வோம், ( 20 % ரிட்டர்னு சொல்ற ஃபைனாஸ் கம்பெனி மட்டும் ஏமாந்தும் முதலீடு செய்ய தீங்க) FD ஒரு 5 லட்சம் கோல்டு ஒரு 5 லட்சம் சாமர்த்தியமான முதலீடு, FD எப்படியும் கட்டாயம் கிடைக்கும். கோல்டு விலை ஏறினா லாபம் இல்லைனாலும் FD வட்டியை வச்சு மேகப் பண்ணலாம், ரைட்டா?? இப்போ இன்னும் சிம்பிளா போவோம்.

மளிகை கடை எதுக்கு அத்தனை பொருள வைச்சுருக்கனும், ஒன்னுல லாபம் கம்மி ஆனாலும் மத்தது காப்பாத்தும் - அவ்வளவு தான் ஹட்ஜிங் இப்ப நீங்க இங்க இருந்து மேல வரைக்கும் படிச்சா புரியும்.


இங்க தான் நாம சாணக்கியதனமா யோசிக்கனும் நம்மளோட முதலீடு கூட்டு வட்டி முறையில் பெருகனும் அப்போ மட்டும் தான் நீங்க கனரக்ட்டா முதலீடு செய்ததா அர்த்தம் நம்மளோட நாட்டு பணவீக்கம் அதுவும் கூட்டு வட்டி போல தான் நீங்க அத 7% வச்சு உங்க முதலீடு குறைந்தது 8% ரிட்டர்ன் குடுக்குற மாதிரி பாந்துக்குங்க. நம்ம தேர்வு 60% FD, 20% கோல்டு, 20 % பண்ட்டுகளில் இருக்கும் படி பார்த்து கொள்ளலாம். இது அவர் அவர் ரிஸ்கை பொருத்து மாறலாம்.


ஏன் கோல்டுக்கு கம்பியான முக்கியதுவம் கடந்த 6 வருடமா கோல்டோட ரிட்டர்ன் நெகட்டிவ் கீழே நான் வருஷம் அப்போ கோல்டோட விலை அந்த விலையோட இப்போதய பண மதிப்பு இப்போதைய கோல்ட் வேல்யூ லாபம் மற்றும் நஷ்டம் போட்டுறுக்கேன் பாருங்க. அப்புறம் முடிவு பண்ணுங்க


சாணக்கிய தனமான யோசனைக்கு தான் இங்க பஞ்சமே 2012 கோல்டு ரேட் எக்கு தப்பா ஏறியது அப்போ சில பேர் பயந்து கோல்டு எக்கச்சக்கமா வாங்கு நாங்க ஆன பொருளாதாரம் புரிஞ்ச சில பேர் வேற பக்கம் அதாவது பெஸ்டான ஷேர், மிசச்சுவல் பண்ட் பக்கம் கவனத்த திறுப்புனங்க. இவங்கதான் "காண்டரா இன்வெஸ்டர்" கண் கொத்தி பாம்பு மாதிரி சமயம் பாத்துகிட்டு இருப்பாங்க, சமயத்துல சமயோசிதமா யோசிச்சு முடிவு எடுப்பாங்க.

முதலீட்ட பொறுத்த வரைக்கும், பண வீக்கத்தை விஞ்சிய வளர்ச்சி, கூட்டு வட்டி முறையான வளர்ச்சி, சரியான தேர்வு அத்துடன் நாட்டின் பொருளாதாரம் முக்கியம். அதை விட முக்கியம் சாணக்கியதனம். இப்போவாவது நம்ம பொருளாதாரத்த பத்தி தெரிஞ்சுக்குவோம், அறிவுக்காக அல்ல ஆக்கத்திற்காக .

நகரா (movable) நகரும் (immovable) சொத்து களுடன் நிதி சொத்து ( financial Asset) யும் உருவாக்குவோம்.

முதலீடு - பெருக்குவோம்.


Sunday, 2 July 2017

20 ரூபாய் இன்வெஸ்ட்மெமென்ட் - 3, EMI என்னும் வில்லன் - புதுசா ஏதாவது செய்வோம்.


EMI என்னும் வில்லன்.

அது ஒரு குருகுலம், அங்க நிறைய பேர் வில்வத்தை கத்துகிட்டு இருந்தாங்க. ஒருத்தன் மட்டும் தினமும் சீக்கிரமா வந்து ஏதோ பண்ணிகிட்டு இருந்தான். மறுநாள் வில்வித்தை போட்டி ஆரம்பம். குரு " சீடர்களே அதோ தெரிகிறதே மரம் அதுல போய் ஒரு வட்டம் போட்டுட்டு வாங்க, அந்த வட்டத்துல அம்பு விட வேண்டும்" என்றார். உடனே எல்லாரும் போட் ஒரு வட்டம் போட்டு, வந்து அம்பு விட்டனர். நிறைய பேர் அம்பு விலகி சென்றது, ஒருத்தன் மட்டும் கரைக்டா விட்டான். " டேய் இதுக்குதான் டெய்சியும் சீக்கிரமா வரீயா " னு ஃபிரண்ட்ஸ் கேட்க. அதுக்கு அவன் " டேய் இப்போ நீ ஒரு வட்டம் அந்த மரத்துல போடு, அதுல என்னால கரைக்ட்டா அம்பு விட முடியாது, ஏன்னா நான் டெய்லியும் வந்து அம்பு விட்டு பாப்பேன் அது கரெக்ட்டா ஒரே இடத்துல தான் குத்தியது, நான் அந்த இடத்துல வட்டம் போட்டேன், நீங்கள் அவசர அவசரமா பொறுமை இல்லாம ஏதோ ஒரு இடத்துல வட்டம் போட்டீங்க, உங்களளோட ஸ்டென்த் உங்களால கண்டு பிடிக்க முடியல, நான் அத கண்டு பிடிச்சு, அதுக்கு தகுந்த மாதிரி இலக்கு நிர்ணயச்சேன்".



