Sunday, 2 June 2019

ப்ளீஸ் இத படிக்காதீங்க..... part 2......

ப்ளீஸ் இத படிக்காதீங்க 2......

அந்த நகரத்தின் உயந்த கட்டிடம் அதுதான், அவன் அவளிடம் சில நிமிடங்கள் அழுத்தவனாய் தன் முடிவே கூறினான்.அவனுக்கு அதுவே இறுதி முடிவை இருந்தது. உனக்கு அதுதான் என்றால் நானும் உன்னுடனே வருகிறேன் என்றாள் அவள்..... பின் சிறிது நேர அமைதிக்கு பின் அவள், அவன் கைகளை பற்றினாள், அவனை இழுத்தாள், சிறிது தூரம் அந்த மாடியில் சென்றான் , இப்போது அவள் கைகளில் ஒரு அழுத்தம் தெரிந்தது , அவனுக்கு தெரிந்து விட்டது அவள், அவனை அந்த மாடியின் ஓரத்திற்கு சென்றுகொண்டிருக்கிறாள் என்று.ஒரு இரண்டு அடி சுவர்தான் அந்த மாடியில், அதன் மீது தான் எற போகிறாள் , கண்டிப்பாக ஒரு முடிவு தேட ஆம் நிரந்தரமாய் , அவன் இப்போது அவளை இழுக்க முயற்சி செய்தான் அதற்குள் அவள் அந்த சுவர் மெது ஏறி இருந்தாள் அவனையும் ஏற்றி இருந்தாள். அவனுக்கு அவ்வளவு பயம். கண்டிப்பாக பிழைக்க வாய்ப்பு இல்லை .

வாழ்க்கை எப்போதும் ஒன்று போல் இருப்பது இல்லை , அதுவும் ஒரு முடிவை நோக்கியே பயணிக்கிறது - நிராதாரமான ஒன்றை . 

அவன் பெரிய விரக்தியில் இருந்தான், இரண்டு நாட்களாக எதுவும் சாப்பிடவில்லை, வெளியில் எங்கும் செல்லவில்லை , தன்னுடைய போர்வைக்குள் தலை கூட வெளியே தெரியாதவனாய், கூனி, குறுகி ஒரு பெரும் குற்றம் செய்தவனாய், விம்மி விம்மி அழுது கொண்டு. அவன் அந்த வருடத்தின் காஸ்டலி போன் வாங்கி இருந்தான், அவளுக்கும் அதே போன்று ஒன்றுதான்  அவள் பிறந்த நாளுக்கு பரிசளித்திருந்தான். இப்போது அது தான் அழுதது ( ஒலித்தது ). அவனுக்கு அனைத்தும் இப்போது எதிர்மறையாக தான் தெரிந்தது. அவள் தான் இப்போது அவளை தவிர வேறு யாரும் அவனுக்கு போன் செய்வது இல்லை.அரை மணி நேரத்திற்கு மும்புதான் பேசி இருந்தான் இருந்தாலும் அவனால் தங்கி கொள்ள முடியவில்லை. பல முறை அவன் அவளிடம் சொல்லி இருந்தான், ஆனால் அவள் காது கொடுத்து கேட்டது போல் தெரியவில்லை. இந்த முறை கண்டிப்பாக ஒரு முடிவு அது இவன் தான் சொல்ல போகிறான். "எனக்கு இதுக்கு மேல என்ன பண்ணுறது னு தெரியல , என் வாழ்க்கை அவ்வளவுதான் , நான் ஒரு முடிவு தேட போறேன் ", என்றதும் அவள் தான் அங்கு வர சொன்னாள். 

ஆண்டு 2008 ஒரு பெரிய பொருளாதார மந்தநிலையே நோக்கி உலகம் சென்று கொண்டிருந்தது. மிக பெரிய வேலை இழப்புகள். எங்கு சென்று முடியும் என்ற நிலை. இந்தியா வில் இருந்த மென்பொருள் இறக்குமதி குறைந்து கொண்டிருந்தது, சில வருடங்களுக்கு முன்புதான் இந்தியாவில் மென்பொருள் கட்டமைப்பு நிறுவனங்கலின் வளர்ச்சி ஏற்பட்டிருந்தது. தொண்டங்குவதற்குள் முடிந்தார் போன்ற ஒரு சறுக்கல், உலகம் முழுவதும்.

