Saturday, 27 May 2017

20 ரூபாய் இன்வெஸ்ட்மண்ட் - 2, புதுசா ஏதாவது செய்வோம்



" மோதி விடாதே நண்பா, மொத்தமும் கடன் " - சிந்திக்க வைத்த ஒரு ஆட்டோவின் பின்பக்க வசனம்.
4 மாதத்திற்கு முன்பு இந்த பக்கத்தில் எழுதிய 20 ரூபாய் இன்வெஸ்ட்மென்ட் டீ கடையில் இருந்து இப்போ ஆட்டோ.
ஆனா ஒரு சின்ன மாற்றம் அது, நஷ்டத்தில் இருந்து லாபமா மாத்தனும்.  இன்னும் தெளிவா சின்னனதில் இருந்து பெரிசா ... 


அந்த சிறுமிக்கு பத்து வயசு இருக்கும் கஷ்டபட்டு அடம் பிடித்து மூனு ரூபாவை அப்பாவிடம் வாங்கியது. அதுக்கு கோசா பழம் ( water melon ) சாப்பிடிடனும்னு ரொம்ப நாள் ஆச, அப்பா குடுத்த அந்த ரூபாவ எடுத்துகிட்டு கடைகாரரிடம் ஓடி அண்ணா ஒரு பழம், அந்த கடைகாரர் அந்த பணத்தை பார்த்து " இதுக்கு எல்லாம் பழம் கொடுக்க முடியாது". அப்ப இதுக்கு என்ன தான் கிடைக்கும்." அங்க தெரியுது பார் பிஞ்சு அதுதான் கிடைக்கும் ". அந்த சிறுமி அந்த காச அந்த கடைகாரரிடம் குடுத்து அந்த பிஞ்ச நானே எடுத்துகிறேன் ஆனா 2 மாசதுக்கு அப்புறம். 




அந்த சிறுமி ஏதோ தெரியாம சொன்னதா தெரியலாம். ஆனா சின்ன  குழந்தைகளுக்கு உள்ள சாமர்த்தியம் நமக்கு ...... அது ஒரு பெரிய கேள்வி குறி. எங்க இருந்து இன்வெஸ்ட்மென்ட ஆரம்பிக்கறது, எப்படி ஆரம்பிக்கறது, அப்படிங்கறதே மிகப் பெரிய கேள்வி.

20 ரூபாய் இன்வெஸ்ட்மெண்ட், ஆர்டிகள் பிறகு பங்கு சந்தை வளர்ச்சி மாதம் புதிய உச்சம். எக்கசக்கமான உள்நாட்டு முதலீடுகள் 500 பில்லியன் நம்ம முடிகிறதா? எண்ணற்ற வெளிநாட்டு முதலீடுகள் . 



நம்ப முடியாத உண்மை என்னன்னா O. 967% முதலீட்டாலர்கள் மட்டுமே முழுமையாக முதலீடு செய்கின்றனர். புதிதாக எக்கசக்கமான SIP முதலீடுகள் . கன்னிசமான புதிய மியூச்சுவல் பண்ட்கள். ஒரு காலத்தில் இன்சுரன்ஸ் மக்களை சென்றடைந்தது போல பியூச்சுவல் பண்ட் சென்றடையும் என்பது வெகு தூரத்தில் இல்லை. 



எடிசன் தன்னுடைய நிறுவனத்திற்கு ஆள் எடுக்க நேர்கானல் நடத்தி மூன்று முதல் ஐந்து பேர் வரை தேர்வு செய்வார், பின் அவர்களை இரவு விருந்திற்கு அழைத்து செல்வார், எடிசன் சாப்பிட்டு உப்பு குறைவாக இருக்கிறது என்பார். அந்த தேர்ந்தெடுக்கபட்டவர்கள் உடனடியாக உப்பை போட்டுக் கொண்டால், அவ்வளவுதான் அவன் ரிஜக்ட்.



இப்படி நிறைய பேர் தனக்கு என்ன வேண்டும், தன்னுடைய தேவை என்ன, எது சரியான நேரம், எவ்வளவு காலம் , என எதுவும் தெரியாமல் இன்வெஸ்ட் மெண்ட் ஆரம்பிப்பது. அவர் சொன்னார் இந்த பண்ட் செம ரிட்டர்ன் தரும், இவரு சொன்னார் இந்த பண்டு டபுள் ரிட்டர்ன். எடுத்துக்காட்டாக மார்கெட் புதிய உச்சத்தில் இருக்கும் போது லார்ஜ் கேப் முதலீடுகள் வெறும் 3 மாதத்தில் பெரிய ரிட்டர்ன் தரும் என்பது ஒரு பெரிய கேள்வி குறியே....

SIP ன் மிகச் சிறிய மாத முதலீடு 500 ரூ அதாவது நாளொன்றுக்கு 20 ரூபாக்கு குறைவு . 500 ரூபாக்கு என்னால் HDFC யோ Eicher யோ அல்லது Maruthi Suzuki யோ வாங்க முடியாது ஆனால் அந்த சேர்களில் முதலீடு செய்த மியூச்சுவல் பன்ட்களில் முதலீடு செய்யலாம் . அதற்கு தேவை நாம் நன்றாக பண்ட்களை தேர்வு செய்வது மட்டுமே.

நான் எப்போது முதலீடுகளை தொடங்குவது?

ஒரு ஞானியிடம் ஒரு சீடர் கேட்டார்.
" ஒருவன் எப்போது சாப்பிட வேண்டும்?"

ஞானியின் பதில்
" இருப்பவன் பசிக்கும் போது "
" இல்லாதவன் இருக்கும் போது " 


- இன்வெஸ்ட்மெண்ட் வளரும்.....

Monday, 15 May 2017

அடுத்த தலைமுறை வங்கிகள். புதுசா ஏதாவது செய்வோம் - 2

Next generation BANKs.


கடந்த சனி அன்று கிராமத்தை சேர்ந்த ஒரு இளம் தொழில் முனைவோரை சந்திக்க நேர்ந்தது. அவர் தன்னுடைய தொழில் பற்றி கூறி விட்டு. " தம்பி நீ என்ன பன்னுற ?" னு என்னை பார்த்து கேட்க " அண்ணே , நான் பேங்ல வேல செய்யுறேன்" சொல்ல, அவரும் ரொம்ப குஷி ஆகி ஏகத்துக்கும் கேள்வி கேட்க, பதில் சொல்ல நேர்ந்தது. பின் சற்று இடைவெளி விட்டு . " தம்பி, இந்த ஏடிஎம், ஆன்லைன் டிரான்ஸ்பெர், மொபைல் பேங்கிங் இது எல்லாம் என்னோட நிறைய நேரத்த மிச்சப்படுத்துது. நல்ல வேளையா நான் 5 வருஷத்துக்கு முன்னாடி பேங்க்ல ஒரு மணி நேரம் முதல் நாள் முழுவதும் நின்ன காலம் போச்சு. ஆனா, இன்னும் மாறாதது - இந்த லோனுக்கு தான் அலைய வேண்டியிருக்கு, அதுக்கு ஏதாவது பண்ணுங்கப்பா ".