இங்க பல பேர் வோட எண்ணங்கள் இப்படி தான் இருக்கு.
" நான் சாகரதுக்குள்ள பெரிய பணக்காரன் ஆகனும், என்னோட சொத்து பல மடங்கு உயரனும், நான் எப்படியாவது அத செய்யனும், இத செய்யனும், அந்த இடத்துக்கு ( Level) போகனும், அந்த வேலைக்கு போகனும், அவன மாதிரி இருக்கனும்"


சரி, அதுக்கு ஃபர்ஸ்ட் நம்ம ஸ்டெர்ன்த் என்னன்னு தெரிய வேணாமா?. எனக்கு தெரிந்த பல ஆசிரியர்கள், நல்ல நிலையில் இருந்தவர்கள், மேல சொன்ன ஏதாவது ஒரு கேட்டகிரில இருந்தவங்க, இருக்கறவங்க, ஏன் நாமளே பல பேர் அப்படி தான், நாமளே கண்கூட பாத்துருப்போம் " அவருக்கு கார், பைக், வீடு, நிலம் எல்லாம் இருக்கு ஆனா எப்ப பாத்தாலும் கடன் இருக்குன்னு பொழம்புறார்". ஃப்ரெண்ட் நல்ல வேலைக்கு போய் நல்லா சம்பாரிக்குரான் ஆனா  முக்கால் வாசிEMI கே போகுதுங்கறான்.


சரி, இப்போ எப்படி மாச கடன்காரன் ல இருந்து தப்பிகறதுனு பாப்போம். தேவைக்கும் ஆடம்பரத்துக்கும் வித்தியாசம் உண்டு. கார் தேவையே இல்லாத போது, கார் ஆடம்பரம், தேவையே இல்லாத போது விருப்பப்படும் ஒவ்வொன்றும் ஆடம்பரம் தான். இப்போ தேவையே படாத போது வாங்கப்படும் கார் - விலை ரூ 10.00 லட்ச முன்னு வைப்போம், ஒரு 8 லட்சம் லோன் வாங்குறோம் 9.00 % இன்ட்ரஸ்ட், 10 வருஷம், அப்போ EMI வந்து ரூ 10,314 / -. மொத்த 10 வருஷத்துக்கு ரூ 4.16 லட்சம் இன்ட்ரஸ்ட் பே பண்னிறுப்போம் , மொத்தம் 12.16 லட்சம் + 2 லட்சம் = 14.16 லட்சம் . இப்போ கார் ரோட வேல்யூ 10 வருசம் = ரூ 5 லட்சம்,. சோ லாஸ் 14.16- 5 = 9. 16 லட்சம் . ஒரு நிமிஷம் இப்போ நாம கட்டுன பணத்துக் கான பண வீக்கத்தை ( Inflation) 4% கண்டிப்பா நாட்டோட குரோத் கு வேனும் நான் 6% எடுத்துகிறேன் இது நம்ம நாட்டு பண வீக்கத்தோட குறைவு . மேல சொன்ன 2 லட்சம் மொத்தம் + 1 .20 லட்சம் வருச EMI க்கு 10 வருடத்திற்கு பிறகான மதிப்பு கிட்டதட்ட 20.34 லட்சம் .


அப்போ 20.34 - 5 = 15.34 லட்சம் லாஸ் . " சரி அத எப்படி சரி செய்யறது, 4 சீட்டர் 10 லட்சம் வேல்யுக்கு பதில் 5 to 7 லட்சம் மதிப்புள்ள கார். 2 லட்சம் கை காசு 3 லட்சம் லோன். மீதி அமெளன்ட் நல்ல SlP. " .



3 லட்சதுக்கு EMI 3800, மீதி 7, 200 SIP 10 வருஷம் , loan 4.56 +2.06 மொத்தம் காருக்கு 6.56 லட்சம் . 10 வருசம் கார் வேல்யூ 2.50 சோ 6.56 - 2.50 = 4.06 லாஸ் . 7200 ரூ SIP 6%  CAGR 10 வருஷம் நெட் Value 11.88 லட்சம் .

கார் வேல்யூ பணவீக்கம் சுமார் 9.95 -2.50 (கார் வேல்யூ ) = 7.45 லட்சம் லாஸ் + SIP 11.88 = 4.43 லட்சம் பிராபிட் .


ok எனக்கு கார் தேவை இல்லை , 2 லட்சம் லட்சம் + 10000 மாத SIP , 10 வருஷம், 6% CAGR = 19.19 லட்சம் . இன் புலேசன் பாய்ண்ட்.

என்ன தல சுத்துதா , ஆமா இது ஒரு சவாலன சிக்கலான முடிவு தான். நாம கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு உலகில், இன்வெஸ்ட் மெண்ட் அட்டடிங்கிறது சாமானியமான விக்ஷயமும் இல்ல.

" சவால்கள் தான் நம்முடைய சக்தியை நமக்கே புரிய வைக்கின்றன, சந்தர்பங்கள் மகுடங்களில் மணியாய் ஜொலிக்கின்றன" .

வீரனின் கத்தி எப்போதும் உறைகளில் உறங்குவது இல்லை - கத்தியை தீட்டுவோம்.

