Saturday, 13 April 2019

ப்ளீஸ் இத படிக்காதீங்க .........

ப்ளீஸ் இத படிக்காதீங்க .........


அன்னைக்கு என்னமோ இங்கிலாந்துக்கு நேரம் சரியே இல்லை , அது அவ்வளவு பெரிய இழப்பை இது வரை சந்தித்ததும் இல்லை , கி பி 908 - டென்மார்க் மற்றும் நார்வே படைகள் செஸ்டர் என்னும் இடத்தை பிடிக்க முயற்சி செய்தன, இங்கிலாந்து படைகளால் அவ்வளவு பெரிய படைகளை சமாளிக்க முடியவில்லை , பின்வாங்கும் சமயம் - கிட்டத்தட்ட தோல்வி உறுதி ஆகிவிட்ட நிலையில் - எங்கிருதோ லட்ச கணக்கான தேனீகள் , டென்மார்க் மற்றும் நார்வே படைகளை ஓட செய்தது - இது மக்களால் ஏற்படுத்தப்பட்ட ஒரு தாக்குதல் , படைகள் கைவிடும் நிலையில், மக்கள் தங்களை காப்பாற்ற எடுத்த ஒரு முடிவு.

"உலகின் ஒவ்வொரு நிலையிலிலும் , ஒவ்வொரு ஜீவ ராசியும் தன்னை காப்பாற்ற எடுக்கும் ஒரு கடைசி முயற்சி - அதுதான் தன்னை நிரூபிக்க அதற்கான சந்தர்ப்பம்" 

உயிர்- அதுதான் அனைத்திற்கும் அடிப்படை, நாம் வாழ என்ன செய்யமுடியுமோ அதைத்தான் இங்கு ஒவ்வொருவரும் செய்கின்றனர். ஆதி காலம் தொட்டு வாழ எதாவது ஒரு வழி . " பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆதி மனிதன், குகைகளில் வாழத்தான், அவன் இலை தலைகளை உடுத்தினானான்"- ஆசிரியர் 

சார் எனக்கு அப்பா அம்மா இருக்காங்க, அப்போ முதல் மனிதனின் அப்பா அம்மா யாரு ? ஒரு மாணவனின் கேள்வி. ஏன்  உங்கள்ள பல பேருக்கு அந்த கேள்வி அந்த சமயத்துல தோணிருக்கும் , ஆனா எவனோ ஒருவன் கேள்வி கேட்டுருப்பான்..... சார் கும் தெரியாம இருக்கலாம் இல்ல தெரிஞ்சிம்  இருக்கலாம் .... கடவுள் தான் அவன் அப்பா ...அம்மா .... நிறைய பதில் இப்படித்தான் உங்களுக்கு கிடைத்திருக்கும் .......ஆனால் உண்மை , அதை அறிவியலிடம் விடுவோம்........

உலகில் முதல் மனிதன் யார்? பெரிய கேள்வி ?? ஆனா ? பெண்ணா ? .
அறிவியல் பூர்வமாக அது ஒரு பெண்தான் ..... உலகின் கடைசி மனிதனும் ஒரு பெண்ணாகத்தான் இருக்கும். இது தெரிந்துதான் என்னவோ இந்தியர்கள் செஸ் விளையாட்டில் ராஜாவை விட ராணிக்கு அதிக பவர் கொடுத்தானோ என்னவோ. செஸ் விளையாட்டில் மட்டுமா  நிஜ வழிகையிலும் தான்......

இன்னும் மனிதனின் வரலாரே ஒரு விவாத பொருள் தான். எது எப்படியோ ஒவ்வொரு முறை மாற்றங்களை ஏற்று கொண்டுதான் நம் இன்று ஓர் Z ஜென் மக்களாக வாழ்கிரும் . மனிதனின் ஒவ்வொரு நிலையிலும் அவன் அழிவின் விளிம்புக்கு சென்று தான் தன்னை மேம்படுத்தி கொண்டுள்ளான் - மூளையின் வளர்ச்சி - அனைத்தையும்  மாற்றியது. ஒவ்வொரு அழிவின் போதும் அவன் புதிதாய் பிறந்தான் - மூளையும் தான். " ஒருவிரலை காட்டி , இதுல ஒண்ண தொடு" என்பது போலத்தான் மனிதனின் பரிமாண வளர்ச்சியும். அவனுக்கு வேறு எந்த ஒரு மாற்றும் இருத்தந்த்தில்லை- மாற்றங்களை தவிர....

" உலகை பொறுத்த வரை - மாற்றங்களை ஏற்றுக்கொள் இல்லையேல் அது திணிக்கப்படும் - அதை நீ விரும்பாவிட்டாலும் கூட" .

மனிதனுக்கே இப்படி என்றால் அப்போ பூமிக்கு -  "அறிவியலை பொறுத்த வரை இன்று சரி எனப்படுவது - நாளை உடைக்கப்படும்- புதிதாக ஒன்று உருவாகும் ". இது வரை புரோட்டான் , எலக்ட்ரான் மற்றும் நியூட்ரோன் மட்டுமே இந்த பிரபஞ்சத்தை தோன்றிஇறுக்க கூடும் என் நினைத்ததை, "கடவுள் துகள் " உடைத்து போல. அது என்னவோ தெரியல ....

" கடவுள் எப்போதும் ஒரு புதிர் தான்- தனக்கு தெரியாததை , தன்னால் முடியாததை , தன் அறிவுக்கு எட்டாததை வேறுபடுத்தி காட்ட மனிதனால் உருவகப்படுத்தப்பட்ட ஒன்று அது கடவுள் மட்டுமே" . அப்போ கடவுள் இறுக்கறா ?? இல்லியா ??? இதுக்கு ஒரே ஒரு அறிவுப்பூர்வமான பதில் - நமக்கு ப்ரிச்சனை இல்லாத பதில் " தெரியாது" .

இது எப்படி பதில் ஆகும் ??- விடை தெரியாத கேள்விகளுக்கு பதில் கண்டுபிடிப்பதுதான் மூளையின் வேலையை. இன்னும் பல தலை முறைகள் கடந்து வேண்டுமானால் இதற்கு விடை கிடைக்கலாம் - அனால் அதுவே இறுதி ஆகும் . அது எப்படி நம்மக்கு தெரியும் . "வாழ்க்கையின் சுவாரஸ்யமே இதுதான் , அடுத்தது என்ன நடக்கும் என தெரியாதுதான் ".

இது வரை ஒளி கூட தப்பிக்க முடியாத "பிளாக் ஹோல் " சமீபத்தில் கிளிக் செய்ய முடியும் என்றல் இதுவும் சாத்தியமே. "யாருக்கு தெரியும் நாமும் ஒரு பிளாக் ஹாலினுள் கூட இருக்கலாம்." எங்க ஆதாரத்தை காட்டு ...... பிளாக் ஹோல் உள்ள நாம இல்ல அப்படிக்கறதுக்கு ஓர் ஆதாரம் இருக்கா ??.......இன்னும் இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தை யாரும் முழுதாய் ஆராய்ச்சி செய்து முடிக்கவில்லையே ........ முடிச்சதுக்கு அப்புறம் தான அவங்களுக்கே தெரியும். அது வரை யாரு எது வேணும்னாலும் சொல்லலாம்......

"இன்னும் கூட நிறைய முழுதாய் அறியாத அறிவியல் திணிக்கப்பட்டு கொண்டுதான் உள்ளது " இத மறுக்கவும் முடியாது .

ஒளியே விட வேகமாக ஒன்று செல்லும் எனில் ஐன்ஸ்டன் போர்முலாஉம் கூட தவறாகிவிடுமே ........பல அறிவியல் கோட்பாடுகள் தவராகிவிடுமே.  அசுரத்தனமான அறிவியல் வளர்ச்சி நம்மில் பலரை அதல பாதாளத்தில் தள்ளிவிடுகிறது , சிலரை பிரமாண்ட வளர்ச்சி பாதைக்கு செலுத்துகிறது. அறிவியல் மற்றும் தத்துவந்திற கோட்பாடுகள் படி உலகம் சமநிலையை அடைய முயற்சி செய்கிறது . அதாவது சூடான ஒரு பொருளோ அல்லது குளிச்சியான ஒரு பொருளோ அறை வெப்பநிலைக்கு தள்ளப்படுவது போல .

ஆனால் உண்மைகள் வேறு விதமாக உள்ளது - மனிதனின் நிலைகளில் அதாவது உலகம் சமநிலையை அடைகிறது எனில் - அது பணத்திற்கும் பொருந்த வேண்டும் தானே ??? ஏன்  இல்லை?  பணத்துக்கும் , அறிவியலுக்கும் என்ன சம்பந்தம் ? - பணத்தை விட மாற்று வார்த்தை ஒன்று உள்ளது அதுதான் பொருளாதாரம் - பொருளாதாரம் எப்போதும் அறிவியலை சேர்த்துதான் இருந்தது ஆனால்  நவீன கால அறிவியயல் இன்று முழுவதும்  பொருளாதாரத்தை சார்ந்துதான் உள்ளது ... அதாவது பட்டன் போன் முதல் ஐ போன் வரை. இதனால் தன பல அறிவியல் கோட்பாடுகள் இன்றும் கண்டுபிடிக்க படாமலே உள்ளது. அறிவியல் சம நிலைய நோக்கி செல்கிறது என்றால் பொருளாதாரம் ஒரு வகையான உயர் நிலையை நோக்கியே சென்றுகொண்டிருக்கிறது அதனாலதான் இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் காரணமாக இன்றும் உலகம் அரைகுறையாக ஒரு முதிர்ச்சி அடையாமல் உள்ளது .

