Next generation BANKs.
கடந்த சனி அன்று கிராமத்தை சேர்ந்த ஒரு இளம் தொழில் முனைவோரை சந்திக்க நேர்ந்தது. அவர் தன்னுடைய தொழில் பற்றி கூறி விட்டு. " தம்பி நீ என்ன பன்னுற ?" னு என்னை பார்த்து கேட்க " அண்ணே , நான் பேங்ல வேல செய்யுறேன்" சொல்ல, அவரும் ரொம்ப குஷி ஆகி ஏகத்துக்கும் கேள்வி கேட்க, பதில் சொல்ல நேர்ந்தது. பின் சற்று இடைவெளி விட்டு . " தம்பி, இந்த ஏடிஎம், ஆன்லைன் டிரான்ஸ்பெர், மொபைல் பேங்கிங் இது எல்லாம் என்னோட நிறைய நேரத்த மிச்சப்படுத்துது. நல்ல வேளையா நான் 5 வருஷத்துக்கு முன்னாடி பேங்க்ல ஒரு மணி நேரம் முதல் நாள் முழுவதும் நின்ன காலம் போச்சு. ஆனா, இன்னும் மாறாதது - இந்த லோனுக்கு தான் அலைய வேண்டியிருக்கு, அதுக்கு ஏதாவது பண்ணுங்கப்பா ".
இது ஏதோ இவர் மட்டும் தான் சொல்றார்னு நினைச்சா பெரும்பாலும் இதே நிலைதான். இன்றைய நிலையில் அனைவரின் கேள்வியும் அது தான்.
ரீசார்ஜ் பண்ண கடைக்கு போன காலம் போய் உள்ளங்கையில் ரீசார்ஜ் செய்யுறோம், நகைக்கடைக்கு தங்கம் வாங்க சிறுக , சிறுக பணம் சேர்த்த காலம் போய் பணம் எப்போ நம்ம கிட்ட இருக்கோ ( 1 ரூ க்கு கூட) அப்ப தங்கம் வாங்குற நிலை வரை வளர்ந்த இன்றைய உலகில் இன்னும் கடன் கொடுக்க ஒரே நிலைமை தான்... இதுக்கான மாற்று தேட வேண்டிய கட்டாய நிலைமையில் நாம். எப்படி என்று ஒரு பெரிய கேள்வி குறியோடு, மிக பிரம்மாண்டமான ஆச்சரீயத்தை நோக்கி நகர்வோம்.
ரோபாட் & ஆட்டோமேஷன்,
Nasscom ன் நேற்றைய அறிக்கை படி IT ன் ஆட்டோமேஷன் ஆல் 30% வேலை இழப்பு ஏற்படும் அதாவது 30% பேரின் வேலைகளை ஆட்டோமேஷன் மூலமாக அதிக செலவில்லாமல் செய்ய முடியும். ஏற்கனவே ஆட்டோ மொபைல், பார்மா போன்ற துறைகளின் மாற்றம் . மற்ற துறைகளையும் தூண்டியது என்று சொல்லலாம்.
நிதி சார்ந்த நிறுவனங்களில் இது சாத்தியமா?
ரோபாட் என்றால் மனித உருவில் உள்ள ஒன்று என்று எண்ணினால், உங்கள் எண்ணம் தவறு. அது ஒரு நிரல் ( Program). உங்களுக்கு எது வேண்டுமோ அதை தறுவது. அதாவது
அமேசான், பிளிப் கார்ட், பேடி எம் ல் ஏதாவது ஒன்றை தேடுவோம் பிறகு அப்படியே விட்டு விடுவோம் அல்லது மறந்து விடுவோம். ஆனால் அந்த நிரல் உங்களுக்கு அவ்வப்போது நினைவு கூறும் அல்லது அது சார்ந்தவர்றையே பின்னஞ்சல் செய்யும். நிதி சார்ந்த துறைகளின் வளர்ச்ச்யில் ஒரு முக்கிய பங்கு இதற்கும் உண்டு. பாலிஸி பஜார், பண்டஸ் இந்தியா போன்றவை அப்படி வந்தவை. இவைகள் காப்பீடு மற்றும் மியூச்சுவல் பண்ட் களை ஆன்லைன் மூலம் மட்டுமே வழங்குகிறது. மிக குறைந்த அளவிலான உயர் மட்ட நிர்வாக குழு மட்டுமே போதுமானது. ஆங்கிலம் தெரிந்த 100க்கும் குறைவான ஊழியர்கள், மற்றும் BP0 பணியாளர்கள், லாப மடங்கு அதிகம்.