Saturday, 27 May 2017

20 ரூபாய் இன்வெஸ்ட்மண்ட் - 2, புதுசா ஏதாவது செய்வோம்



" மோதி விடாதே நண்பா, மொத்தமும் கடன் " - சிந்திக்க வைத்த ஒரு ஆட்டோவின் பின்பக்க வசனம்.
4 மாதத்திற்கு முன்பு இந்த பக்கத்தில் எழுதிய 20 ரூபாய் இன்வெஸ்ட்மென்ட் டீ கடையில் இருந்து இப்போ ஆட்டோ.
ஆனா ஒரு சின்ன மாற்றம் அது, நஷ்டத்தில் இருந்து லாபமா மாத்தனும்.  இன்னும் தெளிவா சின்னனதில் இருந்து பெரிசா ... 


அந்த சிறுமிக்கு பத்து வயசு இருக்கும் கஷ்டபட்டு அடம் பிடித்து மூனு ரூபாவை அப்பாவிடம் வாங்கியது. அதுக்கு கோசா பழம் ( water melon ) சாப்பிடிடனும்னு ரொம்ப நாள் ஆச, அப்பா குடுத்த அந்த ரூபாவ எடுத்துகிட்டு கடைகாரரிடம் ஓடி அண்ணா ஒரு பழம், அந்த கடைகாரர் அந்த பணத்தை பார்த்து " இதுக்கு எல்லாம் பழம் கொடுக்க முடியாது". அப்ப இதுக்கு என்ன தான் கிடைக்கும்." அங்க தெரியுது பார் பிஞ்சு அதுதான் கிடைக்கும் ". அந்த சிறுமி அந்த காச அந்த கடைகாரரிடம் குடுத்து அந்த பிஞ்ச நானே எடுத்துகிறேன் ஆனா 2 மாசதுக்கு அப்புறம். 




அந்த சிறுமி ஏதோ தெரியாம சொன்னதா தெரியலாம். ஆனா சின்ன  குழந்தைகளுக்கு உள்ள சாமர்த்தியம் நமக்கு ...... அது ஒரு பெரிய கேள்வி குறி. எங்க இருந்து இன்வெஸ்ட்மென்ட ஆரம்பிக்கறது, எப்படி ஆரம்பிக்கறது, அப்படிங்கறதே மிகப் பெரிய கேள்வி.

20 ரூபாய் இன்வெஸ்ட்மெண்ட், ஆர்டிகள் பிறகு பங்கு சந்தை வளர்ச்சி மாதம் புதிய உச்சம். எக்கசக்கமான உள்நாட்டு முதலீடுகள் 500 பில்லியன் நம்ம முடிகிறதா? எண்ணற்ற வெளிநாட்டு முதலீடுகள் . 



நம்ப முடியாத உண்மை என்னன்னா O. 967% முதலீட்டாலர்கள் மட்டுமே முழுமையாக முதலீடு செய்கின்றனர். புதிதாக எக்கசக்கமான SIP முதலீடுகள் . கன்னிசமான புதிய மியூச்சுவல் பண்ட்கள். ஒரு காலத்தில் இன்சுரன்ஸ் மக்களை சென்றடைந்தது போல பியூச்சுவல் பண்ட் சென்றடையும் என்பது வெகு தூரத்தில் இல்லை. 



எடிசன் தன்னுடைய நிறுவனத்திற்கு ஆள் எடுக்க நேர்கானல் நடத்தி மூன்று முதல் ஐந்து பேர் வரை தேர்வு செய்வார், பின் அவர்களை இரவு விருந்திற்கு அழைத்து செல்வார், எடிசன் சாப்பிட்டு உப்பு குறைவாக இருக்கிறது என்பார். அந்த தேர்ந்தெடுக்கபட்டவர்கள் உடனடியாக உப்பை போட்டுக் கொண்டால், அவ்வளவுதான் அவன் ரிஜக்ட்.



இப்படி நிறைய பேர் தனக்கு என்ன வேண்டும், தன்னுடைய தேவை என்ன, எது சரியான நேரம், எவ்வளவு காலம் , என எதுவும் தெரியாமல் இன்வெஸ்ட் மெண்ட் ஆரம்பிப்பது. அவர் சொன்னார் இந்த பண்ட் செம ரிட்டர்ன் தரும், இவரு சொன்னார் இந்த பண்டு டபுள் ரிட்டர்ன். எடுத்துக்காட்டாக மார்கெட் புதிய உச்சத்தில் இருக்கும் போது லார்ஜ் கேப் முதலீடுகள் வெறும் 3 மாதத்தில் பெரிய ரிட்டர்ன் தரும் என்பது ஒரு பெரிய கேள்வி குறியே....

SIP ன் மிகச் சிறிய மாத முதலீடு 500 ரூ அதாவது நாளொன்றுக்கு 20 ரூபாக்கு குறைவு . 500 ரூபாக்கு என்னால் HDFC யோ Eicher யோ அல்லது Maruthi Suzuki யோ வாங்க முடியாது ஆனால் அந்த சேர்களில் முதலீடு செய்த மியூச்சுவல் பன்ட்களில் முதலீடு செய்யலாம் . அதற்கு தேவை நாம் நன்றாக பண்ட்களை தேர்வு செய்வது மட்டுமே.

நான் எப்போது முதலீடுகளை தொடங்குவது?

ஒரு ஞானியிடம் ஒரு சீடர் கேட்டார்.
" ஒருவன் எப்போது சாப்பிட வேண்டும்?"

ஞானியின் பதில்
" இருப்பவன் பசிக்கும் போது "
" இல்லாதவன் இருக்கும் போது " 


- இன்வெஸ்ட்மெண்ட் வளரும்.....

Monday, 15 May 2017

அடுத்த தலைமுறை வங்கிகள். புதுசா ஏதாவது செய்வோம் - 2

Next generation BANKs.