என்ன மேட்டுரிட்டி இல்லியா? ஆம் இன்னும் ஒரு மேட்டுரிட்டி வரவில்லை தான். அதாவது அரைகுறை அறிவு - இன்னும் சிறப்பாக சொல்ல வேண்டும் என்றால் உலகின் மெகா பெரிய வல்லுநர்களால் கூட தனக்கு தெரிந்த 100% புரிய வைக்க முடியாது அப்படி இறுக்க 50%, 25% தெரிந்தவர்கள் ளால் எப்படி 100% புரிய வைக்க முடியும்.

"இங்கு அடிப்படையில் தவறு ஏதும் இல்லை ஆனால் அடிப்படையே தவறாக - இன்னும் சிறப்பாக அரைகுறையாக உள்ளது ".இது எப்போதும் ஆபத்தை விளைவிக்கக்கூடியது .

சார் .. இவன் பொய் சொல்லுறன் சார் .. இல்லை சார் நான் சொல்லுறதுதான் உண்மை ... இந்த ஆர்குவேமென்ட் நிறைய பள்ளிகளில் நடைபெறும் . ஆன பதில் "எங்க உண்மையே நிரூபி..... ", உண்மையே நிரூபிப்பதிலே  அதிக நேரம் செலவனால் எவன் முன்வருவன். நேர்மையான ஒரு அதிகாரி பயந்து பயந்து வேலை செய்ய வேண்டியுள்ளது, உண்மை என்ன வென்று தெரியாமல் அனைத்தையும் facebook மற்றும் இன்னும் சில சோசியல் மீடியாக்களில் ஷேர் செய்யும் நம்மில் எத்தனை பேருக்கு மேட்டுரிட்டி உள்ளது. பல ஆண்டுகள் பல தடைகளை தண்டி வளர்த்த மரங்கள் ஒரே கட்டு தீயில் கருகுவது போல எதிர்மரையான விஷயங்கள் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் உண்மை தன்மை தெரியாமல் பரவிவிடுகிறது. அப்போது இன்னும் உலகம் அரைகுறையாக தானே உள்ளது.

பொருளாதார சமநிலையை நாங்கள் கொண்டு வருவோம் என கூறும் அனைத்து நாடுகளும் , கட்சிகளும் தங்கள் பொருளாதாரதிற்காக யாரிடமோ கையேந்தும் நிலையில் தான் உள்ளது ...டொனேஷன் இல்லாமல் ஒரு கட்சி செயல்படுமா என்ன? அப்படி இறுக்க அவர்களால் எப்படி பொருளாதார சமநிலையை கொண்டு வர முடியும்.
" இதுவரை ஏற்பட்ட பொருளாதார மாற்றங்களால் ஏற்பட்டது - கீழ் மட்டத்தில் உள்ளவர்களை நீங்கள் பொருளாதார முன்னேற்றம் பெற்றுவிட்டீர்கள் என் நம்ப வைத்ததும், பொருளாதார மேல் நிலையில் உள்ளவர்களும் கீழ் நிலையில் உள்ளவர்களுமனா வேறுபாட்டை (வித்தியாசத்தை) அதிகரித்தது தான் " பொருளாதார சமநிலையை அடையும் வரை உலகம் அரைகுறையாகத்தானே இருக்கும்.

"அடிப்படையே அரைகுறையாக உள்ளபோது எப்படி முழு ரிசல்ட் ஐ அறியமுடியும்."

சாணக்கியா டிவி இல் ஒரு கார்ட்டூன் அதாவது " ஓட்டுக்கு 1000 ரூபாய் அப்போ 5 வருசத்துக்கு கணக்கு போட்டா ஒரு நாளைக்கு 56 காசுகள்.... " அந்த கார்ட்டூன் மேலும் செல்வற்றே சொல்லிசென்றது .

" ஒன்னு மட்டும் புரியல, ஒரு வேலையே செய்ய யாராவது பணம் வாங்குவது லஞ்சம் என்றால் ஓட்டுக்கு பணம் வாங்குவதும் லஞ்சம் தானே " லஞ்சம் வாங்கி ஓட்டு போட்டுட்டு ஊழல் மலிந்து விட்டது என்றால் ? எனக்கு தெரிந்து உலகின் மிகப்பெரிய ஊழல் இதுவாகத்தான் இருக்கும். 

"இது மாறுமா? எனக்கும் தெரியாது பட் இத 'கடவுள்' இடமே விட்டு விடுவோம் - தெரியாத புதிர்களில் இதுவும் ஒன்றாக இருந்து விட்டு தான் போகிறது, பல மர்ம முடிச்சுகளில் மனிதன் மனமே மிக பெரிய முடிச்சு , கண்டிப்பாக அவிழ்க்க முடியாது - ஆனால் அதை அவன் அழகு படுத்தி திருப்தி அடைவான் என்பது மட்டும் உண்மை."  

இத படிச்சிட்டு நீங்க எதாவது யோசிச்சு வச்சுட போறீங்க. அப்புறம் எல்லோருகும் நீங்க " யார்டா இவன் லூசு மாதிரி ஒளறிக்கிட்டு இருக்கான் " அப்படிகங்கற பேரு  தான் கிடைக்கும் .அதுக்கு நான் பொறுப்பு இல்லை ...அதனாலதான் டைட்டிலே ப்ளீஸ் இத படிக்காதீங்க .....

இப்படிக்கு

அரைகுறைகளில் ஒருவன்.   















Sunday, 3 February 2019

ஸ்மார்ட் பித்தலாட்டங்கள் - ஸ்டார்ட் அப் ஸ்டோரீஸ் -3

ஸ்மார்ட் பித்தலாட்டங்கள் 
ஸ்டார்ட் அப் ஸ்டோரீஸ் -3





"கொலை காண்டுல இருக்கேன் மவனே கொல்லாம விடமாட்டேன்  " , ரஜினி சார் பேட்ட படத்துல சொல்லுற ஒரு மசான டைலாக் .....

உலகத்துலேயே இந்தியா ஆன்லைன் பிராடு களில் நம்பர் ஒன்

https://www.businessinsider.in/india-has-the-highest-rate-of-online-banking-frauds-in-the-world-report/articleshow/64369651.cms

" சார் நான் இந்த பேங்க் ல இருந்து மேனேஜர் பேசுறேன் உங்க டெபிட் கார்டு பிளாக் ஆயிடுச்சு, அத ஆக்டிவாட் செய்யணும் உங்க 16 டிஜிட் கார்டு நம்பர் சொல்லுங்க. உங்க கார்டு பின்னாடி இறுக்குற 3 டிஜிட் நம்பர் சொல்லுங்க, உங்க பின் நம்பர் சொல்லுங்க அப்பதான் ஆகிடிவேட் ஆகும் " ---டன்--- "ருப்பீஸ் ____ டெபிட்ட் பிரேம் யுவர் அக்கௌன்ட் லிங்கேட் கார்டு நம்பர் ___ , அவைளப்இல் பாலன்ஸ் இஸ் ____ " ---------" இந்த மெசேஜ் பாத்தவுடனே  உயிரே போய்டுச்சு சார் கஷ்டப்பட்டு செத்த காசு சார் , கஷ்டப்பட்டு சேர்த காசு சார் எதாவது பண்ணுங்க "--- இது டெய்லி எதாவது ஒரு பேங்க் ல நம்ம கேக்குற ஒரு நியூஸ் அ இருக்கும் . இதுக்கு அவருக்கு எந்த சொலுஷன்னும் கிடைக்காது .

முதல நாம ஏமாறுறோமா இல்ல ஏமாற்ற படுகிறுமா அத பாக்கணும் ,
ஒரு அஞ்சு வருசத்துக்கு முன்னாடி நம்ம பாக்கெட்ல பணம் இருக்கும் எக்ஸாம்ப்இல் ----500 ரூபாய்  கடைக்கு எடுத்து போனேன்னா பேரம் பேசி முடிச்ச அளவு கொறச்சு பேசி நம்ம பாக்கெட்ல பணம் எப்போவுமே இருக்குற மாதிரி பாத்துக்குவோம்.

ஆனா இப்போ ஸ்மார்ட் போன் வந்ததுக்கு அப்புறம் உட்கார்ந்த இடத்துல இருந்து ஜஸ்ட் ஒரு கிளிக் ல நினைத்தத ஆர்டர் பண்ணுறோம் - இல்லியா ?....
இப்போ ஒரு ட்ரைல் பண்ணுங்க எதாவது ஒரு பெரிய ஆன்லைன் ஸ்டோர்ல பொய் எதாவது ஒரு காடேகோரி ல கொஞ்சம் தேடுங்க , அப்புறம் கிளோஸ் பண்ணிட்டு அடுத்த நாள் பேஸேபுக்ல கொஞ்சம் ஸ்கோரல் பண்ணுன நீங்க நீத்து பாத்த கேட்டகோரி டிஸ்ப்ளை ஆகும்.