இது ஏதோ இவர் மட்டும் தான் சொல்றார்னு நினைச்சா பெரும்பாலும் இதே நிலைதான். இன்றைய நிலையில் அனைவரின் கேள்வியும் அது தான்.


ரீசார்ஜ் பண்ண கடைக்கு போன காலம் போய் உள்ளங்கையில் ரீசார்ஜ் செய்யுறோம், நகைக்கடைக்கு தங்கம் வாங்க சிறுக , சிறுக பணம் சேர்த்த காலம் போய் பணம் எப்போ நம்ம கிட்ட இருக்கோ ( 1 ரூ க்கு கூட) அப்ப தங்கம் வாங்குற நிலை வரை வளர்ந்த இன்றைய உலகில் இன்னும் கடன் கொடுக்க ஒரே நிலைமை தான்... இதுக்கான மாற்று தேட வேண்டிய கட்டாய நிலைமையில் நாம். எப்படி என்று ஒரு பெரிய கேள்வி குறியோடு, மிக பிரம்மாண்டமான ஆச்சரீயத்தை நோக்கி நகர்வோம்.

ரோபாட் & ஆட்டோமேஷன்,

Nasscom ன் நேற்றைய அறிக்கை படி IT ன் ஆட்டோமேஷன் ஆல் 30% வேலை இழப்பு ஏற்படும் அதாவது 30% பேரின் வேலைகளை ஆட்டோமேஷன் மூலமாக அதிக செலவில்லாமல் செய்ய முடியும். ஏற்கனவே ஆட்டோ மொபைல், பார்மா போன்ற துறைகளின் மாற்றம் . மற்ற துறைகளையும் தூண்டியது என்று சொல்லலாம்.

நிதி சார்ந்த நிறுவனங்களில் இது சாத்தியமா?

ரோபாட் என்றால் மனித உருவில் உள்ள ஒன்று என்று எண்ணினால், உங்கள் எண்ணம் தவறு. அது ஒரு நிரல் ( Program). உங்களுக்கு எது வேண்டுமோ அதை தறுவது. அதாவது
அமேசான், பிளிப் கார்ட், பேடி எம் ல் ஏதாவது ஒன்றை தேடுவோம் பிறகு அப்படியே விட்டு விடுவோம் அல்லது மறந்து விடுவோம். ஆனால் அந்த நிரல் உங்களுக்கு அவ்வப்போது நினைவு கூறும் அல்லது அது சார்ந்தவர்றையே பின்னஞ்சல் செய்யும். நிதி சார்ந்த துறைகளின்  வளர்ச்ச்யில் ஒரு முக்கிய பங்கு இதற்கும் உண்டு. பாலிஸி பஜார், பண்டஸ் இந்தியா போன்றவை அப்படி வந்தவை. இவைகள் காப்பீடு மற்றும் மியூச்சுவல் பண்ட் களை ஆன்லைன் மூலம் மட்டுமே வழங்குகிறது. மிக குறைந்த அளவிலான உயர் மட்ட நிர்வாக குழு மட்டுமே போதுமானது. ஆங்கிலம் தெரிந்த 100க்கும் குறைவான ஊழியர்கள், மற்றும் BP0 பணியாளர்கள், லாப மடங்கு அதிகம்.

வங்கிகளில் எப்படி சாத்தியம்?
ஒரு வங்கியின் ஆப்(APP) கிட்டதட்ட அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய தாய், DTH, Post paid bill, EB போன்ற மாதந்திரம் பணம் செலுத்த நாம் உபயோகிக்கும் போது அது அதனை பதிவு செய்து அடுத்த மாதம் நினைவூட்டுவது, ஏதேனும் கடன், டெபாசிட் மற்றும் இதர திட்டங்கள் பற்றி இனையத்தில் தேடும் போது அந்த பதிந்து ஒப்பிட்டு காட்டுவது. இது ஒரு சாதாரண முறை

வாய்ஸ் ரெககனைசேஷன்.

" டிரான்ஸ்பர் மணி டீ தீபக் " என்றதும் வாய்ஸை பாஸ்வேடாக கொண்டு புரான்ஸ்பெர் செய்வது. RD, FD, Loan ஓபன் மற்றும் குலோஸ் செய்வது. வங்கி, ஃஆபர் மற்றும் ATM இருப்பிடம் காட்டுதல்.

பயோ மெட்ரிக், ரெட்டினா ஸ்கேனிங்,

இது கடன் கொடுப்பதற்கான மிக துல்லியமான ஒரு முறை .
அதாவது இன்று அனைவரிடமும் ஆதார் அட்டை உள்ளது. எப்படியும் ஏதாவது ஒரு Proof ஏதாவது ஒரு வங்கியுடன் இனைக்கப் பட்டிறுக்கும். மேலும் வருமான வரி துறை அல்லது EPF,NPS மூலம்  வேலை செய்யும் நிறுவனங்கள் இணைக்கப்படலாம்.கடன் வேண்டுவோர் தங்கள் கைரேகை மற்றும் ரெட்டினா ஸ்கேன் செய்து ஆதாருடன் இனைக்கப்படலாம். இதனால் கடன் வாங்கி ஏமாற்ற நினைப்பவர்கள் எண்ணிக்கை குறையும். பர்சனல் லோன் வேண்டுவோர் தங்கள் மொபைல் மூலமாக எங்கிருந்தும் பெற முடியும். 

GST மூலம் நிறுவனங்கள் மையப்படுத்தப்படும் அதனால் நிறுவனங்களின் வெளிபடை மற்றும் நம்பக தன்மை எளிதில் அறியப்படும். இதுவும் மையப்படுத்தி அரசின் மூலம் வங்கிகளுக்கு வழங்கப்படலாம், இதனால் நிறுவனங்களின் வரா கடன் நிலை மாறலாம்.

மேற்கண்ட செயல்பாட்டிற்கு வங்கியை நோக்கி மக்கள் வர தேவை இல்லை. அடமானம் மற்றும் இதர செயல்பாடுகளும் டிஜிட்டல் மையம் ஆகும் பட்சத்தில் வங்கி கிளைகளே நோக்கி நகருவது குறையும். இதனால் வங்கிகளின் செலவினம், வரா கடன் விகிதம், புரவீசன் குறையும்.
மக்கள் அதிகம் வராத பட்சத்தில் கிளை களுக்கு குறைந்த அளவு பணியாளர்களே போதும். அதற்கான செலவும் குறையும்.