கடந்த சனி அன்று கிராமத்தை சேர்ந்த ஒரு இளம் தொழில் முனைவோரை சந்திக்க நேர்ந்தது. அவர் தன்னுடைய தொழில் பற்றி கூறி விட்டு. " தம்பி நீ என்ன பன்னுற ?" னு என்னை பார்த்து கேட்க " அண்ணே , நான் பேங்ல வேல செய்யுறேன்" சொல்ல, அவரும் ரொம்ப குஷி ஆகி ஏகத்துக்கும் கேள்வி கேட்க, பதில் சொல்ல நேர்ந்தது. பின் சற்று இடைவெளி விட்டு . " தம்பி, இந்த ஏடிஎம், ஆன்லைன் டிரான்ஸ்பெர், மொபைல் பேங்கிங் இது எல்லாம் என்னோட நிறைய நேரத்த மிச்சப்படுத்துது. நல்ல வேளையா நான் 5 வருஷத்துக்கு முன்னாடி பேங்க்ல ஒரு மணி நேரம் முதல் நாள் முழுவதும் நின்ன காலம் போச்சு. ஆனா, இன்னும் மாறாதது - இந்த லோனுக்கு தான் அலைய வேண்டியிருக்கு, அதுக்கு ஏதாவது பண்ணுங்கப்பா ".


இது ஏதோ இவர் மட்டும் தான் சொல்றார்னு நினைச்சா பெரும்பாலும் இதே நிலைதான். இன்றைய நிலையில் அனைவரின் கேள்வியும் அது தான்.


ரீசார்ஜ் பண்ண கடைக்கு போன காலம் போய் உள்ளங்கையில் ரீசார்ஜ் செய்யுறோம், நகைக்கடைக்கு தங்கம் வாங்க சிறுக , சிறுக பணம் சேர்த்த காலம் போய் பணம் எப்போ நம்ம கிட்ட இருக்கோ ( 1 ரூ க்கு கூட) அப்ப தங்கம் வாங்குற நிலை வரை வளர்ந்த இன்றைய உலகில் இன்னும் கடன் கொடுக்க ஒரே நிலைமை தான்... இதுக்கான மாற்று தேட வேண்டிய கட்டாய நிலைமையில் நாம். எப்படி என்று ஒரு பெரிய கேள்வி குறியோடு, மிக பிரம்மாண்டமான ஆச்சரீயத்தை நோக்கி நகர்வோம்.

ரோபாட் & ஆட்டோமேஷன்,

Nasscom ன் நேற்றைய அறிக்கை படி IT ன் ஆட்டோமேஷன் ஆல் 30% வேலை இழப்பு ஏற்படும் அதாவது 30% பேரின் வேலைகளை ஆட்டோமேஷன் மூலமாக அதிக செலவில்லாமல் செய்ய முடியும். ஏற்கனவே ஆட்டோ மொபைல், பார்மா போன்ற துறைகளின் மாற்றம் . மற்ற துறைகளையும் தூண்டியது என்று சொல்லலாம்.

நிதி சார்ந்த நிறுவனங்களில் இது சாத்தியமா?

ரோபாட் என்றால் மனித உருவில் உள்ள ஒன்று என்று எண்ணினால், உங்கள் எண்ணம் தவறு. அது ஒரு நிரல் ( Program). உங்களுக்கு எது வேண்டுமோ அதை தறுவது. அதாவது
அமேசான், பிளிப் கார்ட், பேடி எம் ல் ஏதாவது ஒன்றை தேடுவோம் பிறகு அப்படியே விட்டு விடுவோம் அல்லது மறந்து விடுவோம். ஆனால் அந்த நிரல் உங்களுக்கு அவ்வப்போது நினைவு கூறும் அல்லது அது சார்ந்தவர்றையே பின்னஞ்சல் செய்யும். நிதி சார்ந்த துறைகளின்  வளர்ச்ச்யில் ஒரு முக்கிய பங்கு இதற்கும் உண்டு. பாலிஸி பஜார், பண்டஸ் இந்தியா போன்றவை அப்படி வந்தவை. இவைகள் காப்பீடு மற்றும் மியூச்சுவல் பண்ட் களை ஆன்லைன் மூலம் மட்டுமே வழங்குகிறது. மிக குறைந்த அளவிலான உயர் மட்ட நிர்வாக குழு மட்டுமே போதுமானது. ஆங்கிலம் தெரிந்த 100க்கும் குறைவான ஊழியர்கள், மற்றும் BP0 பணியாளர்கள், லாப மடங்கு அதிகம்.

வங்கிகளில் எப்படி சாத்தியம்?
ஒரு வங்கியின் ஆப்(APP) கிட்டதட்ட அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய தாய், DTH, Post paid bill, EB போன்ற மாதந்திரம் பணம் செலுத்த நாம் உபயோகிக்கும் போது அது அதனை பதிவு செய்து அடுத்த மாதம் நினைவூட்டுவது, ஏதேனும் கடன், டெபாசிட் மற்றும் இதர திட்டங்கள் பற்றி இனையத்தில் தேடும் போது அந்த பதிந்து ஒப்பிட்டு காட்டுவது. இது ஒரு சாதாரண முறை

வாய்ஸ் ரெககனைசேஷன்.

" டிரான்ஸ்பர் மணி டீ தீபக் " என்றதும் வாய்ஸை பாஸ்வேடாக கொண்டு புரான்ஸ்பெர் செய்வது. RD, FD, Loan ஓபன் மற்றும் குலோஸ் செய்வது. வங்கி, ஃஆபர் மற்றும் ATM இருப்பிடம் காட்டுதல்.