அதாவது நீங்க தேடுன ஒரு பொருளே இன்னொரு சைட் அல்லது ஆப் ல தெரியும் பொது உங்க டேட்டா எல்லாரதுக்கும் தெரியாத என்ன.......

பிலே ஸ்டார் அல்லது எதாவது ஒரு சைட் ல " நம்ப தகுந்ததாக இல்லாத ஒரு ஆப் டவுன்லோட் பண்ணும் போது நாமே தான் அந்த ஆப் கும் நமோட டாட்டா ஷேர் பண்ணுற அனுமதி வாங்குறோம் அது மட்டும் அல்லாது நம்ம போட்டோ , காண்டாக்ட் டீடைல் எல்லாம் அந்த ஆப் யூஸ் பண்ண அனுமதி கொடுக்கிறோம்." . இந்த மாதிரி நம்பத்தகாத ஆப் அல்லது வெப்சைட் ஓபன் செய்யும் பொது ஒரு வெள்ளை திரை தோன்றும் , நாம் உடனே கிளோஸ் செய்யமால் சிறிது நேரம் விட்டால் நம் தேட எல்லாம் காலி " நம் அணைத்து வங்கி சம்மந்தப்பட்ட அனைத்து விசயங்களும் அவர்களுக்கு சென்று விடும் " எப்படி ன நம்ம தேடல் எல்லாம் எல்லா வெப் சைட் யும் யூஸ் பண்ணுற மாதிரி பெர்மிஸ்ஸின் கொடுத்துருக்கமே.

" உங்களை பற்றிய சில பர்சனல் விஷயங்கள் உங்களளுக்கு மட்டும் தான் தெரியும் என சொன்னால் நீங்கள் உங்களையே  ஏமாற்றி கொண்டு இருக்கிறீர்கள் "

"ஒரு சில வெப் சைட் மற்றும் ஆப் ( பொதுவாக இன்சூரன்ஸ் மற்றும் லோன்) நம்முடைய மொபைல் நம்பர் என்ட்ரி இல்லாமல் அடுத்த ஸ்டேப் கூட போக முடியாது . இவர்கள் அவர்களுடைய ஆப் உள் நுழைவதற்கு பெயர் , முகவரி, மற்றும் பிறந்த தேதி பதிவிட சொல்லுவார்கள் நாம் பதிவிட்ட பின் , அந்த நம்பர் நேராக பிபிஓ முகவர் இடம் செல்லும் -> அந்த பிபிஓ கென்று தனியாக டார்கெட் ஒதுக்கப்படும் , அது முடியும் வரை நம்மக்கு கால் வந்து கொண்டே இருக்கும்--> இங்கு கவனிக்கப்படவேண்டிய விஷயம் என்னே என்றால் , உங்களுக்கு கால் செய்யும் நபர் கு இசுரன்ஸ் பற்றியோ , லோன் பற்றியோ ஈட்டவும் தெரியாது  அவர்களுக்கு அவர்கள் டார்கெட் மட்டுமே குறி" .

" சில பிபிஓ கல் அந்த டாட்டா களை அதாவது இன்சூரன்ஸ் காகா பெறப்பட்ட டாட்டா களை லோன் சம்பந்தப்பட்ட பிபிஓ களுக்கு விற்கும் , அந்த பிபிஓ கள் அந்த டாட்டா மூலம் லோன் சம்பத்தப்பட்ட (சிபில் மற்றும் இதர) , ரெபோர்ட்களை ஜெனெரே செய்து தகுதி உள்ள நபர்களிடம் கால் செய்து லோன் பற்றி கேட்ப்பார்கள் " இது ஒரு செயின் மாதிரி நீளும்.  இவை லீகல் லாக நடப்பவை.

" இங்கு  எல்லாவற்றிற்கும் விலை உண்டு , நீங்கள் வேண்டாம் என தூக்கி எறிந்த உங்கள் id ப்ரூப் ஸேராஸ் கும் தான் "

 
" வரும் காலங்களில் டெக்னாலஜி யூஸ் செய்யாதவர்கள் மட்டுமே துறவிகளாக இருப்பார்கள்".

 இ நீட் பிரைவசி எனக்கூறி செல் போன் யூஸ் செய்ய போய் அனைத்தும் அணைத்து மக்களுக்கும் தெரியுற மாதிரி ஆகிப்போச்சு. டிக் டாக், ம்யூசிக்கலி , பஸேபுக், என் நம் பர்சனல் டாட்டா போட்டு அனைவருக்கும் கட்டிவிட்டோம், ஒரு வழியாக மனிதன் மனிதனிடம் அடிமையாய் இருந்தது பொய் இப்போது டெக்னாலஜி அடிமையாய் எல்லா வீடுகளிலும் .

"அடிமைனு சொல்லாதீங்க வேணும்னா அடிக்ட் (Addict) னு சொல்லுங்க "

"பழைய காலத்து அடிமை ( Salve ) யை விட நியூ ஏஜ் அடிமை (ADDICT ) மிகவும் ஆபத்தான ஒன்று" 

இப்போது கூட நம் தரவுகள் எங்கேயோ யாரோ ஒருவன் பார்த்து கொண்டும் சேகரித்துக்கொண்டும் இருக்கிறான் ..........

டெக்னாலஜியை நம் வாழ்கைல புகுத்தவில்லை மாறாக நாம் அதனுள் புகுந்துவிட்டோம்.......

ட்ரிங் ட்ரிங் ......."ஹலோ " ." சார் 500 கு ஒரு ஒரு மொபைல் கிடைக்குது , உலகத்துலேயே மிக குறைந்த விலை சார், அபெர்ட்டுனிட்டி ஒரு தடவை தன சார், மிஸ் பணிராதீங்க , இன்னும் ரெண்டு நாள்ல முடிச்சுரும், நான் சொல்லுற நம்பருக்கு 200 டெபாசிட் போடுங்க 2 மாசத்துல டெலிவரி சார்"

எங்க இருந்துடா உங்களுக்கெல்லாம் நம்பர் கிடைக்குது
"கொலை காண்டுல இருக்கேன் மவனே கொல்லாம விடமாட்டான் " 

பித்தலாட்டங்கள் வளரும் ................




 



Tuesday, 29 January 2019

கட்டுறேன்.. எல்லாத்துக்கும் முடிவு கட்டுறேன். ஸ்டார்ட் அப் ஸ்டோரீஸ் - பார்ட் 2


வேர்ல்ட் கப் பீவர் - ஸ்டார்ட் அப் ஸ்டோரீஸ் - பார்ட் 2

எல்லோருக்கும் முன்பாக கிளம்பிவிடுங்கள், அப்போதுதான் தவறுகள் செய்தாலும் அதன் விலை குறைவாக இருக்கும் .
                                                                                - சஞ்சீவ் பிக் சான்டனி ( Naukuri.com).



இரு நாடு இடையே  மிகப்பெரிய போர் , ஒரு சிறிய  படை , பெரியப்படையுடன் மோதுகிறது ( 300 படத்தில் வருவதுபோல்). சிறிய படை கொஞ்சம் கொஞமாக வலு இழந்து  வந்தது , படைவீரர்கள் மத்தியில் ஒரு பயம், என்கே தோற்றுவிடுவோமா என்று ..... படை இன்  பின் பகுதி வீரர்கள் சிறிது , சிறிதாக பின் வாங்குகின்றனர். முற்பகுதி வீரர்களும் செய்வதறியாது பின் வாங்குகின்றனர், இதை கவனித்த படை தளபதி , வீரர்கள்  மத்தியில் வீர  வசனம் பேசுகிறார் - எதுவும் பயனளிப்பதாய் தெரியவில்லை, ஒரு கட்டத்தில் புறமுதுகு காட்டி ஓட வேண்டிய நிலை - அரசன் கவனிக்கிறான் " வீரர்களே ! கிட்ட தட்ட நம் தோல்வி உறுதி செய்யப்படும் நிலையில் உள்ளது, உங்கள் பயம் எனக்கு தெரிகிறது , நாம் இறுதியாய் ஒரு முயற்சி செய்வோம், நான் இந்த நாணயத்தை சுண்டி விடுகிறேன், தலை விழுந்தால் போர் செய்வோம் , பூ விழுந்தால் வந்த வழியே திரும்புவோம் " வீரர்களும் தலை அசைக்க - அரசன் சுண்டி விட்டான் - 20000 பேர்--- கிரிக்கெட் கிரௌண்ட் இல் போடப்படும் டாஸ் பார்ப்பது போல அனைவரும் ஆவலாய் பார்க்க -  விழுந்தது என்னவோ தலை எப்படியும் அரசன் விட மாட்டான் , சண்டை போடுவோம் - மீண்டும் விட்ட இடத்திலிருந்து ஆரம்பம் - கடந்த முறை நாட்டுக்காக ஆனால் இந்த முறை - ஒவொருவரின் உயிருக்காக - ஒருவன் தன் உயிருக்காக போராடும் பொது எப்போதும் இரண்டு மடங்கு சக்தியை வெளிப்படுத்துவான் என்பது அந்த அரசனுக்கு தெரிந்ததே அவன் காயின் இரண்டு பக்கமும் தலை இருக்குமாறு செய்த்திருந்தான் - போரின் முடிவு ----