தங்க நகை கடன் மற்றும் லாக்கர் .

இதற்காக மட்டும் வங்கிகளை அணுக வேண்டிய தேவை ஏற்படலாம். தங்க நகை களின் பியூரிட்டி யை அளவிடும் இயந்திரம் இன்றைய சந்தையில் கிடைக்கிறது. ஆனால் அது இன்னும் முழுமை படுத்தப்படும் பட்சத்தில் அதற்காக தனியாக ஒரு நபர் தேவை படாது. 

லாக்கர் கூட பயோ மெட்ரிக் முறையாகலாம்.

காசோலை ( Cheque), DD

இன்றைய நிலையில் DD க்கான தேவை குறைந்துள்ளது, இது வரும் காலங்களில் இல்லாமலும் போகலாம்.
காசோலை முறை டிஜிட்டல் செய்யப்படலாம். அதாவது அனுப்புபவர் - பெறுபவர், வங்கி App களில் பிரத்தியோகமாக Cheque Send & Receive இருக்கும் அனுப்புபவர் வருங்கால தேதி குறிப்பிட்டு, தொகையை டைப் செய்து அனுப்புவார் அதை பெறுபவர் பெற்றவுடன் அந்த தேதி வந்த உடன் ஒரு நினை ஊட்டல் அனுப்பி பின் கலெக்சன் ஆன் லைனிலேயே போடப்படும். இதனால் நிறைய நேரமும், வீண் விரயமும் தடுக்கப்படும்.

அடுத்த தலைமுறையில் வங்கியானது உள்ளங்கையில்.

2030 க்கு பிறகான ஒரு வங்கி சேவையானது.
வீடு டூ பேங்க் வரை வாய்ஸ் ரெக்.
" சென்ட் 10000 டூ அப்பா" - " சக்ஸஸ்".
" பே செக் வொர்த் 10000 on 20 | 12 | 2030 டூ சதிஸ்" - " செக் சென்ட் சக்சஸ் புல்லி ".
"வே டூ கனரா பேங்க்" - " கோ லெப்ட் பார் 10 mins ".
பேங்க்ல் தங்க நகை வைக்க

தங்க நகையை அந்த மெசினில் வைக்க அது அளவை மற்றொரு மெசினிற்கு உள்ளீடு அனுப்ப அது தொகையை தெரிவு செய்து காட்ட, அவர் தனது கை ரேகை மூலம் கோல்டு லோன்.

திடீர் தேவைக்கு பர்சனல் லோன் வாங்க - வாய்ஸ் ரெக்.
" ஓப்பன் பர்சனல் லோன்" - "யூ ஆர் எலிஜிபில் ஃபார் 500000 அன்ட் ரேட் ஆஃப் இன்டநெஸ்ட் 10.50%, வில் யூ கன்டினியு", " லெஸ்", " அமளன்ட் & மந்த் " , " ஒன் லேக், 10 மந்த் " - " அக்கௌன்ட் ஓபன்ட் அன்ட் அமெளண்ட் கிரெடிட் சக்சஸ்ஃபுல்லி ".


வரும் காலங்களில் வங்கி சேவை வெறும் நொடிகளில் நிறைவேற கூடிய தாய் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
புதுமை - வளரும்.

Sunday, 14 May 2017

புதுசா எதாவது செய்வோம் - 1

  ஐடியல் டூ இன்னோவேசன்

1968 வாயில ஈ போறது கூட தெரியாம ரெஃப்ரி அதிசயமா பாத்து பிரம்மிச்சி நிக்க வைச்ச அந்த சம்பவம்.
அதுவரை யாரும் செய்யாத ஒரு சாதனை அது மெக்ஸிகோ ஓலிம்பிக் உயரம் தாண்டுதல் ( high Jump) பிரிவு. அதுவரை நேராக வேகமாக ஓடி வந்து ஒரு காலை நன்கு ஊன்றி அந்த உயரம் தாண்டப்பட்டது. அடுத்து வந்த டிக் பூஸ் பெரி (Dick fousbary) USA, அரை வட்ட வடிவில் ஓடி வந்து இரண்டு கால்களையும் நன்கு ஊன்றி உடம்பை திருப்பி முதுகுபுறமாக 2.28 மீ தாண்டி பிரமிப்பை ஏற்படுத்தினார். அதன் பிறகு அதுவே இன்று வரை தொடர்கிறது . அந்த தாவலுக்கான பேரே அதன் பிறகு பூஸ்பெர்ரி ஃபிளாப் ( fousbary flop) என்றானது. புதுமையாக செய்தது மட்டும் அல்லாமல் அதற்கு முயன்று வெற்றி பெறுவது இன்னோவேசன் டூ சக்ஸஸ்.


ஆனால், அடுத்து ஒலிம்பிக்கில் அவர் தகுதி கூட பெறவில்லை. புதுமை புகுத்திய பிறகு அதனை தக்க வைப்பது கடினம்.  புதுமை எப்போதும் பிறறால் காப்பி அடிக்கப்படும். இது இன்வெஸ்ட்மண்ட் கும் பொறுந்தும்.

புதுமையை புகுத்துவது தலைமையின் பணி அதை செயல்படுத்தி வெற்றி காண்பதே நிறுவனங்களின் பணி.

அனைவருக்கும் தெரிந்த ஆகச் சிறந்த கம்பெனிகளில் முதலீடு செய்வதே சிறந்ததாக பட்டது. அது பணம் அதிகம் கொண்டவருக்கே சாத்தியப்பட்டது. பெஞ்சமின் கிராஹம் வேல்யு இன்வெஸ்ட்மெண்ட் க்கு பிறகு வெறும் 5000 $ ல் இருந்து உலகின் 2வது மிகப் பெரிய பணக்காரரான வாரன் ஃபபெட் - சேர் மார்க்கெட் முதலீடு மூலமும் பணம் பன்ன முடியும், என்று முதலீட்டின் புதிய வழியை கண்டார். 

ஐ போன் இல்லாதவரிடம் Apple கன்பெனின் கன்சிசமான பங்குகள், பயணம் செய்ய பிடிக்காதவரிடம் USA ன் சிறந்த விமான துறை முதலீடுகள். பாக் ஹையர் கேத் வே மூலம் 

என்னற்ற முதலீடுகள் – இதெல்லாம் பெஞ்சமின் கிராஹிம் வேல்யூ இன்வெஸ்ட்மெண்ட் பிறகு ஃபபெட் ன் மாற்றம்.