பயோ மெட்ரிக், ரெட்டினா ஸ்கேனிங்,

இது கடன் கொடுப்பதற்கான மிக துல்லியமான ஒரு முறை .
அதாவது இன்று அனைவரிடமும் ஆதார் அட்டை உள்ளது. எப்படியும் ஏதாவது ஒரு Proof ஏதாவது ஒரு வங்கியுடன் இனைக்கப் பட்டிறுக்கும். மேலும் வருமான வரி துறை அல்லது EPF,NPS மூலம்  வேலை செய்யும் நிறுவனங்கள் இணைக்கப்படலாம்.கடன் வேண்டுவோர் தங்கள் கைரேகை மற்றும் ரெட்டினா ஸ்கேன் செய்து ஆதாருடன் இனைக்கப்படலாம். இதனால் கடன் வாங்கி ஏமாற்ற நினைப்பவர்கள் எண்ணிக்கை குறையும். பர்சனல் லோன் வேண்டுவோர் தங்கள் மொபைல் மூலமாக எங்கிருந்தும் பெற முடியும். 

GST மூலம் நிறுவனங்கள் மையப்படுத்தப்படும் அதனால் நிறுவனங்களின் வெளிபடை மற்றும் நம்பக தன்மை எளிதில் அறியப்படும். இதுவும் மையப்படுத்தி அரசின் மூலம் வங்கிகளுக்கு வழங்கப்படலாம், இதனால் நிறுவனங்களின் வரா கடன் நிலை மாறலாம்.

மேற்கண்ட செயல்பாட்டிற்கு வங்கியை நோக்கி மக்கள் வர தேவை இல்லை. அடமானம் மற்றும் இதர செயல்பாடுகளும் டிஜிட்டல் மையம் ஆகும் பட்சத்தில் வங்கி கிளைகளே நோக்கி நகருவது குறையும். இதனால் வங்கிகளின் செலவினம், வரா கடன் விகிதம், புரவீசன் குறையும்.
மக்கள் அதிகம் வராத பட்சத்தில் கிளை களுக்கு குறைந்த அளவு பணியாளர்களே போதும். அதற்கான செலவும் குறையும்.

தங்க நகை கடன் மற்றும் லாக்கர் .

இதற்காக மட்டும் வங்கிகளை அணுக வேண்டிய தேவை ஏற்படலாம். தங்க நகை களின் பியூரிட்டி யை அளவிடும் இயந்திரம் இன்றைய சந்தையில் கிடைக்கிறது. ஆனால் அது இன்னும் முழுமை படுத்தப்படும் பட்சத்தில் அதற்காக தனியாக ஒரு நபர் தேவை படாது. 

லாக்கர் கூட பயோ மெட்ரிக் முறையாகலாம்.

காசோலை ( Cheque), DD

இன்றைய நிலையில் DD க்கான தேவை குறைந்துள்ளது, இது வரும் காலங்களில் இல்லாமலும் போகலாம்.
காசோலை முறை டிஜிட்டல் செய்யப்படலாம். அதாவது அனுப்புபவர் - பெறுபவர், வங்கி App களில் பிரத்தியோகமாக Cheque Send & Receive இருக்கும் அனுப்புபவர் வருங்கால தேதி குறிப்பிட்டு, தொகையை டைப் செய்து அனுப்புவார் அதை பெறுபவர் பெற்றவுடன் அந்த தேதி வந்த உடன் ஒரு நினை ஊட்டல் அனுப்பி பின் கலெக்சன் ஆன் லைனிலேயே போடப்படும். இதனால் நிறைய நேரமும், வீண் விரயமும் தடுக்கப்படும்.

அடுத்த தலைமுறையில் வங்கியானது உள்ளங்கையில்.

2030 க்கு பிறகான ஒரு வங்கி சேவையானது.
வீடு டூ பேங்க் வரை வாய்ஸ் ரெக்.
" சென்ட் 10000 டூ அப்பா" - " சக்ஸஸ்".
" பே செக் வொர்த் 10000 on 20 | 12 | 2030 டூ சதிஸ்" - " செக் சென்ட் சக்சஸ் புல்லி ".
"வே டூ கனரா பேங்க்" - " கோ லெப்ட் பார் 10 mins ".
பேங்க்ல் தங்க நகை வைக்க

தங்க நகையை அந்த மெசினில் வைக்க அது அளவை மற்றொரு மெசினிற்கு உள்ளீடு அனுப்ப அது தொகையை தெரிவு செய்து காட்ட, அவர் தனது கை ரேகை மூலம் கோல்டு லோன்.

திடீர் தேவைக்கு பர்சனல் லோன் வாங்க - வாய்ஸ் ரெக்.
" ஓப்பன் பர்சனல் லோன்" - "யூ ஆர் எலிஜிபில் ஃபார் 500000 அன்ட் ரேட் ஆஃப் இன்டநெஸ்ட் 10.50%, வில் யூ கன்டினியு", " லெஸ்", " அமளன்ட் & மந்த் " , " ஒன் லேக், 10 மந்த் " - " அக்கௌன்ட் ஓபன்ட் அன்ட் அமெளண்ட் கிரெடிட் சக்சஸ்ஃபுல்லி ".


வரும் காலங்களில் வங்கி சேவை வெறும் நொடிகளில் நிறைவேற கூடிய தாய் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
புதுமை - வளரும்.

Sunday, 14 May 2017

புதுசா எதாவது செய்வோம் - 1

  ஐடியல் டூ இன்னோவேசன்

1968 வாயில ஈ போறது கூட தெரியாம ரெஃப்ரி அதிசயமா பாத்து பிரம்மிச்சி நிக்க வைச்ச அந்த சம்பவம்.
அதுவரை யாரும் செய்யாத ஒரு சாதனை அது மெக்ஸிகோ ஓலிம்பிக் உயரம் தாண்டுதல் ( high Jump) பிரிவு. அதுவரை நேராக வேகமாக ஓடி வந்து ஒரு காலை நன்கு ஊன்றி அந்த உயரம் தாண்டப்பட்டது. அடுத்து வந்த டிக் பூஸ் பெரி (Dick fousbary) USA, அரை வட்ட வடிவில் ஓடி வந்து இரண்டு கால்களையும் நன்கு ஊன்றி உடம்பை திருப்பி முதுகுபுறமாக 2.28 மீ தாண்டி பிரமிப்பை ஏற்படுத்தினார். அதன் பிறகு அதுவே இன்று வரை தொடர்கிறது . அந்த தாவலுக்கான பேரே அதன் பிறகு பூஸ்பெர்ரி ஃபிளாப் ( fousbary flop) என்றானது. புதுமையாக செய்தது மட்டும் அல்லாமல் அதற்கு முயன்று வெற்றி பெறுவது இன்னோவேசன் டூ சக்ஸஸ்.