சரியான கிரிக்கெட் பைத்தியம் , வேர்ல்ட் கப் பைனல் வேற , எப்போவுமே 8 மணிக்கு எந்திரிபவன் இணைக்கு -ஏர்லி மார்னிங் 3 மணிக்கே தூக்கம் வராம பெரண்டு பெரண்டு பைனல் ல இந்தியா ஜெயிக்குமா , 4 த் ஆம்பயர் ஆனது அவன் மூளை - காலைல 4 மணிலா இருந்து டிவில கிரிக்கெட் சேனல் போட்டு 10 மணிக்கு என்ன நடக்கும் ஜோசியம் பாத்தான் - கிட்டத்தட்ட 9.30 மணி , ரெண்டு கேப்டனுமும்  டாஸ் போடா, காயின் வானத்தை  நோக்கி ராக்கெட் ஆய் பறந்தது - சுவாரசியமாய் பாக்கும் போதே, ப்ளீஸ் ரிச்சார்ஜ் யுவர் டிஷ் டிவி  - செம கோவம். "டேய் மறந்ததே போனேன் , கரண்ட் பில் கட்ட இன்னைக்கு லாஸ்ட் டேட் - டிவி ரிச்சார்ஜ் இன்னையோட காலி நீ போய் கரண்ட் பில் கட்டுநாய்ன்னா நான் டிவி ரிச்சார்ஜ் பண்ண பணம் தரேன்" - அப்பா. 11 வருசமா eb பில் லே கட்டுனது இல்ல , போன மாசம் கூட போக மாட்டேன் னு அடம் பிடிச்சு 2 நாளா கரண்ட் இல்லாம இருந்தது - ஆனா இன்னைக்கு எல்லாத்துக்கும் சேத்து வச்சு செஞ்சுடாரே ...  ஏன் தான் இந்த அப்பங்களே இப்படி இருக்காங்களோ ....



"நம்ம பையன் கட்டிருவாங்க , இல்லைனா கிரிக்கெட் பக்க முடியாதே , இதுக்காக தான 4 மணி ல இருந்து காத்து கிடக்கான் " - அம்மா . 2 மாசத்துக்கு முன்னாடி அம்மாவோட அக்கா பொண்ணுக்கு கல்யாணம் காலைல 5 மணிக்கு போக அம்மா 4 மணி ல இருந்து எழுப்பி விட்டாங்க - ம்ம் எந்திரிக்கவே இல்லையே நான் போனதுக்கும் கல்யாணம் முடியரத்துக்கும் கரெக்டா இருந்த தே - அதுக்கெல்லாம் சேத்து பழி வாங்குற மாதிரியான ஒரு சிரிப்பு - என்ன ஒரு புத்திசாலித்தனம் . கட்டுறேன் எல்லாத்துக்கும் முடிவு கட்டுறேன் , பஸ்ட் பில்ல காட்டுறேன் அப்புறம் ஒன்னும் செய்ய முடியாது - கிரிக்கெட் பாக்குறேன் . ஐய்யயோ 30 நிமிஷம் தான் இருக்கு , ராகுல் வேற நான் எத பக்கலியோ அதைத்தானே சொல்லுவான். 30 நிமிஷம் eb லேயே செரியா போய்டுச்சு எவ்வளவு பெரிய கியூ ...... 10 மணி ரிச்சார்ஜ் கடைல அந்த ரி சார்ஜ் பண்ணுறவன் வர இன்னும் 15 நிமிஷம் ஆகுமாம் - அப்போதான் தெரிய்ஞ்சது ஒரு நிமிடத்தின் அருமை 15 நிமிஷம் ஆகுறதுக்குள்ள எவ்வளவு தடவ மணிபாக்குறது . ரி சார்ஜ் பண்ணுறவர் வந்தார் , கம்ப்யூட்டர் திறந்து ஏதேதோ பாத்து அட நெட்ஒர்க் இல்ல அப்படி இப்படினு 30 நிமிஷம் போச்சு. பாதி மேட்ச் காலி . போய் தொலை ஹயிலைட் ல பாத்துகலாம் --- என்னதான் இருந்தாலும் லைவ் ல பாக்குற மாதிரி வருமா? என்ன........



1.30 மணி நேரம் காலி , " இதெல்லாம் உக்காந்தா எடத்துல இருந்து 10 செகண்ட் குள்ள முடிஞ்சா எப்படி இருக்கும்"  . ம்ம் நல்லாத்தான் இருக்கும் . போன தடவ பஸ்ட்10 நிமிஷம் பாக்கத்துக்கு நாம அவனை போட்டு அந்த வாங்கு வாங்குனமே ,  நாளைக்கு இந்த ராகுல் போடுற சீன பாக்க முடியாதே. நாளைக்கு என்ன பண்ண போறன்னோ ........

Sunday, 27 January 2019

பேட்ட பராக் : பீனிக்ஸ்

பேட்ட பராக் :   பீனிக்ஸ்  

ஸ்டார்ட் அப் ஸ்டோரீஸ் -  ஓர் அறிமுகம் 


புதிதாக தொடங்கபட்ட வகுப்பு, +1 , 90s   கிட்ஸ் அனைவருக்கும் வாழ்க்கையின் முதல் அடியும் அதுதான், 8த் மட்டும் கஷ்டப்பட்டு நல்ல படி அப்புறம் ஒன்னும் கஷ்டம் இல்ல இதுதான் ஒவ்வொரு   பெற்றோருக்கும் மந்திரம், இதுக்கு முடிவே  கிடையாது - 10த் ,+2, காலேஜ் ,  கல்யாணம் , குழந்தை... டு பி கன்டினியூ ..........

 அந்த  வகுப்பில் ஒரு சலசலப்பு , புதிய மாணவர்கள் , புதிய பள்ளி,புதிய  டீச்சர் என எல்லாம் புதிது, முதல் நாள் முதல் வகுப்பு, சராசரி மாணவன் ரொம்ப தூரத்து குக்ராமமத்திலிருந்து வந்த பையன் , விவசாயம் தவிர எதுவும் தெரியாத ஒருவன் , அவனுக்கு அவனையே மற்றவர்களிடம் அறிமுக படுத்த பயந்தவனாய் , 10 மாணவர்கள் உள்ள பழைய ஸ்கூல்ல அவன்  தான் முதல் மாணவன், ஆனா இப்போ 60 பேர் ஒரு செக்க்ஷன்கு மொத்தம் +1 ல மட்டும் 10 செக்க்ஷன் . நிறைய பேர் முதல் பெஞ்ச் கு போட்டி போட்டு இடம் பிடிச்சாங்க , சிலர் கடைசி பென்ச் கு , போட்டியே இல்லாதது நடு பென்ச் - அதனாலதான் அவனும் நடு பென்ச், 

"இந்த நடு பென்ச் கு ஒரு லக் இருக்கு , அதாவது -  கிளாஸ் நடத்துறப்போ சவுண்ட் வந்த அது கடைசி பென்ச் (அது நாடு பென்ச்பேசினாலும்) , கேள்வி கேட்டாலும்  முதல் & கடைசி பென்ச்  தான்". இது அந்த பையன் பக்கத்துல இருந்த ஞானி உடைய தியரி. அவன் தியரி படியே அந்த வகுப்பும் முதல் பென்ச் ல இருந்து தான் ஸ்டார்ட் ஆச்சு , 

கேள்வி- +2 முடிச்சு நீங்க என்ன படிக்க போறீங்க , அப்புறம் என்ன ஆக போறீங்க. நடு பென்ச் அதனால  டைம் எடுத்துக்கலாம் , "சார் யாருக்கு சூப்பர் னு சொல்லுறாங்களோ அந்த கோர்ஸ் சொல்லுவோம் , அதே மாதிரி அந்த ஜாப் சொல்லுவோம் . யாரும் வித்தியாசமாய் எதுவும் சொல் போறது இல்ல  எல்லாரும் IT தான் னு சொல்லுவாங்க" இது  பக்கத்துக்கு பிரகஸ்பதி தியரி. எங்க பாத்தாலும் நான் இன்ஜினியரிங் படிக்க போறேன் , IT  வேல கிடைக்கும் ,  கை நிறைய சம்பளம்- அவனும் விதி விலக்கு இல்ல - "தம்பி முன்ன மாதிரி விவசாயம் இல்ல, தண்ணி இல்ல, கூலி அதிகம் கேட்குறாங்க, நிலத்தை வித்தாவது உன்ன இன்ஜினியரிங் படிக்க வைக்குறேன் , நீயும் அந்த மார்த்தாண்டம் மவன மாதிரி கம்ப்யூட்டர் கம்பெனி ல சேந்துரு - உன் வாழ்க்கை நல்ல இர்ருக்கணம்". இது அவன் அப்பா அவனிடம் சொன்ன வார்த்தைகள், அவனும் என தலை அட்ட - ஊருல இருந்து 25 km தொலைவில் இருக்கும் பட்டணத்து பள்ளிக்கூடம் - அதுவும் தனியார் பள்ளி அரசு மானியத்துடன் இயங்கும் பள்ளி. 