வங்கிகளில் எப்படி சாத்தியம்?
ஒரு வங்கியின் ஆப்(APP) கிட்டதட்ட அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய தாய், DTH, Post paid bill, EB போன்ற மாதந்திரம் பணம் செலுத்த நாம் உபயோகிக்கும் போது அது அதனை பதிவு செய்து அடுத்த மாதம் நினைவூட்டுவது, ஏதேனும் கடன், டெபாசிட் மற்றும் இதர திட்டங்கள் பற்றி இனையத்தில் தேடும் போது அந்த பதிந்து ஒப்பிட்டு காட்டுவது. இது ஒரு சாதாரண முறை

வாய்ஸ் ரெககனைசேஷன்.
" டிரான்ஸ்பர் மணி டீ தீபக் " என்றதும் வாய்ஸை பாஸ்வேடாக கொண்டு புரான்ஸ்பெர் செய்வது. RD, FD, Loan ஓபன் மற்றும் குலோஸ் செய்வது. வங்கி, ஃஆபர் மற்றும் ATM இருப்பிடம் காட்டுதல்.
பயோ மெட்ரிக், ரெட்டினா ஸ்கேனிங்,
இது கடன் கொடுப்பதற்கான மிக துல்லியமான ஒரு முறை .
அதாவது இன்று அனைவரிடமும் ஆதார் அட்டை உள்ளது. எப்படியும் ஏதாவது ஒரு Proof ஏதாவது ஒரு வங்கியுடன் இனைக்கப் பட்டிறுக்கும். மேலும் வருமான வரி துறை அல்லது EPF,NPS மூலம் வேலை செய்யும் நிறுவனங்கள் இணைக்கப்படலாம்.கடன் வேண்டுவோர் தங்கள் கைரேகை மற்றும் ரெட்டினா ஸ்கேன் செய்து ஆதாருடன் இனைக்கப்படலாம். இதனால் கடன் வாங்கி ஏமாற்ற நினைப்பவர்கள் எண்ணிக்கை குறையும். பர்சனல் லோன் வேண்டுவோர் தங்கள் மொபைல் மூலமாக எங்கிருந்தும் பெற முடியும்.

GST மூலம் நிறுவனங்கள் மையப்படுத்தப்படும் அதனால் நிறுவனங்களின் வெளிபடை மற்றும் நம்பக தன்மை எளிதில் அறியப்படும். இதுவும் மையப்படுத்தி அரசின் மூலம் வங்கிகளுக்கு வழங்கப்படலாம், இதனால் நிறுவனங்களின் வரா கடன் நிலை மாறலாம்.
மேற்கண்ட செயல்பாட்டிற்கு வங்கியை நோக்கி மக்கள் வர தேவை இல்லை. அடமானம் மற்றும் இதர செயல்பாடுகளும் டிஜிட்டல் மையம் ஆகும் பட்சத்தில் வங்கி கிளைகளே நோக்கி நகருவது குறையும். இதனால் வங்கிகளின் செலவினம், வரா கடன் விகிதம், புரவீசன் குறையும்.
மக்கள் அதிகம் வராத பட்சத்தில் கிளை களுக்கு குறைந்த அளவு பணியாளர்களே போதும். அதற்கான செலவும் குறையும்.
தங்க நகை கடன் மற்றும் லாக்கர் .
