Saturday, 24 December 2016

எனக்கு பணம் வேணும் டாட். வங்கி மற்றும் மக்களின் மறுபக்கம்

பணம் எங்கிருந்து வருது, எப்டி வருது? அதெல்லாம் வேணாம். எனக்கு பணம் வேனும் டாட் . இது தான் இப்போதைய டிரண்ட் .

எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் பணமதிப்பு நீக்கம் பத்தி பயங்கரமா பேசி வந்தார் பாசிட்டிவா ? நெகட்டிவா? னு தெரியல ஆன சும்மா விஜய் டிவி நீயா நானா கோபிநாத் கணக்கா.

அதுல பேங்க்கும் தப்பல. சும்மா போட்டு வாங்கு வாங்குன வாங்கிட்டான் " பேங்க் வாசல்ல ஒரு மணி நேரம் நிக்கிறோம். ... (அவன் நின்னான்னா இல்லையானு தெரியாது) கவுண ட்டர் பக்கத்துல போன உடனே பணம் இல்ல அப்டின்றாங்க. இதே மாதிரி எல்லா பேங்க்கும். வாங்கும் போது மட்டும் சொலயா வாங்குவீங்க, ஆனா கொடுக்கும் போது மட்டும் 2000, 4000 குடுப்பீங்க. அடுத்து ஒரு நல்ல கேள்வி கேட்டான் " என்னோட பணத்த எடுக்க எனக்கே உரிமை இல்லையா?". இப்போ நான் போய் பணத்த போட்டா இல்லாத கேள்வி கேக்குறீங்க. இப்ப கூட பணம் எடுக்தான் போறேன் இன்னிக்கு மட்டும் கிடைக்கல??? இதுநாள எனக்கு எவ்ளோ லாஸ் தெரியுமா?? பத்தா குறைக்கு புஜிட்டல் முறைக்கு மாறுன்னு சொல்றீங்க, படிச்சவங்க மாறிடலாம், அப்போ படிக்காதவங்க எங்க போவாங்க? விவசாயி எங்க போவான்? எத்தன பேர் லைன்ல நின்னு செத்துருக்காங்க? பெரியவங்க, மாற்று திறனாளிகள், கர்பிணி பெண்கள் எல்லாம் எவ்ளோ நேரம் நிக்குறாங்க? பெரிய பெரிய ஆளுங்களுக்கு மட்டும் எப்படி கிடைக்குது? பிரைவேட் பேங்க் மட்டும் எப்படி கொடுக்கறாங்க ஏன் உங்களால முடியல ?

நான் அவனோட இடத்துல இருந்தாலும் இதத்தான் பேசியிருப்பனோ என்னவோ. இது ஏதோ அவனோட தனிப்பட்ட கேள்வி மட்டும் அல்ல.
நிறைய பேரோட கேள்வியும் இதுதான். பதில் கொஞ்சம் கஷ்டம்தான்......

கண்டிப்பா இவருக்கு டெக்னிகலா சொன்ன புரியாது. அதனால சாதாரணமா தான் சொல்வியாகனும்.

பெரிய க்யூ பேங்க் மற்றும் ஏடிம் முன்பு. மக்கள் பெரும் அவதி . அதுல மறுக்கறந்துக்கு ஒன்றும் இல்லை. ஆனா இதுவும் கடந்து போகும் னு காத்திருபவர்களில் நானும் ஒருவன் தான். மாற்றங்களை மக்கள் சிறிதளவாவது வரவேற்க துணிந்துள்ளளார் ஒரு மெச்சூரிட்டி உடன் (சிரிதளவேனும்). டிஜிட்டலை நோக்கிய முதல் அடியை தெரிந்தோ, தெரியாமலோ எடுத்து வைக்க ஆரம்பித்து விட்டோம்.

இது நார்மலா எல்லா சேனலையும் வற ஒன்றுதான். பேங்க் சைடுலையும் கஷ்டம் இருக்கத்தான் செய்யுது. பேங்கோட வேள என்ன மக்கள் கிட்ட இருந்து "டேபாசிட் வாங்குறது - கடனா குடுக்கிறது". எவ்வளவுக்கு எவ்வளவு போபாசிட் வாங்குறாங்களோ அவ்வளவு கொடுக்க முடியும் இதனால மக்களோட வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். எப்படியும் இப்போ டெபாசிட் போட்ட துல 40% திரும்ப எடுக்க போறது கிடையாது. இதனால் அவங்களுக்கு வட்டி கிடைக்கும் அதை வீிட்டுலையே வெச்சி வந்தா?? இந்த ரெண்டு மாசத்துல எவ்வளவு அனாவசிய செலவு குறைச்சிறுப்போம்? எத்தன பேர் பப்ளிக் புரான்ஸ்போர்ட் யூஸ் பன்னிறுப்போம்? இவ்வளவு ஏன் தமிழ்நாட்டுல் ஒயின்ஸ் ஷாப் சேல்ஸ் குறைஞ்சி இருக்காம்?