" எம்ம்ப துறை , நீ உன் பையனை அந்த ஸ்கூல் ல சேத்து விடு , அங்க இருந்து தான் நிறைய பேர் இன்ஜினியரிங் சேந்துருக்கானுங்க , கொஞ்சம் செலவு அதிகம் தான் ஆன - கொஞ்சம் உன் மவன்  கஷ்ட பட்டு படிச்சான் அவன் வாழ்க்கை யே மாறிடும், நம்ம சின்னராசு மவன  பாரு இன்ஜினியரிங் முடிச்சு இப்போ வெளிநாடு பொய் கட்டடம் கட்டடமா கட்டுறான் " . இது அவங்க அப்பா வோட நண்பன்.அவரும் அங்க இங்க அழைத்து ஒரு வழிய அட்மிஷன் வாங்கிட்டாரு. காலை 7 மணி ஸ்கூல் பஸ் - இரவு 9 மணி ட்ராப் இது தான் அவன் ஒரு நாள் அட்டவணை .   

ரொம்ப ஆவலுடன் முதல் நாள் வகுப்பு , 60  பேரை  பாத்தவுடன் அட்ரினல் சுரப்பி ஆ ளுடன் சுரக்க, கேள்வி அவன் அருகில் வர வர , படபடப்பு அதிகம் ஆகத்தான் செய்தது -  "IT  கோர்ஸ் சார் வீடு கட்ட போறேன்" கிளாஸ் சே கொள்ளு னு ஒரு சிரிப்பு - "  ஒரு வேல IT படிச்சா வீடு கட்ட முடியாதோ - அவனுக்கே வெட்கமாய் போய்ச்சு ,  பாய்ஸ்  விட  கேர்ள்ஸ்ம் சிரிக்குறத பாத்த ஒரே சஹ்ய போய்டுச்சு - நல்ல வேளை அப்போ ட்விட்டர் , மீ ம்  லாம் இல்ல இருந்தா அவன்தான் அணைக்கு ட்ரெண்ட். இன்னைக்கு முதல் நாள் அதனால கிளாஸ் எடுக்க போறது இல்ல ஆனா  ஒரு குட்டி கதை

 " கலிலியோ இறந்து  300 ஆண்டுகளுக்கு பின்பு அதாவது ஜனவரி 08/01/1942, அவர் பிறந்தது ,காஸ்மோலஜி இல் அதிக ஈடுபாடு கொண்டவர்,கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் காஸ்மோலஜி படித்து கொண்டிருந்தபோது, தீடீர் என்று ஒருநாள் கை நடுங்க ஆரம்பித்தது , கால் இடற ஆரம்பித்தது , சரியாக நடக்க முடியாமல்  போனது,  நிறைய நாட்கள் ஹாஸ்பிடல்- நிறைய டெஸ்ட் கல் - எதோ அவர் உடல் தவறானது போன்ற மாற்றம், மற்றவர்கள் போல் உடல் வலிமை இல்லமால் போனது, சாப்பிட, தூங்க , இயல்பான எந்த வேலையும் செய்ய முடியாமல் போனது, டாக்டர் ஆல்  முடியாது - நிலைமை இன்னும் மோசமானது அதனுடனே தன்னுடைய Phd படிப்பை தொடர்ந்தார், தினமும் நிலைமை மிக மோசமானது , ஒவொரு நாள் கண் விழிக்கும் நேரம் மட்டுமே அவருக்கு தெரிந்தது இன்னும் உயிருடன் இருக்கிறோம் என்று,  ஒரு நாள்  அவர் குரலும் போனது,வீல் ஷேர் அவர் வீடானது , இருந்தும் அவர் மூளை ஒவொரு நாளையும் புதிதாக தொடங்கியது, நோய் அவரது  உடலை முடக்கலாம் ஆனால் அவர் அறிவை அல்ல, சராசரி மனிதர்களால் நினைத்து கூட பார்க்க முடியாத பல விண்வெளி சம்பந்தமான புதிர்களுக்கு விடை கண்டவர் - அவர் தான் விண்வெளி  ஆய்வாளர் ஸ்டவேன்  ஹெவ்க்கிங்ஸ் -  பீனிக்ஸ் ".   நான் ஒன்னும் போர் அடிக்கல்ல என கூறுவதற்கும  மணி அடிக்கஉம் சரியாக இருக்க டீச்சரும் ஒரு சிரிப்பு சிரித்து  ஓ கே ஸ்டுடென்ட்ஸ் வி வில் மீட் டொமோரௌ .......






Sunday, 12 November 2017

20 ரூபாய் முதலீடு - ஐடியா - சொல்லி அடிப்போம்.

" டெல் மீ சம்திங் அபோட் யூ?" . " சோ யுவர் ரெஸ்யூம் ". இந்த வார்த்தைகளை கேக்காத இன்டர்விய்வோ (அ) இன்ஜீனியரோ இருக்க மாட்டாங்க. இதுக்கும் முதலீட்டுக்கும் என்ன சம்பந்தம்?..... இருக்கே ..... மச்சி உன் ரெஸ்யூம கொடேன், நான் பேர மட்டும் மாத்தக்கறேன்னு அவசர, அவசரம ஒரு ஃபிரெண்டு கிட்ட ரெஸ்யூம் வாங்கி ஏப்படியோ இன்டர்வியூ போய், அங்க இன்டர்வியூல.... யெஸ் டெல் மீ சம்திங் அபோட் .Net... அப்போ தான் அவனுக்கு தெரியும் நாம மெக்கானிக்கல் என்ஜின்யர் நம்ம ஃபிரெண்ட் சி எஸ் இ னு.

முதலீடும் இந்த மாதிரி தான். யாரோ பேசுறத கேட்டுட்டு 10 நிமிஷத்துல முடிவு எடுத்தா தப்பாதான் இருக்கும். ஆற அமர யோசிக்கனும். " சார் இந்த ஃபண்ட் உங்களுக்கு கூட் ஆகும், இந்த பாலிஸி தான் பெஸ்ட், இந்த சேர் ரிட்டர்ன் செம " அப்படீனு சொல்ற ஏஜெண்ட்டுக்கு அவங்க டார்கெட் தான் தெரியும் நம்ம டார்கெட் இல்ல.

கொஞ்சம் யோசிப்போம் .....
உங்க வலது காலை கடிகார எதிர் திசையிலும், உங்க இடது கையை கடிகார திசையிலும் சுற்றுங்க... இப்போ நீங்க இத செஞ்சு பாத்துகிட்டு இருந்தீங்கனா, தெரியும் அதோட கஷ்டம். நம்ம மூளை அதுக்கு தயாரா? இல்லையானு? தெரியனும்.

ரோஜர் ஸ்பெர்ரி என்ற நோபல் பரிசு பெற்ற பேராசிரியர்தான் முதல் முதலில் இட வல மூளை செயல்பாட்டை கண்டறிந்தார்.

இடது பக்க மூளை - தர்க்கம் , அலசி ஆராய்தல் ( நியூட்டன் போன்ற விஞ்ஞானிகள் - இருப்பவற்றிக்கான தொடர்புகளை ஆராய்ந்து புதிர்களை விடுவிப்பவர்கள் )

வலது பக்க மூளை - கற்பனை, பெரிதாக சிந்திப்பது, முடிந்ததில் இருந்து முடியாததை நோக்கி பயணிப்பது ( ஷேக்ஸ்பியர் போன்ற இலக்கிய வாதிகள் - பூமி சூரியனை சுற்றுவதாக கோபர் நிகஸ் சொன்னதை ஏற்க மறுத்தவர் ) .

ரெஸ்யூமிக்கு வருவோம். அதாவது நாம யார்? நம்மளோட ஸ்ரென் த் என்ன? நாம சொல்லுற விதம். நாம சொல்லுறது மந்தவங்களுக்கு ஒரு கியூரியஸ் ஏற்படுத்தனும். ஒரு பழைய ரெஸ்யூம பாப்போம். அது 15ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.1452 ஆம் வருடம் டாவின்ஸி, மிலனின் ரிஜண்ட் லவடோவிகோ ஸ்ஃபோர்ஸாவிற்கு எழுதியது. அதில் அவரது ஸ்கில்ஸ் (Skills).

1 ) நான் லேசான , கனமான பாலங்கள் கட்டும் திட்டங்கள் உண்டு.
2) ஒர் இடம் முற்றுக்கை இடப்பட்டால், எப்படி தண்ணீர் வரத்தை நிறுத்துவது.
3) கோட்டை , அது மலைமேல் கட்டப்பட்டிருந்தாலும் அதை அழிக்கும் முறை
4) எளிதாகவும், வசதியாகவும் எடுத்துச் செல்ல கூடிய பீரங்கிகள் செய்வது.
5) பெரிய பீரங்கிகளின் தாக்குதலை தாக்கு பிடிக்கும் கப்பல் செய்வது
6) ஓவியத்திலும், கட்டடக் கலையிலும் நம் அரசுக்கு நிகர் யாரும் இல்லை என நிருபிப்பது.