ஆனால், அடுத்து ஒலிம்பிக்கில் அவர் தகுதி கூட பெறவில்லை. புதுமை புகுத்திய பிறகு அதனை தக்க வைப்பது கடினம்.  புதுமை எப்போதும் பிறறால் காப்பி அடிக்கப்படும். இது இன்வெஸ்ட்மண்ட் கும் பொறுந்தும்.

புதுமையை புகுத்துவது தலைமையின் பணி அதை செயல்படுத்தி வெற்றி காண்பதே நிறுவனங்களின் பணி.

அனைவருக்கும் தெரிந்த ஆகச் சிறந்த கம்பெனிகளில் முதலீடு செய்வதே சிறந்ததாக பட்டது. அது பணம் அதிகம் கொண்டவருக்கே சாத்தியப்பட்டது. பெஞ்சமின் கிராஹம் வேல்யு இன்வெஸ்ட்மெண்ட் க்கு பிறகு வெறும் 5000 $ ல் இருந்து உலகின் 2வது மிகப் பெரிய பணக்காரரான வாரன் ஃபபெட் - சேர் மார்க்கெட் முதலீடு மூலமும் பணம் பன்ன முடியும், என்று முதலீட்டின் புதிய வழியை கண்டார். 

ஐ போன் இல்லாதவரிடம் Apple கன்பெனின் கன்சிசமான பங்குகள், பயணம் செய்ய பிடிக்காதவரிடம் USA ன் சிறந்த விமான துறை முதலீடுகள். பாக் ஹையர் கேத் வே மூலம் 

என்னற்ற முதலீடுகள் – இதெல்லாம் பெஞ்சமின் கிராஹிம் வேல்யூ இன்வெஸ்ட்மெண்ட் பிறகு ஃபபெட் ன் மாற்றம்.


வால் மார்ட் ன் மிகப் பெரிய சாம்ராஜ்யம் முன், ஏன் வாடிக்கையாளர்கள் தனக்கு வேண்டியதை தேடிச் சென்று வாங்க வேண்டும் நாம் ஏன் அவர்களை தேடிச் சென்று கொடுக்க கூடாது? உருவானது அமேசான்.

US க் மட்டும் தான் சாத்தியமா நமக்கு? உருவானது பிளிப் கார்ட். இன்று அது மின்ரா, ஜபாங் ஐ கையகபடுத்தி ஸ்னாப் டீல் ஐ பேரம் பேசுகிறது.

சூப்பர் மார்கெட் இதுல ஏதாவது புதுமை? நாம கவனிச்சமோ இல்லையோ விலை குறைவான பொருள்கள் கீழ் ரேக்கிலேயும் அதிகமான பொருள்கள் மேல் ரேக்கிலேயும் மற்றவை நடுவிலும் அடுக்கப்படும். மிகப் பெரிய பிரான்ட்கள் எப்போதும் கண்ணில் படும்படி பார்த்துக் கொள்ளப் படும். சாக்லேட் போன்ற திண்பன்டங்கள், பொதுவாக குழந்தைகள் விரும்பக்கூடிய பொருள்கள் பில் போடும் இடம் அருகில் இருக்குமாறு வைக்கப்படும். மிகப் பெரிய மால்களில் உணவகம் மேல் தளத்திலோ அல்லது கடையின் ஊடே செல்லும் படியே இருக்கும் இது நிகல்கால மாற்றம் .

TVS 50, M80,TVS XL கள் பெண்களுக்கு அசௌகரியமாக பட, ஸ்கூட்டிகள் புதுமையின் அடையாளம் - இன்று 2 வீலர் விற்பனையில் முதல் இடம் இந்த ஸ்கூட்டி களுக்கே.

பொதிகை மட்டும் பார்த்தவர்களுக்கு சன் டிவி, சினிமா டூ சீரியல் டூ ரியாலிட்டி சோ. புதுமையின் இடையீடு.

ஆர்குட் - பழைய தலைமுறை பேஸ்புக் கூகுள் புதுமையை மெறுேகேற்ற தவறியது அதன் இடத்தை பேஸ் புக் ஆக்கரமித்தது ,மெஸேஜ் செய்ய பணம் கொடுத்த காலம் போய் வாட்ஸ் ஆப் உலகம் வரை. வாட்ஸ் அப் புதுமை ஏற்படுத்திய தாக்கம் அதனை பேஸ்புக் கையகபடுத்தியது.

இன்டர்நெட் சென்டர் டூ ஜீயோ,விசிறி டூ பேன், பானை டூ பிரிட்ஜ், விறகு அடுப்பு டூ கேஸ். மாட்டு வண்டி டூ ஏர் பஸ். விளக்கு டூ எல் இடி லைட். டெலிகிராம் டூ  ஸ்மார்ட் ஃபோன். புதுமையின் பாடைப்புகள்.
இரு சக்கர வாகனங்கள் மட்டுமே இருந்த காலங்களில் டொயோட்டா, ஃபோர்ட் டின் பிரமிப்பு . பெட்ரோல் , டீசல் கார்களின் மத்தியில் டெஸ்லா வின் புதுமை.
சீகைக்காய் மற்றும் சேம்பூ சேர்ந்த வித்தியாச கலவை சீகைக்காய் சேம்பூ. பாக்கெட் ஊறுகாய், அமுல் பால் முதல் அமுல் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் - புதுமையின் வித்தியாசம்.
இது மட்டும் அல்ல. இன்னும் எத்தனையோ உங்களை சுற்றிலும் பல முகங்களில் .