வால் மார்ட் ன் மிகப் பெரிய சாம்ராஜ்யம் முன், ஏன் வாடிக்கையாளர்கள் தனக்கு வேண்டியதை தேடிச் சென்று வாங்க வேண்டும் நாம் ஏன் அவர்களை தேடிச் சென்று கொடுக்க கூடாது? உருவானது அமேசான்.

US க் மட்டும் தான் சாத்தியமா நமக்கு? உருவானது பிளிப் கார்ட். இன்று அது மின்ரா, ஜபாங் ஐ கையகபடுத்தி ஸ்னாப் டீல் ஐ பேரம் பேசுகிறது.

சூப்பர் மார்கெட் இதுல ஏதாவது புதுமை? நாம கவனிச்சமோ இல்லையோ விலை குறைவான பொருள்கள் கீழ் ரேக்கிலேயும் அதிகமான பொருள்கள் மேல் ரேக்கிலேயும் மற்றவை நடுவிலும் அடுக்கப்படும். மிகப் பெரிய பிரான்ட்கள் எப்போதும் கண்ணில் படும்படி பார்த்துக் கொள்ளப் படும். சாக்லேட் போன்ற திண்பன்டங்கள், பொதுவாக குழந்தைகள் விரும்பக்கூடிய பொருள்கள் பில் போடும் இடம் அருகில் இருக்குமாறு வைக்கப்படும். மிகப் பெரிய மால்களில் உணவகம் மேல் தளத்திலோ அல்லது கடையின் ஊடே செல்லும் படியே இருக்கும் இது நிகல்கால மாற்றம் .

TVS 50, M80,TVS XL கள் பெண்களுக்கு அசௌகரியமாக பட, ஸ்கூட்டிகள் புதுமையின் அடையாளம் - இன்று 2 வீலர் விற்பனையில் முதல் இடம் இந்த ஸ்கூட்டி களுக்கே.

பொதிகை மட்டும் பார்த்தவர்களுக்கு சன் டிவி, சினிமா டூ சீரியல் டூ ரியாலிட்டி சோ. புதுமையின் இடையீடு.

ஆர்குட் - பழைய தலைமுறை பேஸ்புக் கூகுள் புதுமையை மெறுேகேற்ற தவறியது அதன் இடத்தை பேஸ் புக் ஆக்கரமித்தது ,மெஸேஜ் செய்ய பணம் கொடுத்த காலம் போய் வாட்ஸ் ஆப் உலகம் வரை. வாட்ஸ் அப் புதுமை ஏற்படுத்திய தாக்கம் அதனை பேஸ்புக் கையகபடுத்தியது.

இன்டர்நெட் சென்டர் டூ ஜீயோ,விசிறி டூ பேன், பானை டூ பிரிட்ஜ், விறகு அடுப்பு டூ கேஸ். மாட்டு வண்டி டூ ஏர் பஸ். விளக்கு டூ எல் இடி லைட். டெலிகிராம் டூ  ஸ்மார்ட் ஃபோன். புதுமையின் பாடைப்புகள்.
இரு சக்கர வாகனங்கள் மட்டுமே இருந்த காலங்களில் டொயோட்டா, ஃபோர்ட் டின் பிரமிப்பு . பெட்ரோல் , டீசல் கார்களின் மத்தியில் டெஸ்லா வின் புதுமை.
சீகைக்காய் மற்றும் சேம்பூ சேர்ந்த வித்தியாச கலவை சீகைக்காய் சேம்பூ. பாக்கெட் ஊறுகாய், அமுல் பால் முதல் அமுல் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் - புதுமையின் வித்தியாசம்.
இது மட்டும் அல்ல. இன்னும் எத்தனையோ உங்களை சுற்றிலும் பல முகங்களில் .

என்னதான் மெனு கார்ட் இருந்தாளும் அதை நாம அர மணி நேரம் புரட்டி பார்த்து, எப்பா .... புதுசா என்ன இருக்குனு சர்வர்கிட்ட கேட்டு அவரும் அதே புளித்து போன மெனுவ சொல்ல சரி ஒரு ரோஸ்ட் னு சொல்ற நாமதான், TV சோ ரூம் போய் புது மாடல் ஏதாவது காட்டுங்க னு சொல்லி ஒரு பேசிக் மாடல் பேக் பன்னுறோம். நம்ம பையன் ஏதாவது புதுசா செய்யனும்னு சின்ன வயசுல சொன்ன அப்பா, அந்த பையன் ஏதாவது செய்ற அப்போ, ஏன்டா வேண்டாத வேல னு சொல்லுற அப்பா முதல், டேய் ஏதாவது புதுசா பன்னுடா னு பையன் கிட்ட சொன்ன அடுத்த நிமிடம், வாடா பிராஜெக்ட் சென்டர் போலாம்னு சொல்லுற காலேஜ் ஃபிரண்ட் வரை .

ஃபிரண்ட் ஒருத்தன் டேய் படத்துக்கு போலாம் வாடா னு கம்பல் பன்னி முதல் நாள் முதல் சோ அடிச்சு பிடிச்சு போய். பெரிய ஆரவாரத்துக்கு நடுவுல கஷ்ட்டப்பட்டு படத்த பார்த்து வெளிய வந்தா, என்னடா படம் புதுசா எதுவுமே இல்ல..........
புதுமை - வளரும்.

Sunday, 29 January 2017

ரிஸ்க் எடுக்கறதலாம் ரஸ்க் சாப்பிடுற மாதிரி - சமோசா கடை முதல் மியூச்சுவல் ஃபன்ட் வரை



அந்த கடையில செம கூட்டம், இந்தியாவுல ஏதோ ஒரு மூளையில இருக்குற கடை. "சமோசா "அதுதான் கடையோட பேமஸ் டிஸ். கிட்டதட்ட 100 பேர் சூடான சமோசாவுக்கு வைய்ட்டிங். அப்படி என்ன பண்றாங்கனு பாத்தா சூடான கொதிக்கற எண்ணெய்ல அசால்டா கடைகாரர் கையை விட்டு சமோசா எடுக்குறார். "எப்படி சார்?" நிருபர் கேட்க , " 40 வருஷமா இங்கதான் இருக்கேன், எரு தடவை என் கைல எண்ணெய் பட்டுச்சு லைட்டா கட்டுச்சு, அப்புறம் பழகி போச்சு, அதுவே இப்போ ஆயில் உள்ள கைய விட்டு எடுக்குற அளவுக்கு போய்டுச்சு பழகிடுச்சி." " சரி சார் எவ்ளோ வருமானம் வரும் " – நிருபர். " இப்போ சப்பிடறவங்கள விட பாக்க வறவங்க அதிகம்- அட எப்படி பன்னுறார் பாறேன் அப்படினு பாராட்டிட்டு ஒரு 2 சமோசாவும் சாப்பிடுவாங்க. டெஸ்ட் பிடிச்சு போய் அப்புறம் ரெகுலர் கஸ்டமரா ஆகிடுவாங்க. இப்போ எனக்கு சுமார் 1000 பேருக்கு மேல ரெகுலர் கஸ்டமர். டெய்லி 10000 சமோசா சேல்ஸ் ஆகும். நானும் எங்க அப்பாவும் இருந்த கடை இப்போ 7 பேர் வேள செய்யுறோம்".  OMG யே மேரா இன்டியா அப்பிடினு அந்த புரோகிராம் முடியுது.