இது தான் ஸ்கில்ஸ் ஒரு கம்பெனிக்கு (அரசுக்கு) தான் எப்படி தேவைப்படுவேன் என்று சுருக்கமாக கூறுவது.

இதேதான் முதலீட்டுக்கும் தேவை. நம்ம கைலை காசு இருக்குன்னு எல்லாம் செய்ய கூடாது. எது தேவையோ அதை மட்டும் செய்ய வேண்டும். "அடிக்கடி எவனாவது  படை எடுத்துக்கிட்டே இருக்கான், கட்டுங்க சீனப் பெருஞ்சுவரை " என்று வரும் காலத்தை பற்றி யோசிக்காமல் தன் முழு கஜனா வையும் காலி செய்து - பெருஞ்சுவரில் காவலுக்கு நின்ற காவலாலிக்கு கூட கூலி கொடுக்க முடியாமல் திணறியது. பின் எதிரி சில வெகுமதிகள் கொடுத்து சுலபமாக உள்ளே நுழைந்தான்.

நம்மில் பலரும் இப்படி தான். தேவைக்கு முக்கியதுவம் கொடுக்காமல் ஆசைக்கு முக்கியதுவம் கொடுத்து வருங்காலத்தை மறந்து விடுகிறோம். ஒரு சிலரோ வருங்காலத்தை மட்டும் பார்த்து நிகழ்காலத்தையும் மறைத்து விடுகின்றார்.

ஆப்பிள்

சொன்ன உடனே ஆப்பிள் ( பழமோ , போனோ) நம்ம மனகண்ணில் தெரிகிறது. அத தாண்டி நியூட்டன் , புவி ஈர்ப்பு விசை ஞாபகத்துக்கு வந்த நீங்க அடுத்த லெவல் .

சொத்து - நம்ம நினைவுக்கு வருவது வீடு, நிலம் ஆனா அத தாண்டி ஒரு சொத்து அது தான் நிதிச் சொத்து . இந்த வகையிலும் நாம யோசிக்க வேண்டும். நம்முடைய சிந்தனையில் மாற்றம் வர வேண்டும்.

மனிதன் 3 வகையில் வேலையை செய்கிறான்.

1 ) வேலை எப்போது முடியும் என்று கடிகாரத்தையும், சம்பளம் எப்போது கிடைக்கும் என நாட்காட்டியை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் ( இவர்கள் எப்போதும் ஒரு வட்டத்துக் குள்ளேயே இருப்பவர்கள் நிதி சொத்தை உருவாக்க முடியாமல் தவிப்பவர்கள் )

2) உயர்ந்த நோக்கம் இருப்பவர்கள் உரசினால். எரிய தயாராக,எந்த நேரமும் அலர்ட்டாக இருப்பவர்கள் ( சமயத்திற்காக காத்திருப்பவர்கள் கிடைத்ததும் சிறிது காலத்தியே வேலை வந்து விடுவார்ள்)

3) பசியை ஒதுக்கி, தூக்கத்தை துண்டித்து முதல் தாக்குதலை சந்தித்து மனிதர்களை வழி நடத்தும் மேன்மையானவர்கள் (அனைத்து அகச் சிறந்த பிரபலங்கள் ) .

சைரஸ் உடைய சிந்தனை நிதிச் சொத்தை உருவாக்க ஒரு மிகச் சிறந்த எடுத்துக் காட்டு.
" எந்தக் கட்டத்திலும் நம்பிக்கை இழக்கக் கூடாது. வாய்ப்பு வருகிற வரை அமைதி காத்து திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். பெருந்தன்மையான குணங்களை உடை தீர்மானிப்பது இல்லை, நடத்தையே தீர்மானிக்கிறது".

அப்பா,, ஞாயிற்றுக் கிழமை நல்லா தூங்கலாம். எப்போ லீவு கிடைக்கும்? என ஏக்கத்தில் இருப்பவர்களுக்கு ஓய்வைப் பற்றி எப்போதும் ஒரு தவறான கண்ணோட்டமே உண்டு.

ஒய்வு என்பது
"ஒன்றும் செய்யாமலிருப்பதல்ல; ஒன்றிலிருந்து இன்னொரு செய்கைக்குச் சென்று மூளையின் பயன் படாத பக்கங்கவும் புழக்கத்திற்கு கொண்டு வருவது. பணியை நேசிக்கிறவர்கள் எவ்வளவு நேரம் உழைத்தாலும் களைப்படைந்து காலவதி ஆவதில்லை. விரல்களையே நாராக மாற்றுபவர்கள் கைகளில் எப்போதும் மலர்கள் - மாலையாகின்றன. கைகளை தூரிகைகளாக மாற்றுகிறவர்கள் தொட்டால் துணிகள் ஒவியங்களாகின்றன. சிலருக்கு வாய் கொப்பளித்தால் வாலிபம் வந்து விடும். முகம் கழுவினால் போதும் முதுமை போய்விடும்.". சிலர் யங் கஸ்ட் ஓல்டு மேனாகவும், சிலர் ஓல்டஸ்ட் யங் மேனாகவும் இருக்கின்றனர்.

கி மு 14 79 ஆம் துட்மோஸ் ( எகிப்திய நெப்போலியன்) எப்போதும் கேளிக்கைகளிலிலும், உல்லாசங்களிலும் நேரம் களிக்கவில்லை மாற்றாக, அவன் முன் இருந்த சவால்கள் அவனை தூங்கவிடாமல் செய்தன. அது அவனை ஒரு முறை கூட தோல்வியை தழுவ செய்தது இல்லை. அவனது நிதானமான நடவடிக்கை, அழுத்தமான நுகர்வு - அவனை 20 ஆண்டுகளில் 17 படை டுயடுப்புகள் , எகிப்தை ஒரு சூப்பர் பவராக மாற்றியது.

சிந்தனையே மாற்றத்துக்கு வழி வகுக்கும். எவ்வாறு சிந்திக்கதிறோம் என்பதே நம்மை தீர்மானிக்கும்.
சற்று சிந்திப்போம்.

An example of a bird is????

ரொம்ப ஈஸியான கேள்வி. அப்போ இதுக்கு பதில் சொல்லுக்க ...

A bird is an example of__________________

சிந்திப்போம் .....

Sunday, 1 October 2017

பத்து தலை இராவணன் - பிம்பம்



அந்த யுத்த களத்தில, கிட்டத்தட்ட இறக்கும் தறுவாயில் அந்த உயிர் அவன் அனைத்தையும் கற்றுனந்தவனாய் அதிக வல்லமை படைத்தவனனாய், ஆனால் செய்த தவறுக்கான தண்டனையாய் தன் கடைசி மூச்சில் பத்து தலை இருந்தும், ஒரு தலையின் மூளை கூட சிந்திக்காமையின் காரணமாய், அந்த களம் பல உயிர்களை ஏற்கனவே பழி வாங்கியிறுந்தது.

" இலட்சுமனா.. நீ சென்று இராவணனிடம் உலகை பற்றி தெரிந்து கொள். பிரம்மனை தவிர வேறு யாரும் அவன் அளவு தெரிந்திருக்க வாய்ப்பில்லை" - இராமன்.
இலட்சுமனன் இரத்த வெள்ளத்தில் கிடந்த இராவணனின் தலையருகே சென்று " நான் உன்னிடம் உலகை பற்றி கற்றுக் கொள்ள வந்தேன்" என கூறி சில நிமிடம் நின்றார். பதில் இல்லை. இராமனிடம் வந்து நடந்ததை கூற.

" எந்த ஒரு மாணவனும் ஆசிரியர் தலை அருகே அமர்ந்து கற்றுக் கொள்ள மாட்டான் அவன் கால் அருகே சென்று அமர்ந்து கேள்"
இராமன் சொன்னபடியே செய்தான், அப்போது இராவணன்  சொன்ன 3 விஷயங்கள்.

அதை இந்த காலத்தோடு ஒப்பிட்டு பார்ப்போம்.

1 ) எந்த ஒரு முக்கியமான (அ) முக்கியத்துவம் வாய்ந்த செயலையும் தள்ளி போடாதே முடிந்த அளவு விரைந்து முடி.

பிரச்சனை என்னன்னா, எது முக்கியம் எது முக்கியமில்லை கிறதே நம்மள்ள பல பேருக்கு தெரியாது.

முதல் முதல்ல பிள்ளைய விஜயதசமில்ல ஏன் ஸ்கூல் சேத்தனும்?

பாக்கெட் ல 100 ரூ தான் இருக்கு, செம ஹோட்டல் பிரியாணி வாசம் முக்க தொலைக்குது அது 100 ரூ,  100 ரூ தவிர வேற காசு கையில இல்ல, சம்பளத்துக்கு 2 நாள் இருக்கு. இப்போ பிரியாணி சாப்டே ஆகனும், பிரியாணியா ? இல்ல 2 நாளா?

