ஒருத்தர ஏமாத்தனும்னா ஃபஸ்ட் ஆசைய தூண்டனும். - முதலீட்டு தவறுகள் .
நாம எல்லோரும் செய்யற பொதுவான தவறு முதலீட்ட தேர்ந்தெடுத்தல். "நான் இன்வஸ்ட் பன்றதுனு முடிவு பண்ணிட்டேன் ஆன எப்படி தான் தெரியல " அப்டினு யார்கிட்ட சொல்றோம்? ஃபிரென்ஸ் கிட்ட, ரிலேடிவ், தெரிஞ்சவங்க, வந்தவங்க, போறவங்க எல்லார்கிட்டையும் ஏதாவது ஒரு வழியில சொல்லி வெய்க்கிறோம். இத உளவியல் ரீதிய பார்த்தா என்கிட்ட " இப்போ " பணம் இருக்கு அப்படினு மத்தவங்கலுக்கு சொல்ற மாறி தெரியும். ஆன உண்மை அது இல்ல. பணத்த பெருக்கனும் - அதுதான் அதோட மெய்ன் மோட்டோ.
போன வாரம் பஸ்ல வீட்டுக்கு வந்துட்டு இருக்கும் ஒரு 60 வயது மதிக்கதக்க ஒருத்தர் தேம்பி தேம்பி அழுதுட்டு இருந்தார். நான் என்னம் மோ பெரிய ஆள் மாறி விசாரிக்க போய் அவரு அவர் பிலஸ்பேக் போக ...........
ஒரு 10 வருசத்துக்கு முன்னாடி போவோம். இதே டையலாக் - அங்க இங்க சுத்தி ஒரு வழியா ஒருதர்
கஷ்டபட்டு 5 லட்சம் சேத்த பணத்த இன்வெஸ்ட் பன்றதுக்கு ஒரு வழிய கண்டுபிடிச்சார்.
யாரோ ஒருதன், அது அக்காவோட , கொழுந்தனோட , ஃப்ரண்டோட, தம்பியோட, ஃப்ரண்டோட அண்ணன். அவரு ஒரு புதுசா ஆரம்பிச்ச ஒரு பைனான்ஸ் கம்பெனியோட & சேல்ஸ் ரெப்ரசன்டிவ் வோட ஃபிரண்டாம்.
அவன்கிட்ட கிட்ட இருந்து நம்ம ஆளுக்கு போன் " சார் நான் தான் பேசுறேன்னு திரும்பையும் அதே இன்றோ. சொல்லுங்க சார் - இது நம்ம ஆளு. " சார் நம்ம ஃபிரண்டோட கம்பெனி தான் ஒன்னும் பிரச்சன இல்ல சார். நம்ம கம்பெனி தான் ( ஏதோ இவனே ஆரம்பிச்ச மாறி) . ஒன்னு ரெண்டா மாறும். ரெண்டு நாலா. அப்போ உங்க 5 ட அசால்டா 10 ட அதுவும் 1 வருஷத்துல சார்". இப்புடி சொன்ன நாம என்ன பண்ணுவோம் அது எப்படி டபுள் ஆகும்? நம்மாளும் கேட்டார். " சார் அது எல்லாம் சேர் மார்கெட் மேட்டரு சார். நான் கூட 10 ட போட்டு இருக்கேன். நான் ஏற்கனவே 1 ட போட்டு ரெண்டா மாத்திட்டேன் அதுவும் 5 மாசதுல . அது மட்டும் இல்ல நீங்க வேற யாரயாவது ரெபர் பன்னுனா கமிஷன் இருக்கு. அது மட்டுமில்லாம இப்ப சேர் வெல வேற ஏறி கிட்டே இருக்கு. நல்ல சான்ஸ் சார் மிஸ் பண்ணி றாதிங்க சொல்லிட்டேன்".
சதுரங்க வேட்டை படம் டையலாக் . ஒருத்தர ஏமாத்தனும்னா ஃபஸ்ட் ஆசைய தூண்டதும்.
" சார் 5 மாசதுல டபுள் ஆகுற மாறி ஏதாவது னா பரவால. ரொபர் லாம் நமக்கு வேனா சார் " - நம்ம ஆளு. சார் 5 நிமிஷம் இருங்க அந்த ஸ்கீம் இருக்கானு கேக்குறேன் சொல்லிட்டு கால் கட்டானது.
5 மாசம் 10 ட. அந்த 10 அடுத்த 5 மாசம் 20. அப்பா 3 வருஷத்துல கோடி . கார் | பங்களா. சூப்பர் கரைக்டா டைமிங் பாத்து வெற்றி கொடி கட்டு சாங் வேற பேக் கிரவுண்டுடல. ப்பா செம பாட்டு முடியவும் ஃபோன் வரவும் சரியா இருந்தது.
" சார் அந்த ஸ்கீம் இல்ல ஆனா 7 மாசம் ஸ்கீம் இருக்கு நாளையோட முடியுது சார்" . "சரி சார் நா நாளைக்கு காலைல வந்துடறேன்" - நம்ம ஆளு.