நாம இத வச்சு phd பண்ண வேனாம் ஆன இங்க கத்துகறத்துக்கு நிறைய இருக்கு அதுதான் " ரிஸ்க் " - அவர் வெறும் கரண்டி மட்டும் யூஸ் பண்ணி இருந்தா அவர் எப்போவே காணாம போய் இருக்க கூடும். ஆனா புதுசா அதுவும் விளையாட்டா செஞ்ச காரியம் இப்போ ரிட்டர்ன் மட்டும் பல மடங்கு . இவர் இங்க ரிஸ்க் எடுக்கல ஆனா இங்க அவரு பிராக்டிஸ் அப்புறம் இத எப்படி மார்க்கெட்டிங்கா மாத்துறதுனு யோசிக்க செய்தார். ரிஸ்க்க புரிஞ்ச்சுகிட்டு எடுக்குற முயற்சி அது தான் - வெற்றி .


மியூச்சுவல் ஃபண்ட் இதுவும் அப்படிதான். எக்கசக்கமான MF ல எந்த மாதிரியான ரஸ்க நாம செலக்ட் பண்ண போறோம். 3 வகையான ரிஸ்க்
 1) Low (மிதமான) 
2) Medium (நடுத்தரமான)
 3) High ( அதிக).
 அவ்ளோ தான் நாம அதோட வகையை அடுத்து வரும் ஆர்டிகல்ல பார்ப்போம் இப்போ ஈக்விட்டி (equity) அதாவது சேர்ல 90% முதல் 100% வரை இன்வெஸ்ட் பண்ணுற M F பத்தி பாப்போம்.

பொதுவா equity ல இன்வெஸ்ட் பன்னுற ஃபண்ட் high risk கேட்டகரி மட்டும் தான் கொஞ்சம் medium risk கூட இருக்கும்.
இப்போ நாம இந்த equity ல 3 டைப் 

1) லார்ஜ் கேப்(Large cap) - RS 200 bn to Rs 3500 bn
2) மிட் கேப் (MId Cap) - RS 50 bn to Rs 200 bn
3) ஸ்மால் கேப் (Small Cap) - Rs 50 bn க்கு கீழ்


Cap அப்படினா Market Capital = No of Shares X Market Price
அதாவது சேர் மார்கெட் ல லிஸ்ட் ஆகியிறுக்குற கம்பெனி யோட மொத்த சேர் அப்புறம் அதோட கரண்ட் மார்க்கெட் விலை.

infosys  வோட மொத்த சேர் சுமார் 230 கோடி தற்போதைய விலை 942 அப்போ Market Cap = 216406.64 கோடி .
இப்போ நாம Large Cap equity MF பத்தி மட்டும் பாக்க போறோம்.

இந்த type MF எல்லாம் Large Cap சேர்ல மட்டும் இன்வெஸ்ட் பன்னிறுப்பாங்க.

எக்ஸ்சாம்பில் கு ஒரு Large Cap MF .


NAV - Net Asset Value இது தான் MF உடைய வேல்யூ
SBI Blue Chip Fund (Growth ) இதோட NAV- 31.578 அதாவது இப்போ நாம 10000 ரூ இதுல இன்வெஸ்ட் பன்னுனா நமக்கு மொத்தம் 316.67 யூனிட் கிடைக்கும் ok இப்போ NAV 10 வருஷத்துக்கு அப்புறம் 40.00 அப்படினா (316.67 X 40) 12667. 04 ரூ இது ஏறலாம் இல்ல இறங்கலாம் ஆனா 316.67 யூனிட்டுக்கு மட்டும் கணக்கு போடபடும்.

ok இந்த SBI Blue ChiP 30.01.2012 ல NAV- 13.71 இப்போ 31.578 சுமார் இரண்டு மடங்குக்கு மேல.


எப்படி செலக்ட் பண்ணுறது?
முதல்ல அது Growth ( வர வருமானம் மீண்டும் அந்த MFல இன்வெஸ்ட் செய்யப்படும்)  ஆ இல்ல dividant ( லாபம் பிரித்து கொடுக்கப் படும்) பொது வா Growth NAV வேல்யூ அதிகமாக இருக்கும்.

அடுத்து Asset Size - சொத்து மதிப்பு இந்த MF சொத்து மதிப்பு சுமார் 7320 கோடி இந்த Asset தான் சேர்ல இன்வெஸ்ட் பன்னுவாங்க.

அடுத்து முதலீடு செய்யப்பட்ட சேர் மற்றும் % இதுல 6.49% HDFC Bank லயும் 3.30 % sun pharma 3. 17% RIL, 3. 16 ட & T, 3.03 M& M போன்ற சேர்ல இன்வெஸ்ட் பன்னிறுப்பங்க.
அடுத்து ரேங்க் மற்றும் ரிட்டர்ன் இத CRISIL MF ரேங்கிங் இல்லAMFl போன்ற வெப்சைட்ல தெரிஞ்சுகலாம்.

SIP அல்லது LUMP SUM?
நாம FD ல பணம் போடுற அப்ப பணம் மட்டும் தான் கணக்கு இங்க அது யூனிட் நான் ரிஸ்க் எடுக்க ரெடி இல்ல அப்படினா FD இல்ல நான் ரெடி அப்படினா Lump SUM ஆ MF .

அதே மாதிரி தான் SIP, FD க்கு பதிலா RD இன்னும் 20 வருஷத்துல பெரிய அளவுல சேர் மார்கெட் ஏறும் அப்படினா SIP .