டெய்லி 20 ரூ மாசம் 600 ரூ, SIP 25 வருஷம் 15% கூட்டு வட்டி 17.42 L? இல்ல 20 ரூபாய் ஏதோ ஒரு தண்ட செலவு? 

எல்லோரோட ஃலைப் லையும் இப்படி தான் , இது முக்கியம் இது முக்கியமில்ல என பிரிக்க தெரியாம ஓடி இருக்கும், அல்லது ஒடி கிட்டு இருக்கலாம்.

ஒவ்வொரு ரெண்டு வருஷத்துக்கும் நம்ம முக்கியதுவம் மாறிகிட்டே இருக்கும். அத கண்டுபிடிக்க ஐன்ஸ்டீன் அளவு மூளை வேணாம். குறைந்தது நம்ம 10% மொத்தமா வேல செய்யுற மூளையை கொஞ்சம் வேல செய்ய வைப்போம். எப்போவும் நம்ம கண்ணும், காதும் நம்ம முக்கியத்துவத்துக்காக திறந்தே இருக்க வேண்டும்.

2) உன்னுடைய எதிரியை எப்போதும் குறைத்து மதிப்பிடாதே.

புராண காலத்துல வேனும்னா எதிரி வேற ஒருவனா இருக்கலாம். ஆனா இப்போ நமக்கு நாமே எதிரி தான்.

சத்தம் போட்டு ஒரு பொய்யை சொல்லும் போது உண்மை தூங்கும் னு நினைக்கறது,

ஒரு வேலையை செய்யும் போது வேண்டா வெறுப்பா செய்யுறது.

காட்டுகத்து கத்துற மேலாளர் நாமளும் அங்கிருந்து தான் வந்தோம்னு நினைக்காதது. இவன் என்னா சொல்லுறது , நாம என்ன கேக்குறது னு நெனைக் குற வேலையாள் தானும் ஒரு நாள் அந்த இடத்துக்கு போவோம்னு நெனைக் காதது.

14 மணி நேரம் வேலை செய்தும் 2 மணி நேரத்துக்கான முழு வேலையை செய்யாதது. வேலை செய்யுற இடத்துல முழு மனசோட வேலை செய்யாம இருக்குறது.

செம , அவன ஏமாத்திட்டோம்னு சந்தோச படும் போது நம்மள நாமே ஏமாத்தி கிட்டு இருக்கோம்னு தெரியாதது.
பிரச்சணை போட வேர் தெரியாம அத மேலோட்டமா தீக்குறது.

வீட்டுல இருக்குற பிரச்சன என்னனு தெரியாம சீரியல், ரியாலிட்டி சோ போன்ற பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் நாட்டம் செல்வது. 

" உங்க வீட்டுல இருக்குற பால கொண்டு வந்து இந்த பெரிய அண்டாவுல தனித் தனியா ஒருத்தர் ஊத்துறது மத்தவங்களுக்கு தெரியாம ஊத்துங்க, நான் அந்த பால வச்சு வருஷம் முழுவதும் உங்க வீட்டுல பால் பிரச்சனை இல்லாம பன்னுறேன் னு ஒரு முனிவர் ஒரு கிராமத்துல சொல்லுறார். ஊர்ல இருக்குற எல்லாரும் ஒங்வொருத்தரா கொண்டு வந்த ஊத்துறாங்க, " இப்போ, இந்த பாத்திரத்துல அந்த அண்டால இருக்குற பால கொண்டு வரேன் னு, மந்தரத்த முனு முனுத்தார், ஆனா பால் வரல, என்னடானு பாத்தா, அந்த அண்டா முழுவதும் தண்ணி. அவன் பால் ஊத்துவான், இவன் ஊத்துவான் , நான் ஏன் ஊத்தனும், என்று சொல்லி ஒவ்வொருவரும் தண்ணி ஊத்த, அண்டா மொத்தமும் தண்ணி ".

இப்போ ஒவ்வொருத்தரும் தனக்கு, தான், தான் எதிரினு தெரியாம, என்ன செய்யுறோம்னு தெரியாம, " தான் " என்ற ஒரு பெரிய எதிரியை வளக்குறோம். கண்ணுக்கு தெரியுற எதிரியை கூட ஜெயிச்சுரலாம், ஆன இந்த எதிரி நமக்கு மட்டும் இல்லை -  " நான் ஒருத்தன் வேல செய்யாதால் இந்த கப்பெனி முடங்கியா போயிற போவுது?" உண்மை என்னன்னா "இல்லை". இப்படி பல பேர் நினைத்தால் ????

3) ஒரு போதும் உன்னுடைய இரகசியத்தை வெளிபடுத்தாதே.

" இரகசியம் உன்னிடம் உள்ளவரை அது உனக்கு அடிமை, இல்லையேல் அதற்கு நீ அடிமை" .

 சிறந்த எடுத்து காட்டு சோசியல் மீடியாவில் தன்னை பறைசாற்றுவதற்காக தன்னை பற்றி இடப்படும் ஸ்டேடஸ்கள். ஒரு ஆணிற்க்கு அது ஒரு பெரிய விஷயமாக தெரியாது, அனைவரும் அதை நிராகரித்து விடுவார்கள் ஆனால் பெண்களுக்கு ???? தினமும் ஏதாவது ஒரு வகையில் சோசியல் மீடியா விடம் பெண்கள் , ஆண்கள் என ஏதாவது ஒரு வலையில் விழுந்து விடுகின்றனர். அது பிறகு மூங்கில் காட்டில் பரவும் தீ போல பரவி விடுகிறது. முக்கால் வாசி புதியதாக சோசியல் மீடியா உள் வருபவர்களுக்கே இந்த நிலமை . 

"நான் ரொம்ப டிப்ரஸ்ஸா இருக்கேன்னு, ஐ வான்ட் டூ டாக்' டூ சம் ஒன் ரீ கார்ஸ்" னு பேஸ்புக்லயோ, வாட்ஸ் அப் லயோ ஸ்டேடஸ் போடுற பசங்கள விட பொண்ணுங்களுக்கு வறுகிற " கமெண்ட் " ஆறுதல்கள்  அதிகம்.  இத சொல்லியிறுக்க வேண்டாமோ என்கிற அளவுக்கு கமெண்ட்டுகள்.

வன்மம், வன்முறையை விதைத்து விட்டு நான் அதற்கு பொறுப்பள்ள என ஜகா வாங்கும் சினிமாக்கன். அதற்கு மேலான சீரியல்கள், இவ்வளவு தான் என்று சொல்ல முடியாத அளவுக்கு மோசமான ரியாலிட்டி சோக்கள், என்று எல்லாமே நம்முள் விதைத்த மாய பிம்பங்கள் .
இவைகள், மிக பிரம்மாண்டமாய் உருவெடுத்த ஒரு மாய வலை -  பேசுகிற எல்லோரும் நல்லவர்களாய் தெரிகிற சோசில் மீடியா - ஆசுவாசபடுவதற்குள் அரங்கேறும் அசிங்கங்கள் - தொடரும் பிளாக் மெய்கள்- உருளும் தலைகள் - என்னற்ற கற்பனைகள்- அந்தரங்கத்தை சேர் மற்றும் டேக் செய்கின்ற துரோகங்கள், எல்லாம் இன்று வெறும் கையடக்கத்தில் .

நாகரீகம் என்ற பெயரில் அநாகரீகமாய் திரியும் அவலங்களாய் காலம் உருண்டோடிக் கொண்டே இருக்கும்.
கதாநாயகனாய் இருக்கும் நம் இரகசியம் - வெளிபடுமாயின் நாமும் கோமாரிகள் தான். நாம் அழ மற்றொருவர் சிரிக்கும் அந்த காலம் வெகு தூரம் இல்லை. - இரகசியத்தை இழந்தோமானால்.

இராவணனுக்கோ பத்து தலை தான். ஆனால் இங்கு நம்முடைய தலை ஏதோ ஒன்று தான், ஆனால் முகமூடிகள் ஆயிரமா? லட்சமா? தெரியாது.

கயிறை பார்த்து பாம்பு என அலறுவதும்,
" இருட்டுல ஏன் பயப்படுற?" - " பேய் ஏதாவது இருந்தா,?" - "ஏன் இருட்டுனா பேய் மட்டும் தான் வருமா? கடவுள் வராதானு" - கேக்குற அறிவுடமை வரும் வரை இருட்டுல பயந்து கிட்டே தான் இருக்கனும்.

நீ பார்க்கும் கண்ணாடி கூட மாய பின்பம் தான், ஏனெனில் இடவல மற்றம் உண்டு. அதையும் உண்மை, அத்தனையும் உண்மை என என்னும் நம் மனம் – நம்முள்ளான "நான் " என்னும் "என்னை " அறியாத வரை  புராண இராவணனை ஒவ்வொரு விஜய தசமியிலும் வித விதமாக கொல்லலாம். ஆனால் நம் முள் பல முகமூடிகள் கொண்ட இராவணனை????