யாருகிட்டையும் சொல்ல கூடாது நாளைக்கு போறோம் குரோர்பதி ஆகுறோம்.நினைக்கும் போதே புள் அரிக்குதே. நல்ல வேள இன்சுரன்ஸ் , மியுச்சுவல் பண்ட் னு போட்டு ஏமாந்து றுப்போம். நாம இப்ப 5 ட போடுவமா இவங்க ஒரு 20 வருஷம் கழிச்சு குடுப்பாங்களாம்.
அடுத்த நாள் 5 ட போட்டு ஒரு காட்டு ஒன்று வாங்கிகிட்டு வந்து பீரோல பத்தரமா வெச்சார். அப்புறம் ரெபர் வேற ஒரு 10 பேர் ஒரு ட 2 ட கிட்டதட்ட ஒரு 15 ட ரெபர் பண்ணிட்டார் ஆதுவும் 5 மாசதுல.
திடீர்னு ஒரு ஃபிரண்டு கிட்ட இருந்து கால் நியூஸ் பாரு. பாத்தவருக்கு தூக்கி வாரி போட்டது அவர் பணம் போட்ட கம்பெனி மூடப்பட்டது கம்பெனி வாசல் முன்னாடி 200 பேருக்கு மேல அழுதுகிட்டு பணம் போச்சே. என்ன ஏதுன்னு நேர்ல போய் பாத்துடுவோம்னு வெளிய போய் வண்டி எடுக்கறது குள்ள அந்த 10 பேரும் இவரு வீட்டுக்கு வந்து திட்டுன திட் டு ல ஹார்ட் அட்டாக் வற.
ஹாஸ்பிடல், போலீஸ் னு ஒரு 2 ட போக . இவரு ரெபர் பன்னுவங்க டார்ச்சர்ல அவங்களுக்கு ரோசதோட செட்டில் பன்னதுல வீடும் போய் பையன் படிப்புக்கு செலவு செய்ய முடியாம நல்லா படிச்ச பையன ஏதோ ஒரு காலேஜ்ல கடன் வாங்கி சேத்து அவனுக்கும் சரியா வேல கிடைக்காம சொந்தகாரங்க கிட்ட தலை காட்ட முடியாம, வாழ்க்கையே மாறிடுச்ப்பா னு கண்ணீர் விட்டு திரும்பவும் அழ.
கொஞ்ச நேரம் கழிச்சு அவரே ஆசுவாச பட்டு. 20 வருஷம் கஷ்ட்டப்பட்டு சிறுக சிறுக சேத்து 30 L போட்டு விடு கட்டி 5 ட சேர்த்து நான் பன்னுன ஒரு சின்ன தப்புனால எல்லாம் மாறிடுச்சு. ஹார்ட் அட்டாக் லா பிஸினஸ் கவனிக்க முடியாம போக அதுவும் இப்ப கைல இல்ல. ஒரு காலத்துல கடனே இல்ல அன இப்பே கடன தவற வேற ஏதும் இல்ல. இப்ப கூட ஆர்டர் புடிக்கறதுக்கு ஒசூர் போய்டு வரேன். ஆர்டர் கிடைக்கறதும் கஷ்டம் தான். அடுத்தது என்ன பன்னறதுனு ஒன்னும் தெரியல.
நானும் என்னால முடிஞ்ச ஆறுதல் சொல்லிட்டு இருக்கும் போதே அவரு இறங்க வேண்டிய இடம் வற அவரும் நாளையாவது நல்ல விடியல் வரும் அப்படிங்கற நம்பிக்கையோட இறங்கினார்.
இது ஏதோ ஒருவருக்கு மட்டும் அல்ல நிறைய பேர் இப்படிதான். இன்வர்ட் மென்ட் என்பது ஒரு கலை. அத பத்தி முழுசும் தெரியாம ரெபர் பன்றதும் நாம பன்றதும் அது நம்மையே பாதளத்துல தள்ளிடும். எதையும் தெரிஞ்சுகாம ஒன்னுல குதிகறதும் நம்மல கஷ்டபடுத்தும்.
அவரு ஆதே 5 ட ல FD ல போட்டுறுந்தா 10 வருஷத்துல 8-10 ட வந்துருக்கும். அதே ஒரு நல்ல மிச்சுவல் ஃபண்ட் 12 - 15 ட. இதே ஒரு 10% டேர்ம் இன்சுரன்ஸ் அது ஃபேமலிக்கு ஃபனிபிட். மீதி M F & FD னா பையன் படிப்பு, பிஸினஸ் எல்லாம் ஈஸியா டேகிள் பன்னிறுக்கலாம். இல்ல நான் ரிஸ்க் தான் எடுப்பேன் னா Eicher, TCS, infosys , MRF னு சேர்ல இருந்த இன்னைக்கு அவரு ரேஞ்சே வேற.
Think before you Act மட்டும் இல்ல Study, Understand & Think before you Act தான் இப்போ முக்கியமான ஒன்று.
No comments:
Post a Comment
Thank you for sharing