என்னதான் மெனு கார்ட் இருந்தாளும் அதை நாம அர மணி நேரம் புரட்டி பார்த்து, எப்பா .... புதுசா என்ன இருக்குனு சர்வர்கிட்ட கேட்டு அவரும் அதே புளித்து போன மெனுவ சொல்ல சரி ஒரு ரோஸ்ட் னு சொல்ற நாமதான், TV சோ ரூம் போய் புது மாடல் ஏதாவது காட்டுங்க னு சொல்லி ஒரு பேசிக் மாடல் பேக் பன்னுறோம். நம்ம பையன் ஏதாவது புதுசா செய்யனும்னு சின்ன வயசுல சொன்ன அப்பா, அந்த பையன் ஏதாவது செய்ற அப்போ, ஏன்டா வேண்டாத வேல னு சொல்லுற அப்பா முதல், டேய் ஏதாவது புதுசா பன்னுடா னு பையன் கிட்ட சொன்ன அடுத்த நிமிடம், வாடா பிராஜெக்ட் சென்டர் போலாம்னு சொல்லுற காலேஜ் ஃபிரண்ட் வரை .

ஃபிரண்ட் ஒருத்தன் டேய் படத்துக்கு போலாம் வாடா னு கம்பல் பன்னி முதல் நாள் முதல் சோ அடிச்சு பிடிச்சு போய். பெரிய ஆரவாரத்துக்கு நடுவுல கஷ்ட்டப்பட்டு படத்த பார்த்து வெளிய வந்தா, என்னடா படம் புதுசா எதுவுமே இல்ல..........
புதுமை - வளரும்.

Sunday, 29 January 2017

ரிஸ்க் எடுக்கறதலாம் ரஸ்க் சாப்பிடுற மாதிரி - சமோசா கடை முதல் மியூச்சுவல் ஃபன்ட் வரை



அந்த கடையில செம கூட்டம், இந்தியாவுல ஏதோ ஒரு மூளையில இருக்குற கடை. "சமோசா "அதுதான் கடையோட பேமஸ் டிஸ். கிட்டதட்ட 100 பேர் சூடான சமோசாவுக்கு வைய்ட்டிங். அப்படி என்ன பண்றாங்கனு பாத்தா சூடான கொதிக்கற எண்ணெய்ல அசால்டா கடைகாரர் கையை விட்டு சமோசா எடுக்குறார். "எப்படி சார்?" நிருபர் கேட்க , " 40 வருஷமா இங்கதான் இருக்கேன், எரு தடவை என் கைல எண்ணெய் பட்டுச்சு லைட்டா கட்டுச்சு, அப்புறம் பழகி போச்சு, அதுவே இப்போ ஆயில் உள்ள கைய விட்டு எடுக்குற அளவுக்கு போய்டுச்சு பழகிடுச்சி." " சரி சார் எவ்ளோ வருமானம் வரும் " – நிருபர். " இப்போ சப்பிடறவங்கள விட பாக்க வறவங்க அதிகம்- அட எப்படி பன்னுறார் பாறேன் அப்படினு பாராட்டிட்டு ஒரு 2 சமோசாவும் சாப்பிடுவாங்க. டெஸ்ட் பிடிச்சு போய் அப்புறம் ரெகுலர் கஸ்டமரா ஆகிடுவாங்க. இப்போ எனக்கு சுமார் 1000 பேருக்கு மேல ரெகுலர் கஸ்டமர். டெய்லி 10000 சமோசா சேல்ஸ் ஆகும். நானும் எங்க அப்பாவும் இருந்த கடை இப்போ 7 பேர் வேள செய்யுறோம்".  OMG யே மேரா இன்டியா அப்பிடினு அந்த புரோகிராம் முடியுது.



நாம இத வச்சு phd பண்ண வேனாம் ஆன இங்க கத்துகறத்துக்கு நிறைய இருக்கு அதுதான் " ரிஸ்க் " - அவர் வெறும் கரண்டி மட்டும் யூஸ் பண்ணி இருந்தா அவர் எப்போவே காணாம போய் இருக்க கூடும். ஆனா புதுசா அதுவும் விளையாட்டா செஞ்ச காரியம் இப்போ ரிட்டர்ன் மட்டும் பல மடங்கு . இவர் இங்க ரிஸ்க் எடுக்கல ஆனா இங்க அவரு பிராக்டிஸ் அப்புறம் இத எப்படி மார்க்கெட்டிங்கா மாத்துறதுனு யோசிக்க செய்தார். ரிஸ்க்க புரிஞ்ச்சுகிட்டு எடுக்குற முயற்சி அது தான் - வெற்றி .


மியூச்சுவல் ஃபண்ட் இதுவும் அப்படிதான். எக்கசக்கமான MF ல எந்த மாதிரியான ரஸ்க நாம செலக்ட் பண்ண போறோம். 3 வகையான ரிஸ்க்
 1) Low (மிதமான) 
2) Medium (நடுத்தரமான)
 3) High ( அதிக).
 அவ்ளோ தான் நாம அதோட வகையை அடுத்து வரும் ஆர்டிகல்ல பார்ப்போம் இப்போ ஈக்விட்டி (equity) அதாவது சேர்ல 90% முதல் 100% வரை இன்வெஸ்ட் பண்ணுற M F பத்தி பாப்போம்.

