Sunday, 18 December 2016

இன்சுரன்ஸ் - அடுத்த தலைமுறைக்கான இன்றைய முதலீடு

இன்சுரன்ஸ் - அடுத்த தலைமுறைக்கான இன்றைய முதலீடு .

இன்சுரன்ஸ் - வார்த்தையை கேட்டாலே உடனே ஞாபகத்துக்கு வரது. .... ஏஜென்ட். அந்த இன்சுரன்ஸ் போடுங்க, இந்த இன்சுரன்ஸ் போடுங்க.. அதனாலோ என்னவோ அந்த வார்த்தை ஒரு அலர்ஜியா போய்டிச்சு..

அடுத்து இன்சுரன்ஸ் அப்டினா உடனே நான் செத்ததுக்கு அப்புறம் கெடச்சி அத நான் என்ன பன்றது? இன்சுரன்ஸ் அது மட்டும் இல்ல. அத நாம தெரிஞ்சுகல அதுதான் பிரச்சனை.

சார் சப்போஸ் உங்களுக்கு எதாவது ஆச்சுனா...... இந்த வார்த்த தான் மிகப் பெரிய தாக்கத்த ஏற்படுத்துது. இப்ப நாம அத எப்படி முதலீடா மாத்துரதுனு பாப்போம்.

இன்சுரன்ஸ் ல பல வகை இருக்கு. அதுல இப்ப ஃலைப் இன்சுரன்ஸ் பத்தி மட்டும் தெரிஞ்சுக்கலாம்.

ஃலைப் இன்சுரன்ஸ் பொதுவா " நமக்கு பிறகான நம் அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டு செல்லும் ஒரு சொத்து "

நான் சொத்து எதுவுமே சேர்க்கல அப்புறம் எப்படி ? .

இந்தி்யாவில் சராசரி வயது கிட்டதட்ட ஒரு 70 னு கணக்கு போட்டுகலாம். இது எதுக்கு ஏன்னா டேர்ம் பாலிஸி அதிகபட்சம் 75 வயது வரை எடுக்கலம் சில கம்பெனி அதுக்கு மேலையும் கொடுக்கும். எது எப்படியோ 75 வயது மற்றும் அதுக்கு மேல . பெஸ்ட்டா இருக்கும்.

எப்படி எடுக்கறது?

ஆன்லைன் , ஆப்லைன் எப்படி வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனா இப்போ IRDA அறிவுறுத்தல் படி ஆன்லைன் கு மூவ் வாக போறாங்க. Repository ரீசண்டா அறிமுகம் செய்யப்பட்டது இது நம்ம பாலிஸிய டிஜிட்டல் முறையில் வைத்திருக்க உதவும். இதன் மூலமாவும் பாலிஸி எடுக்கலாம். எது பெஸ்ட்டுனு தேடி எடுக்க வேண்டியதுதான் நம்ம வேல.

எப்படி தேர்ந்தெடுப்பது?

நமக்கான வருட வருமாத்தை போல 10 மடங்கு சம் அஷர்டு இருக்க மாறி பாத்துகணும். இப்ப என்னோட சேலரி 5 லட்சம் Per இயர் னா அட்லீஸ்ட் 50 லட்சதுக்கு பாலிசி எடுக்கலாம்.

பிரிமியம் அதிகமோ?

இல்லை Life மட்டும் னா 3 K Per இயர் ல இருந்து பிரிமியம் ஸ்டார்ட் ஆகும் இது ஒவ்வொறு கம்பெனிக்கும் மாறும்.

வகைகள்?
இயற்கை மரணம் ( ஃலைப்)
ஆசிடன்டல் கவரேஜ் ( இயற்கைகு அப்பாற்பட்ட மரணம்)
கிரிட்டிகல் இல்னஸ் ( எதாவது கடினமான உடல் சம்பந்தப்பட்ட கஷ்டம் )

இது 3 ம் கவர் ஆகிற மாறியான பாலிஸி எப்படி மரணம் ஏற்ப்பட்டாலும் சம் அஸ்சூர்ட் கிடைக்கும்.

இதுலேயே பல வகை இருக்கு முக்கியமாக . மொத்தத் தொகையும் எடுக்கலாம், மாத சம்பளம் போலவும் பேமிலி க்கு ேபா ற மாறி செய்யலாம் .

எங்கு தகவல் பெறுவது?
இந்திய காப்பீட்டு நிறுவனங்கள் எல்லாம் IRDA கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது நாம் அந்த வெப்சைட் சென்று தகவல் பெறலாம்.

நிறைய சைட் கம்பேர் பன்றதுக்கு இருக்கு நாம கம்பேர் பன்னி எடுத்து கலாம். அதிலே கூட பாலிஸி எடுக்கலாம்.

இன்கம்டேக்ஸ்?
நாம் செலுத்தும் பிரிமியம் 80 C கீழ் வரும் அதற்கு 1.50 ட வரை வரி விலக்கு உண்டு.

இப்போ ஒருத்தரோட வருட சேலரி 3.0 L னா 2.50 L வரை வரி இல்லை மீதி 50 K க்கு 10% வீதம் வருடம் 5 K வரி கட்ட வேண்டும். அத அப்படியே இன்சுரன்ஸ் கட்டும் போது மினிமம் 20 ட முதல் 50 ட வரை கவர் செய்ய முடியும். நாம எடுக்குற பாலிசி வகையை பொருத்தது.

ஏன் இன்சுரன்ஸ் ?
வரி விலக்கு, அடுத்த தலைமுறைக்கான சொத்து .

சரியான நேரம் ?
வயது அதிகமாக பிரீமியம் அதிகமாகும் அதனால் 20 டூ 30 சரியான வயது.

ஒரு சின்ன கணக்கு இப்போ நான் 6 k வருஷா வருஷம் கட்டுறேன் இது அதிகமாகுமா? இல்ல.

பணவீக்கம் அதிகமாகும் போது நமது சேலரி அதிகமாகும் அப்போது 6 K ஒரு தொகையாக தெரியாது.

" சரியான நேரத்தில் எடுக்கப்படும் முடிவு எப்போதும் வாழ்க்கையை செம்மையாக்கும்" .

1 comment:

  1. I m paying around 80 k per year for LIC . I am hearing taking LIC policy is not profitable or beneficial? Is it true?

    ReplyDelete

Thank you for sharing