SIP ல என்ன ஃபெனிபிட்?
இப்போ 2000 ரூ மாத மாதம் போடுறோம் எப்போ வேனும்னானும் close பன்னலாம் (open ended) இப்போ NAV -30. 2000/30  யூனிட் இப்போ அதே இன்னும் 2 மாசம் கழிச்சு மார்க்கெட் கொஞ்சம் சரியுது இப்போ NAV - 25 . 2000 / 25 Unit அதிகமான யூனிட் கிடைக்கும். 20 வருஷத்துக்கு அப்புறம் NAV - 60 அப்படினா அப்போ உங்க கிட்ட இருக்குற மொத்த பூனிட்டுக்கு  X 60 அவ்ளோதான்.

இந்த SBI Blue Chip (G)
SIP ஸ்டார்ட் டேட் 04/ 01/2010
Amt 2000 PM  ஆனது 27/ 01/ 2017 வரை .

மொத்தம் - 85 இன்ஸ்டால் மென்ட்
மொத்த தொகை - 170000
தற்போதைய வேல்யூ - 296904.04
ரிட்டர்ன் - 15. 51%

இது RD விட அதிகம் இன்புளேசன் 8% னா கூட நமக்கு 7% லாபம்.


லார்ஜ் கேப் சேர்கள் எல்லாம் பல வருடம் பீல்டுல இருந்த அனுபவம் உள்ளவங்க . அவங்க எல்லா ஸ்விட்சுவேசன் லையும் நல்ல முடிவு எடுக்கும் திறன் அனுபவத்தில் தெரியும் ex: TCS, WIPro, Infosys, Reliance, L& T போன்றவை இதுவும் கிட்டதட்ட சமோசா கடைகாரர் மாதிரி தான் ரிஸ்க்க ஈஸியா ஹன்டல் பன்றது ல.


நல்ல ஃபன்ட் செலக்சன் தான் முக்கியம்.

Saturday, 28 January 2017

20 ரூபாய் இன்வெஸ்ட்மெண்ட் - டீ கடைல இருந்து ஆரம்பிப்போம்.

"அண்ணா ஒரு டீ", . கடைகாரர் டீ போடும் போது அங்க இங்க நோட்டம் விட்டு ஒரு கண்ணாடி பாட்டில் ல கையை விட்டு "அண்ணா அப்புடியே ரெண்டு பிஸ்கட் ". "எவ்வளவு ஆச்சு?" "20 ரூ ஆச்சு தம்பி".

ஒரு வித்தியாசமான முயற்ச்சி - என்ன அது?
நாம பண்ணுற அனாவசிய செலவ கொஞ்சம் கொறச்சு அத இன்வெஸ்ட்மெண்டா மாத்தபோறோம்.

அது எப்படி? 20 ரூபாவ இன்வெஸ்ட்மெண்டா மாத்த முடியுமா ?
முடியும். 


10 வருஷத்துக்கு முன்னாடி டீ வெல எவ்வளவு அதிகபட்சம் 5 ரூ இப்போ 10 ரூ. இன்னும் ஒரு 20 வருஷத்துக்கு அப்புறம்?
பீ தூள், பால், தண்ணீர் ( ஆமா அதையும் காசு குடுத்து தான் வாங்கனும்), சர்க்கரை, கடை வாடகை ஆக மொத்தம் 50 ரூ. இதுக்கும்   நம்ம இன்வெஸ்ட்மெண்டுக்கும் என்ன சம்பந்தம்? இருக்கு. நம்ம பொருளாதார நிலைமைய அந்த டீ கடை நல்லா சொல்லி தரும்.



இன்ஃப்லேசன் (Inflation) - பணப்புழக்கம் அதுதான் பொருளாதாரத்துக்கு முக்கியம். குறைஞ்சது வருஷத்துக்கு 4% மேல இருந்தாதான் வேலை வாய்ப்பு இருக்கும். இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு அது அதிகமாகவே இருக்க வேண்டும் அதனால் பொருள்களின் விலை அதிகமாகி கொண்டே இருக்கும் இது தான் ஒரு கம்பெனியை வளர செய்யும். அது சாதாரண கம்பெனி முதல் சேர் மார்க்கெட்ல லிஸ்ட் ஆகியிறுக்க கம்பெனி வரை .

எனக்கு சேர் பத்தி எதுவுமே தெரியாது, நான் எப்படி இன்வெஸ்ட் பன்றது? 



மியூச்சுவல் ஃபண்ட் (Mutua fund) அதாவது சிம்பிளா சொல்றேன் பெரிய கம்பெனிகள் AMC (Asset management Company) அவங்க நிறைய பேர் கிட்ட நிதி திரட்டி அதை ஒரு சில குறிப்பிட்ட கம்பெனிகளில் இன்வெஸ்ட் ( சேர் மார்கெட் ல லிஸ்ட் ஆன ) பண்ணுவாங்க. அந்த சேர்களின் விலை ஏறும் போது MF ம் ஏறும் இறங்கும் போது இறங்கும். இது சேர்ல மட்டும் இல்லாம கடன் பத்திரம், டெபாசிட் என நிறைய வகையில் இன்வெஸ்ட் செய்வார்கள். அவங்க அவங்க ரிஸ்க் ஏத்த மாதிரி.

ok பேசிக் முடிந்தது ஒரு சின்ன கால்குலேசன் நாம திரும்பியும் டீ கடைக்கே போவோம். நாம டெய்லி 20 ரூ ஏதோ ஒரு செல்வ குறைச்சு சேர்த்து வைக்கனும - அத மாசதுக்கு 600 ரூ MF இன்வெஸ்ட் பண்ண முடியும்.


Fy 2010 - யார பாத்தாலும் பெட்ரோல் விலை ஏறுது, கேஸ் விலை ஏறுது இன்னும் 10 வருஷத்துல அதோட விலை அப்டினு எல்லோரும் புலம்புனாங்க. அப்ப டீ வெல கம்மிதான் மிஞ்சி போனா 3 ரூ-5 ரூ பிஸ்கட் ஒரு 3 ரூ - 5 ரூ ஆக மொத்தம் 8 ரூ முதல் 10 ரூ மாசம் 200 முதல் 300 ரூ.
அந்த சமயத்தில் DSP BLACK ROCK NATURAL RESOURCES AND NEW Energy Fund - growth - MF. இது முழுவதும் ஆயில் , கேஸ் ல இன்வென்ஸ்ட் செய்யப்பட்ட MF . அந்த 200 ரூ சிப் (SIP - systematic investment plan) முறை அதாவது நாம பேங்க்ல RD போடுற மாதிரி இப்போ வரைக்கும் ( 25.01.2017 ) வரை போட்டு வந்துருந்தோம்னா...

மொத்தம் 17,000 ரூ இன்வெஸ்ட் பன்னிறுப்போம்
இப்போ அதோட வேல்யூ எவ்ளோ தெரியுமா ? 33283 ரூ .
அதாவது டீ குடிக்க டெய்லியும் சேர்த்த காசு.
இதே 2000 ரூக்கு கணக்கு போட்டுக்கோங்க.