Saturday, 9 September 2017

கொஞ்சம் யோசிச்சுதான் பாப்போமே




அந்த வகுப்பில் மொத்தம் 50 மாணவர்கள், பேராசிரியர் அனைவரிடமும் ஒரு பலூனை கொடுத்து தங்கள் பேரை எழுத செய்தார், பின் அந்த பலூன்களை ஒரு ரூமில் போட்டார். மாணவர்களிடம் 10 நிமிடத்தில் தத்தம் பேர் எழுதிய பலூன்களை எடுக்க சொன்னார் ஒட்டு மொத்தமாக வகுப்பு கிளம்பியது தேடியது ஒரு சிலரால் மட்டும் எடுக்க முடிந்தது மற்றவர்கள் வெறும் கையுடன் திரும்பினர். 



இப்போ அந்த பேராசிரியர் கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசிக்க செய்தார் அது ஒன்னும் "அவுட் ஆஃப் பாக்ஸ் " யோசனை அல்ல அது இருக்கும் போசனையில் சிறப்பான யோசனையை தேர்ந்தெடுப்பது, அதாவது எல்லோரும் போய் ஏதாவது ஒரு பலூனை எடுங்கள் பின் அதில் எழுதியுள்ள பேர் யார்னு பாத்து அவரிடம் கொடுங்கள் பல என் எடுக்க 1 நிமிஷம் கொடுக்க 2 நிமிஷம் மொத்தம் 7 நிமிஷம் மிச்சம்.



இந்த ஸ்மார்ட்னஸ் தான் நாம வாழ்கையில் சேமிக்க மிஸ் பன்னுற ஒரு விஷயம் அதாவது நம்ம கையில பணம் இருக்கும் போது உடனே செலவு செய்யுறது அப்புறமா சேமிக்கறது, தலைகீழ் சேமித்தது போக தான் செலவு. 

ஒரு பெரிய ஹால் ஒரு 1000 பேர் கேட்க, அந்த ஒருகிணைப்பாளர் பேசுகிறார் " வாழ்க்கை நிலை இல்லாதது அதனால இன்றைய வாழ்க்கையை வாழ்ந்துகோங்க, நாளைக்கு ன்னு எதுவும் இல்ல, இன்னைக்கு நல்லா எஞ்சாய் பண்ணுங்க". அதற்கு நல்ல கைத்தட்டல். வெளியே வந்த ஒருவரிடம் என்ன புரிந்தது னு கேட்டதற்கு என்னப்பா இப்போ என்ன இருக்கோ அத இப்போ வே எஞ்சாய் பணனும். " புரியல னா? கொஞ்சம் தெளிவா சொல்லுங்க, " அதாவது இன்னைக்கு ஏன் கையில் ஒரு 100 ரூ இருக்கு அத இன்னைக் கே செலவு செய்யனும் ஏன்னா நாளைக்கு னு ஒன்னு இல்ல". 



கொஞ்சம் யோசிப்போம்....
எப்பவுமே நாம ஒரு விஷயத்தை எப்படியுமே நம்மளோட பணத்த வைச்சு தான் முடிவு எடுப்போம். அது ஒரு எடுத்துக் காட்டா இருந்தாலும் சரி. 

நாளைக்குன்னு எதுவும்  இல்ல அப்படின்னு சொன்ன நிகழ்ச்சி ஒருகிணைப்பாளர் ஒன்னும் சும்மா அத சொல்லுல " சார் அதான் சொன்னீங்களே, உங்களுக்கு பேமெண்ட் வேணும்?" கேட்டா " இல்லப்பா வேணாம்" னா சொல்ல போறார். அவர் சொன்ன விஷயம் வேற நாம புரிந்து கொண்டது வேற.



நிறைய விஷயங்கள் இப்படி தவறான புரிதலோடு தொடங்குகின்றன, முடிகின்றன " நமக்கு தெரிஞ்ச ஒரு   பைனான்ஸ் இருக்கு இன்னைக்கு நூறு அடுத்த மாசம் 200 " . இங்க நாம யோசிக்க மறந்த விஷயம் " எப்படி ". நார்மல இந்த மாதிரி விஷமங்கள் எப்படி பரவும்னா 

அந்த கம்பெனி ஃபர்ஸ்ட் ஒரு 10 பேர செலக்ட் செஞ்சு இந்த மாதிரியான விஷங்களை மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பரவ விடுவார்கள் அதாவது ரெண்டு பேர் ஒரு சம்பெனி ய பத்தி ஆஹா ஓஹோனு பேசுவாங்க பக்கத்துல இருக்க வன் பர்ஸ்ட் நாள் காது கொடுத்து கேப்பான். அடுத்த நாள் வேற ரெண்டு பேர் அதே இடத்துல பேசுவான் இப்போ முன்னாடி நாள் காது கொடுத்து கேட்டவன் இப்போ நேராவே கேட்பான். இந்த மாதிரி ஒரு சங்கிலி தொடர் மாதிரியே போகும் இவங்க டார்கெட் எல்லாம் நடுதர மற்றும் ஏழை மக்களே. 

இப்படி வேறு நபர்களிடன் ஏமாறுவது மட்டும் இல்லாம நம்மள நாமளே ஏமாந்திகிறோம். அது எப்படினா ?

நம்மளோட ஹல்த் செக்கப் மாதிரியே வெல்த் செக் கப்பும் முக்கியம் தான் . கொஞ்சம் யோசிப்போம.....

First best than next , than rest இது தாள் பினான்சியல் சொத்து உருவாக்க முடியும். அதாவது சிறந்த நீண்ட கால முதலீடு (இன்சுரன்ஸ், நீண்ட கால மியூச்சுவல் பண்ட், .ஹல்த் இன்சுரன்ஸ் ) அடுத்து next ( குறுகிய கால மியூச்சுவல் பண்ட், டெபாசிட், பங்குகள், இதர முதலீடுகள்) அடுத்து Rest ( ஆடம்பர பொருள்கள், இ எம் ஐ கள் ). ஆன இப்போ எல்லாம் தலைகீழ் நிலையான சொத்தை உருவாக்க வரும் கால பினான்சியல் சொத்தை இழக்கும் அபாயம் தற்போது சேர்ந்து உள்ளது. 

லைப் இன்சுரன்ஸ் - "சார் நா இருக்கும் போது எனக்கு இல்லாத பணம், நா செத்ததுக்கு அப்புறம் எதுக்கு ?" .. ஒரு விஷயம் எப்பவுமே நமக்கு 100% தெரியும்னு நெனைக்கிற விஷயம் நமக்கு முழு சா 1% தான் தெரியும். இங்கையும் அதே தப்ப தான் செய்யுறோம். 

சில கேள்வி கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க......
1) எதுக்கு நாம சொத்து சேக்குறோம்?
2) எதுக்கு பணம் சேக்குறோம்? 
3) எதுக்கு நல்ல பேர் வாங்கனும்?

இதெல்லாம் யாருக்கு ? 

பேமிலி, நம்மள நம்பி இருக்கவங்களுக்கு சரியா? அப்போ லைப் இன்சுரன்ஸ்,? அதுவும் அவங்களுக்கு தான.....



அடுத்து, ஒருத்தர் தொழில்ல ரொம்ப இழப்பு ஏறக்குறைய எல்லா வழிகளையும் செய்து விட்டார். அவர மாதிரே அதே தொழில் ல தோல்வி அடைந்து அவரும் எல்லா வழிகளையும் செய்து விட்டார். ரெண்டு பேரும் ஒரு நாள் ஏதேச்சையாக சந்தித்துக் கொண்டனர். ஒருத்தர் சொன்னார் " ஏன் நீங்க சொஞ்சம் கடன் வாங்கி இன்னொரு தடவ முயற்சி பண்ண கூடாது?" அட ஆம இதுவும் சரியான யோசனை தான். இது தான் பெரிய தப்பு. ரெண்டு பேரும் தோத்தவங்க, எப்படி ஒரு தோத்தவர் இன்னொருத்தருக்கு சக்ஸஸ் ஆக ஐடியா கொடுக்க முடியும். 


யோசிச்சு பாருங்க 1000 விஷயம் எனக்கு தெரிஞ்சா என்னால 100 விஷயம் தான் தெளிவா விளக்க முடியும். தெரியாதே 100 விஷயம் தானா?.... 

எஞ்சாய் பண்ணறதுனா செலவு செய்யறது மட்டும் இல்ல வருங்கால தேவைக்கான சேமிப்பு மற்றும் பேமிலி க்கான பாதுகாப்பும் தான் அப்படின்னு யோசிச்சு பாத்த தெரியும். 

அந்த பேராசிரியர் சொன்ன மாதிரி தான் கடன் காரர்கள் கிட்ட ஐடியா கேட்டா கடன் வாங்க தான் ஐடியா கிடைக்கும். தேர்ந்தெடுக்கும் முறையில் மாற்றம் வேண்டும், நெறைய இருக்கு நாம தான் செலக்ட் செய்யனும். 

பெஸ்ட்டா? ரெஸ்டா ? யோசிங்க வளர்வோம்.