பொதுவா equity ல இன்வெஸ்ட் பன்னுற ஃபண்ட் high risk கேட்டகரி மட்டும் தான் கொஞ்சம் medium risk கூட இருக்கும்.
இப்போ நாம இந்த equity ல 3 டைப் 

1) லார்ஜ் கேப்(Large cap) - RS 200 bn to Rs 3500 bn
2) மிட் கேப் (MId Cap) - RS 50 bn to Rs 200 bn
3) ஸ்மால் கேப் (Small Cap) - Rs 50 bn க்கு கீழ்


Cap அப்படினா Market Capital = No of Shares X Market Price
அதாவது சேர் மார்கெட் ல லிஸ்ட் ஆகியிறுக்குற கம்பெனி யோட மொத்த சேர் அப்புறம் அதோட கரண்ட் மார்க்கெட் விலை.

infosys  வோட மொத்த சேர் சுமார் 230 கோடி தற்போதைய விலை 942 அப்போ Market Cap = 216406.64 கோடி .
இப்போ நாம Large Cap equity MF பத்தி மட்டும் பாக்க போறோம்.

இந்த type MF எல்லாம் Large Cap சேர்ல மட்டும் இன்வெஸ்ட் பன்னிறுப்பாங்க.

எக்ஸ்சாம்பில் கு ஒரு Large Cap MF .


NAV - Net Asset Value இது தான் MF உடைய வேல்யூ
SBI Blue Chip Fund (Growth ) இதோட NAV- 31.578 அதாவது இப்போ நாம 10000 ரூ இதுல இன்வெஸ்ட் பன்னுனா நமக்கு மொத்தம் 316.67 யூனிட் கிடைக்கும் ok இப்போ NAV 10 வருஷத்துக்கு அப்புறம் 40.00 அப்படினா (316.67 X 40) 12667. 04 ரூ இது ஏறலாம் இல்ல இறங்கலாம் ஆனா 316.67 யூனிட்டுக்கு மட்டும் கணக்கு போடபடும்.

ok இந்த SBI Blue ChiP 30.01.2012 ல NAV- 13.71 இப்போ 31.578 சுமார் இரண்டு மடங்குக்கு மேல.


எப்படி செலக்ட் பண்ணுறது?
முதல்ல அது Growth ( வர வருமானம் மீண்டும் அந்த MFல இன்வெஸ்ட் செய்யப்படும்)  ஆ இல்ல dividant ( லாபம் பிரித்து கொடுக்கப் படும்) பொது வா Growth NAV வேல்யூ அதிகமாக இருக்கும்.

அடுத்து Asset Size - சொத்து மதிப்பு இந்த MF சொத்து மதிப்பு சுமார் 7320 கோடி இந்த Asset தான் சேர்ல இன்வெஸ்ட் பன்னுவாங்க.

அடுத்து முதலீடு செய்யப்பட்ட சேர் மற்றும் % இதுல 6.49% HDFC Bank லயும் 3.30 % sun pharma 3. 17% RIL, 3. 16 ட & T, 3.03 M& M போன்ற சேர்ல இன்வெஸ்ட் பன்னிறுப்பங்க.
அடுத்து ரேங்க் மற்றும் ரிட்டர்ன் இத CRISIL MF ரேங்கிங் இல்லAMFl போன்ற வெப்சைட்ல தெரிஞ்சுகலாம்.

SIP அல்லது LUMP SUM?
நாம FD ல பணம் போடுற அப்ப பணம் மட்டும் தான் கணக்கு இங்க அது யூனிட் நான் ரிஸ்க் எடுக்க ரெடி இல்ல அப்படினா FD இல்ல நான் ரெடி அப்படினா Lump SUM ஆ MF .

அதே மாதிரி தான் SIP, FD க்கு பதிலா RD இன்னும் 20 வருஷத்துல பெரிய அளவுல சேர் மார்கெட் ஏறும் அப்படினா SIP .

SIP ல என்ன ஃபெனிபிட்?
இப்போ 2000 ரூ மாத மாதம் போடுறோம் எப்போ வேனும்னானும் close பன்னலாம் (open ended) இப்போ NAV -30. 2000/30  யூனிட் இப்போ அதே இன்னும் 2 மாசம் கழிச்சு மார்க்கெட் கொஞ்சம் சரியுது இப்போ NAV - 25 . 2000 / 25 Unit அதிகமான யூனிட் கிடைக்கும். 20 வருஷத்துக்கு அப்புறம் NAV - 60 அப்படினா அப்போ உங்க கிட்ட இருக்குற மொத்த பூனிட்டுக்கு  X 60 அவ்ளோதான்.

இந்த SBI Blue Chip (G)
SIP ஸ்டார்ட் டேட் 04/ 01/2010
Amt 2000 PM  ஆனது 27/ 01/ 2017 வரை .

மொத்தம் - 85 இன்ஸ்டால் மென்ட்
மொத்த தொகை - 170000
தற்போதைய வேல்யூ - 296904.04
ரிட்டர்ன் - 15. 51%

இது RD விட அதிகம் இன்புளேசன் 8% னா கூட நமக்கு 7% லாபம்.


லார்ஜ் கேப் சேர்கள் எல்லாம் பல வருடம் பீல்டுல இருந்த அனுபவம் உள்ளவங்க . அவங்க எல்லா ஸ்விட்சுவேசன் லையும் நல்ல முடிவு எடுக்கும் திறன் அனுபவத்தில் தெரியும் ex: TCS, WIPro, Infosys, Reliance, L& T போன்றவை இதுவும் கிட்டதட்ட சமோசா கடைகாரர் மாதிரி தான் ரிஸ்க்க ஈஸியா ஹன்டல் பன்றது ல.


நல்ல ஃபன்ட் செலக்சன் தான் முக்கியம்.