இது ஒரு சாதாரண எக்ஸாம்பிள் தான் இது மாதிரி நிறைய MF இருக்கு நம்ம வேௗ தேடி நல்ல MF கண்டுபிடிப்பது தான்.

Thursday, 26 January 2017

குரோர்பதி - கனல்ல நிஜம்

இன்வஸ்ட்மென்ட் இது எப்போதுமே ஒரு புரியாத புதிர் அப்படிங்கறத விட தெரியாத அல்லது தெரிந்து கொள்ள முடியாத அல்லது முயற்சிக்காத ஒன்றாகவே உள்ளது.


இன்வெஸ்ட்மென்ட் 

அதுக்கு பெரிய முதலீடு வேனும் அது என்கிட்ட இல்லையே?
நான் எப்படி இன்வெஸ்ட் பன்னுறது?
நான் என்ன டாடாவா, பிர்லாவா இல்ல அம்பானியா?
நான் எதுக்கு இன்வெஸ்ட் பண்ணனும்?
என்னால எல்லாம் " "ரிஸ்க் " எடுக்க முடியாது?
யார நம்பி பணத்த போடுறது?
யாரவது உதவி பண்ணுவாங்களா?
சேர் மார்க்கெட்டா அது சூதாட்டம் பா?

இப்படி பல கேள்வி. ஆனா எல்லாத்துக்கும் தப்பா விடை சொல்ல பல பேர் . கரெக்ட்டா சொல்லற சில பேரும் அதனால காணாம போறங்க. எது எப்படியோ நாம டாப்பிக்கு போவோம்.

ரிஸ்க் - தியரிட்டிகல் மீனிங் எல்லாம் வேண்டாம். உலகத்துலேயே மிகப்பெரிய இன்வெஸ்ட்மெண்ட் குரு வாரன் ஃபபெட் சொன்னது " ஒரு விஷயம் தெரியாம எந்த ஒரு செயல செஞ்சாலும் அது ரிஸ்க் தான் ". ரிஸ்க் எடுக்க வேண்டாம் பட் தெரிஞ்சுகிட்டு செய்யலாம் .

இன்வெஸ்ட்மென்ட் பன்ன அதுக்கு நாம பெரிய ஆள இருக்கனும்னு அவசியம் இல்ல. பெரிய அளவுள பணமும் தேவை இல்ல. விஷயம் தெரிஞ்சா போதும். ஒரு விஷயம் " யார நம்பி பணத்த போட?" தயவு செய்து யார நம்பியும் பணத்த போடாதீங்க தீர்க்கமா யோசிச்சு நிறைய படிக்கும் போது நிறைய விஷயம் நமக்கு தெரிய வரும். அப்போ உங்கள நம்பி மட்டும் பணத்த போடுங்க.

யாராவது உதவி பண்ணுவாங்களா? ஏன் இல்ல நிறைய பேர் இருங் காங்க இன்றைய இணைய உலகில் எல்லாம் சாத்தியமே.

பொதுவா " நீ இப்ப ஒன்னு போடு அடுத்த வருஷம் டபுள் " னு சொல்லுற அப்போ ஒரு கேள்வியும் கேட்காத நாம "நீயே யோசின்னு சொன்னா 1008 கேள்வி ". அது ஒரு இயல்பா போயிடுச்சு.

" சார் நீங்க டெய்லி ஒரு சிகரெட் குடிக்குறீங்க வருஷத்துக்கு 365 சோ 365 X 5 = 1825 நீங்க அத சேவ் பன்னலாம் ல" ஒருத்தன் கேட்க அவன் " நீங்க எவ்ளோ சார் சேவ் பன்னுனீங்க?". சுவாரஸ்யமான உரையாடல். இத எதுக்கு சொல்ற? தேவையில்லாமா ?

இருக்கு " செலவையும் இன்வெஸ்ட்மென்டா மாத்துற கலை". ஒரு 5 Star ஹோட்டல ஒரு பெரிய MNC கம்பெனியோட பார்ட்டி எதுக்கு அடுத்த ஆர்டர பிடிக்கறதுக்கு தான். வேற எதுக்கு? 5 லட்சம் செலவு 5 கோடி ஆர்டர் .
ஏன் நாம பன்ன முடியாது?

FY 2000 அப்போ ராயல் என்பீல்டு ஆஹா ஒஹோ அந்த பைக் வச்சுருந்தா அவன் தான் கெத்து விலை சுமார் 55000/- அந்த மாடல் பைக் இப்போ? அந்த பைக் அப்போ Eicher motors அவங்க தான் இப்போ வரைக்கும் அதை வைத்துள்னர்.
அதே Fy 2000 Eicher Motors சேர் விலை Rs . 17.50 /- . அந்த சமயம் பைக் வாங்காம கம்பெனி சேரை அந்த விலைக்கு (55000/-) வாங்கியிறு ந்தா இப்போ அதோட விலை 4.75 Cr.

இதே கான்செப்ட் தான் maruthi Suzuki.


Wipro 1980 IT கம்பெனி வளர்ச்சி தெரியாத காலகட்டம் ஒரு விப்ரோ சேர் 100 ரூ இப்போ அந்த சேர் பல பேனா ஸ்க்கு அப்புறம் ஒரு சேர் 96000 மா மாறிடுச்சி இப்போ அதோட வேல்யு 473.35 per சேர் சோ டோடல் 4.54 cr. இப்போ சொல்லுங்க செலவ இன்வெஸ்ட்மென்டா மாத்த முடியாதா?

5 வருஷத்துல 2 மடங்குக்கு மேல ரிட்டர்ன் தந்த நல்ல சேர்கள், மியூச்சுவல் பன்டுகள் நிறைய உள்ளன.

நாம செய்ய வேண்டியது " செல்வ குறைச்சு , இன்வெஸ்ட்மென்ட் பத்தி நிறைய கத்துக்கறதும், நல்ல இன்வெஸ்ட்மெண்ட தேர்ந்தெடுக்கறது மட்டும் தான் "
இன்வெஸ்ட்மென்ட பொருத்த வரைக்கும் " நீங்க தான் உங்க பெஸ்ட் அட்வைசர, உங்க டெசிசன் மேக்கிங் தான் எல்லாவற்றையும் விட முக்கியம் " .