எத்தன மீடியா சேனல் கிராமத்துக்கு போய் மக்களுக்கு ஏற்படுற பிரச்சனைய காட்டுனாங்க? "வயசானங்க பின்னாடி நிக்குறாங்கன்னு "வரிசையில் ஃபஸ்ட் ஆள நின்னு கிட்டு சொன்னா எப்படி?. " நிறை பேர் இருக்குறிங்க அதனால கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்க" னு நேத்து 10 மணி வரைக்கும் கேஷ் டேலி பண்ண கஷ்டப்பட்ட ஆபிஸர் சொன்னாலோ, சர்கிள், ரிஜினல் ஆபிஸ் காலுக்கு பதில் சொல்லி கஷ்ட்டப்பட்டு சொச்ச பணத்த எப்படியாவது புரட்ட பாடுபட்டு அந்த கேப்புல மக்கள் கட்ட திட்டு வாங்கி BP, சுகர் ஏறி ரிலாக்ஸ் பண்ண முடியாம கஷ்ட்டபடுற பிராஞ்ச் இன் சார்ச் சொல்லுறத கேக்காம நாம நம்ம பங்குக்கு கொஞ்சம் BP ஏத்துறது.

டிஜிட்டல்

ji o சிம் வாங்கி படம் டவுன்வோட், வாட்ஸ் அப், பேஸ்புக், அதுவும் 3G, 4G ல. அப்புறம் செல்பி வித் 2000 , மை லாஸ்ட் 500, 1000 ன்னு போட முடியுது ஏன் பணத்த டிஜிட்டல் முறைல பரிமாற்றம் செய்ய முடியாது?

பேஸ்புக், வாட்ஸ் அப் பயன்படுத்துற முக்கால்வாசி பேர் ஸ்மார்ட் போன் வச்சிறுக்கோம்? வாட்ஸ் அப் எப்படி யூஸ் பன்னுறோம் னு டீக்கடை காரர் கிட்ட டெமோ வோட சொல்லுவோம் ஆனா ப்ண்ட் புரண்ஸ்பெர் சொல்லி தர மாட்டோம்." அது ஒன்னும் எங்க வேள இல்ல" எங்கோ ஒரு வாய்ஸ். ஆமா நாம வாட்ஸ் அப், பேஸ்புக் கோட சேர் பார்ட்னர். லாரி டிரைவர் லாம் இப்போ கார்ட் யூஸ் பண்ண ஆரம்பிச்சுடாங்க. அதுவும் கொஞ்சம் கொஞ்சமா வர ஆரம்பிச்சுடும். நாம உண்மையா இருந்தா ஏன் டிஜிட்டலுக்கு பயப்படனும்,  தெரியலைனா பரவாயில்ல கத்துகலாம். அசாம், குஜாரத் ல சில் கிராமம் டிஜிட்டல் ஆகிறுக்கு ஏன் நம்மால முடியாதா? பானிபூரி அப்புறம் சில சின்ன ஹோட்டல் எல்லாம் யூஸ் பண்றாங்க. 100,200 விடுவோம் அதுக்கு ஆதிகம்னா நாம கார்டு யூஸ் பண்னலாம். அப்போ அவங்க கணக்கு காட்டி ஆகனும்.

ஏன் பணத்த எடுக்க எனக்கே உரிமை இல்லலையா?
லஞ்சம் & ஊழல் மட்டும் என்ன அடுத்தவன் பணமா அதுவும் நம்முடைய பணம் தானா? அது தான் நம்மல, இப்போ இந்த நிலைமைக்கு கொண்டு வந்துருக்கு. "சார் பில் போட்டா 200 Rs அதிகம் பரவரலையா?" என்ன 200 ஆ வேனா பில் போடதனு சொன்னவங்கதான? இந்த மாதிரி 200, 200 ஆ சேத்து அதிக லாபத்துக்கு ஆசபட்டு, ஆசபட்டு வருஷா வருஷம் 2.50 ட சம்பாரிக்க வரி கட்டுறோம் அது என்ன பக்கத்து வீட்டு காரனோடதா?.

எத்தன பேர் இந்த 2 மாசதுல PAN CARD க்கு அப்ளை பண்ணிறுப்பாங்க? TAX கட்டிருப்பாங்க? எத்தன பேர் RC அப்ளை பண்ணிறுப்பாங்க? கடன் கட்டி இருப்பாங்க.? அது எப்படி 3 நாள் ல இது வரைக்கும் இல்லாத அளவு நகராட்சி வரி கட்டுனாங்க? அதுவும் நம்ம பணம் தான்.

எத்தன பிரைவேட் பேங்க் கிராமத்துல இருக்கு? இதுக்கு மேல என்ன லா சொல்ல முடியாது. நீங்க படிக்குற அதே நியூஸ் பேப்பர் ஒரு கார்னர் ல இதையும் சொல்லிருப்பாங்க. நான் சொன்ன எல்லா விஷயமும் அதே நியூஸ் பேப்பர் ல தான் இருக்கு ஆன அவங்க சொல்ற இடம் தான் வேற.

அட்லிஸ்ட் இப்ப அவன் தப்பா மந்தவங்க கிட்ட சொல்லாமை யாவது இருப்பான். ஐ ஹாப் சோ.

" 100 பேர் கிட்ட சொல்ற நல்ல விஷயம் 10 பேருக்காவது போய் சேரும். ஆனா 10 பேர் கிட்ட சொல்ற ஒரு கெட்ட விஷயம் ரொம்ப ஈஸியா 100 பேர் கிட்ட நூறு விஷயமா போய் சேரும் "

1 comment:

Thank you for sharing