இதற்காக மட்டும் வங்கிகளை அணுக வேண்டிய தேவை ஏற்படலாம். தங்க நகை களின் பியூரிட்டி யை அளவிடும் இயந்திரம் இன்றைய சந்தையில் கிடைக்கிறது. ஆனால் அது இன்னும் முழுமை படுத்தப்படும் பட்சத்தில் அதற்காக தனியாக ஒரு நபர் தேவை படாது.
லாக்கர் கூட பயோ மெட்ரிக் முறையாகலாம்.
காசோலை ( Cheque), DD
இன்றைய நிலையில் DD க்கான தேவை குறைந்துள்ளது, இது வரும் காலங்களில் இல்லாமலும் போகலாம்.
காசோலை முறை டிஜிட்டல் செய்யப்படலாம். அதாவது அனுப்புபவர் - பெறுபவர், வங்கி App களில் பிரத்தியோகமாக Cheque Send & Receive இருக்கும் அனுப்புபவர் வருங்கால தேதி குறிப்பிட்டு, தொகையை டைப் செய்து அனுப்புவார் அதை பெறுபவர் பெற்றவுடன் அந்த தேதி வந்த உடன் ஒரு நினை ஊட்டல் அனுப்பி பின் கலெக்சன் ஆன் லைனிலேயே போடப்படும். இதனால் நிறைய நேரமும், வீண் விரயமும் தடுக்கப்படும்.
அடுத்த தலைமுறையில் வங்கியானது உள்ளங்கையில்.
2030 க்கு பிறகான ஒரு வங்கி சேவையானது.
வீடு டூ பேங்க் வரை வாய்ஸ் ரெக்.
வீடு டூ பேங்க் வரை வாய்ஸ் ரெக்.
" சென்ட் 10000 டூ அப்பா" - " சக்ஸஸ்".
" பே செக் வொர்த் 10000 on 20 | 12 | 2030 டூ சதிஸ்" - " செக் சென்ட் சக்சஸ் புல்லி ".
"வே டூ கனரா பேங்க்" - " கோ லெப்ட் பார் 10 mins ".
" பே செக் வொர்த் 10000 on 20 | 12 | 2030 டூ சதிஸ்" - " செக் சென்ட் சக்சஸ் புல்லி ".
"வே டூ கனரா பேங்க்" - " கோ லெப்ட் பார் 10 mins ".
பேங்க்ல் தங்க நகை வைக்க
தங்க நகையை அந்த மெசினில் வைக்க அது அளவை மற்றொரு மெசினிற்கு உள்ளீடு அனுப்ப அது தொகையை தெரிவு செய்து காட்ட, அவர் தனது கை ரேகை மூலம் கோல்டு லோன்.
திடீர் தேவைக்கு பர்சனல் லோன் வாங்க - வாய்ஸ் ரெக்.
" ஓப்பன் பர்சனல் லோன்" - "யூ ஆர் எலிஜிபில் ஃபார் 500000 அன்ட் ரேட் ஆஃப் இன்டநெஸ்ட் 10.50%, வில் யூ கன்டினியு", " லெஸ்", " அமளன்ட் & மந்த் " , " ஒன் லேக், 10 மந்த் " - " அக்கௌன்ட் ஓபன்ட் அன்ட் அமெளண்ட் கிரெடிட் சக்சஸ்ஃபுல்லி ".
வரும் காலங்களில் வங்கி சேவை வெறும் நொடிகளில் நிறைவேற கூடிய தாய் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
புதுமை - வளரும்.
kekka nalla than iruku.. papom
ReplyDeleteCorrect, Loan process should be simplified;at the same time it should help bank to verify borrower's identity. And also remember you mentioned about Nascom's report about automation in IT. Now it's time for students/govt to do innovation to get more jobs.
ReplyDeleteI read your last 2 articles. எளிய தமிழில் அறிவார்ந்த விசயங்கள். இது போன்ற நல்ல article தொடர வாழ்த்துக்கள்
ReplyDelete