" ரிஸ்க் அப்படினு எதுவுமே இல்ல நாம கத்துகுற வரைக்கும் "

Tuesday, 17 January 2017

இன்ஜீனீ்ரிங்க் காலேஜும் - இன்டலிஜன்சும்

அது பிசிக்ஸ் கிளாஸ், அன்றைய தினம் ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாக ஓடிக்கொண்டிருந்தது. அன்றைக்கு அதுதான் கடைசி வகுப்பு . ஏற்கனவே 25% ஸ்டூடன்ஸ் ஆஃப் சன்ட் பேராசிரியர்கள் கொஞ்சம் எரிச்சலுடன் தான் பாடம் நடத்தினார். எஞ்சினீரிங் காலேஜ்ல அது கொஞ்சம் அதிகம் தான் அதுவும் ஃப்ர்ஸ்ட் இயர்ல. பேராசிரியர்கள் கோபம் அவர்கள் எழுதுற போர்ட்ல தெரிந்தது.

ஏற்கனவே அவரோட வகுப்புல பேசுனதுக்கு அந்த கிளாஸ் ஃபுல்லா நிக்க வச்சு கிளாஸ் முடிஞ்சதும் அவரோட கேபின்க்கு கூப்பிட்டு அவரு போட்ட அட்வைஸ் ஞாபகத்துக்கு வர (அதுக்கு அவரு 2 அடி கூட அடிச்சுருக்கலாம்). மெல்ல பக்கத்துல இருந்தவன் கையை திருப்பி மணி எத்தனைனு பாத்தா அது ஒரு 2 மணி காட்டியது. ஆனா கடைசி கிளாஸ் 3.30க்கு ஆரம்பிக்கும். நான் அவன பாக்க இது ஓடுல அவன் சைகையால சொல்ல. இப்ப ரெண்டாவது எரிச்சலும் சேந்து எப்படா கிளாஸ் முடியும்னும் தூங்கி வழிஞ்சி காத்திருந்தோம்.

விஸ் யூ ஹாப்பி பொங்கல் னு சொல்லி அவர் விறுட்டுனு ஃக்ளாஸ் முடிச்சி கிளம்பிட்டார். பொங்கல் லீவுக்கு  முன்னாடி நாள் எல்லா காலேஜ் ஸ்டூடன்டுக்கும் இப்படி தான் இருக்கும். அவசர அவசரமா ஹாஸ்டல் ரூமுக்கு ஓடி 5 kg அழுக்கு மூட்டைய தூக்கிகிட்டு ஒரே ஊரு கார நண்பன் எவனாவது இருக்கானானு பாத்து அவனையும் பிக் அப் பன்னிட்டு சுமார் 2 KM நடந்து (30 ரூ ஆட்டோ ஃபேர் மிச்சப்படுத்த) பஸ் ஸ்டாப்ல அரை மணி நேரம் நின்னு, கூட்டமா வர ஒரு பஸ் ல குரங்கு மரத்துல தொங்குற மாறி தொங்கி ,சில பல சாகசம் செஞ்சி ,லக்கேஜ உள்ள தினிச்சு, டிக்கெட் வாங்குனதுக்கு அப்புறம் லெவல் 1 கம்பிளிட்.

கோயம்பத்தூர் அவுட்டர்ல இருக்குற எல்லா காலேஜ் நிலைமையும் இதுதான். சென்னைனா சொல்லவே தேவ இல்ல. காந்திபுரம் மாலை 7 மணி வெளியூர் பஸ் ஸ்டாண்டு . பொங்கலுக்கு முன்னாடி நாள், நாங்க அடுத்த சாகசதுக்கு ரெடியா இருந்தோம். 10 பஸ்ல உக்காறதுக்கு இடம் இல்ல. நேரம் அதிகமாக அதிகமாக கூட்டம் அதிகமாகி கொண்டிருந்தது. பஸ் உள்ள வர இடத்துல இருந்து 100 M முன்னாடியே இடம் போடுறதுனு பிளான். கரெக்ட்டா எக்ஸ்கியூட் பன்னான் ஒரு ஃபிரெண்ட்- ஒரு கர்சீப் சரக்குனு எடுத்து ஒரு சீட்ல போட்டான். யெஸ் இடம் கன்பார்ம். ரோம்ப கேஸ்வலா கூட்டம் பஸ்ல ஏற்றத பத்து நின்னுகிட்டு இருந்தோம். பொறுமையா பஸ்ல ஏறி கர்சீப் போட்ட இடத்த பார்த்தா 3 பேர் அல் ரெடி ஆஜர் . " நாங்க இங்க கர்சீப் போட்டுறுந்தோம் " - நணபன். " இல்ல பா இங்க எந்த கர்சீப்பும் இல்ல" - அவர்.

கொஞ்ச நேரம் கர்சீப் தேடி பார்த்து அது இல்லாமல் போக. ஏமாற்றத்துடன் பஸ்ஸ விட்டு வெளிவர அதுக்கு பின்னாடி வந்த 2 பஸ்சும் ஃபுல். மணி 9 தொட்டிருந்தது. அந்த பஸ் ஸ்டான்டுல நின்னதுக்கு ஒரு பஸ் ல நின்னுகிட்டு போய்பிருந்தாலும் ஊர் போய் இருக்கலாம். உட்காருறதுக்கு இடம் கிடைக்கும் வரை விருறதா இல்ல. அடுத்த பஸ்ல ஓடி போய் அடிச்சு பிடிச்சு 3 சீட் கன்பார்ம் பன்னுனோம்.

இது ஏதோ சாதாரண பஸ் பிடிக்குறதுனு நினைக்கலாம். ஆனா இல்ல இது ஒரு " ஆட்டிடியூட் ". அடுத்தது என்னனு யோசிக்குற " எமோஸனல் இன்டலிஜன்ஸ்" எப்படி எக்ஸிகியூட் பன்றதுங்கிற " ஐ கியூ". அன்பார் சுனேட்டா அது பஸ் ல இடம் பிடிகறதுக்கும் காலேஜ் கட் அடிக்கவுமே பூஸ் ஆகுது. வேள தேடுறதுலயும் , ஜாப் செலக்ட் பன்றது லையும் , பிசினஸ் செய்யுற அப்போவும் , காலேஜ் கோர்ஸ் செலக்ட் பன்னுற அப்போவும் இத யூஸ் பன்னுற அப்ப மட்டும் தான் " கிடைச்சத விட்டுட்டு பிடிச்சதுக்கு " மாற முடியும்.

ஈரோடு பஸ் ஸ்டாண்டுல ஒரு கடையில சாப்பிட உட்கார்ந்தோம். "தம்பி சட்னியா? சாம்பாரா ?" அண்ணா சட்னியோ , சாம்பாரோ எங்களுக்கு டேஸ்ட் தான் முக்கியம், நமக்கு பிடிச்சத சாப்பிடுவோம்.