பெரிய வேலை இழப்புகள் இங்கும் விட்டு வைக்கவில்லை. அவனுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் வேலை கிடைத்திருந்தது, ஒரு வருடத்திலேயே onsite வாய்ப்பு வேறு, அந்த கம்பெனி இல் சராசரிக்கும் அதிகமான வருமானம், அதுவும் குறுகிய காலத்திலேயே, இப்போது இந்த சூறாவெளியில் இவ்வனும் திருப்பி  சொந்த அனுப்பப்பட்டான். கம்பெனியும் ப்ராஜெக்ட் எதுவும் இல்லாமல் இரண்டு காலாண்டுகள் முடித்திருந்தது. இப்போது கம்பெனியின் வளர்ச்சிக்கு அல்லது அடுத்த சில ஆண்டுகள் கம்பெனியே தாக்கு பிடிக்க எதாவது சீராக வேண்டிய நிலைமை. கிட்டத்தட்ட அணைத்து போர்டு ஒப்பி டிரேக்டர்ஸ் யும் , இன்வெஸ்ட்டர்ஸ் யும் வந்திருந்தனர் , இன்னும் சில மணி துளிகளில் கம்பெனியில் பெரிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

அனைத்து எம்பலாயீஸ் கும் தெரிந்திருந்தது , அது ஆட்குறைப்பு - இந்த மாதிரியான சமயங்களில் அணைத்து கம்பெனியிலும் எட்டுக்கும் முடிவு தான் அது. ஆனால்  அது அவனை எதுவும் பாதிக்க வில்லை - மிக பெரிய ப்ரொஜெக்ட்ஸ் எல்லாம் அவனே செய்துருந்தான் , நல்ல பேர் வேறு, இப்போதுதான் onsite சென்று வந்திருந்தான், கம்பெனியின் வளர்ச்சிக்கு அவனால் ஆக  சிறந்ததே செய்திருந்தான்.

பல மணி நேரங்களுக்கு பிறகு போர்டு மீட்டிங்கும் முடிந்திருந்தது, முடிவு எதிர்பார்த்ததே. அநேகமானோர் அடுத்த அடுத்த நாள்களில் வேலை இழந்தனர், முக்கால்வாசிக்கும் அதிகமானோர். அவன் நிறைய பேருக்கு ஆறுதல் வழங்கினான், வாழ்க்கையை போராடும் படி, விதியை ஏற்று கொள்ளும் படியும்- அறிவுரைகளையும் வழங்கினான்.

ஆனால் வாழ்க்கை மாறிக்கொண்டே தான் இருக்கிறது,மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் மனோ பக்குவமும் அப்படித்தானே - அது அறிவுரை சொல்லுபவராக இருந்தாலும்.

அடுத்த சில நாட்களில் அவனது வாழ்க்கையும் மாறியது, ஆம், அவனும் சில நாட்களில் வேலை இல்லாதவனாய், அவனும் பல விதங்களில் யோசித்துருந்தான் அவன் மனம் அவனை எப்போதும் சமாதானப்படுத்தியது, என்னதான் அவன் கல்லூரியில் முதல் மாணவனை வந்திருந்தாலும், உணர்ச்சி , அறிவை வென்றது, அவனால் அவன் வேலை இழப்பை தாங்க முடியவில்லை என்பது தான் உண்மை. சில நாட்களுக்கு முன்புதான் ஒரு அப்பார்ட்மெண்ட் வங்கியிருந்தான் பேங்க் EMI இல் , இன்னும் சில மாதங்களில் அது அவனுக்கு வந்துவிடும், தங்கச்சிக்கு அப்புறம் நகை வாங்கிக்கொள்ளலாம், அனைத்து நகைகளையும் தன் அக்காவுக்கு போட்டு சீரும் சிறப்புமாக திருமணம் முடித்து இருந்தான், "அவசரத்திற்கு பேங்க் கு எல்லாம் அலைய முடியாது நமக்கு தெரித்த ஒருத்தர் இருக்கார் னு 2 ரூபாய் வட்டிக்கு வாங்கிய  கடன் இரண்டு லட்சத்திற்கு இப்போதுதான் முதல் வட்டி கட்டியிருந்தான். இன்னும் தங்கை வேறு இருக்கிறாள். அவளுக்கு திருமணம் முடித்தால் மட்டுமே இவனுக்கு.

" இன்னும் ஒரு வருசம் தான் டைம், அது குள்ள என் பொண்ணை கல்யாணம் செய்துக்கணும் இல்லன்னா அவள மறந்துரு " - சில மாதங்களுக்கு மும்புதான் அவன் காதலியின் சொந்தக்காரர் அவள் அப்பா கிட்ட போட்டு குடுத்ததுக்கு - மூணு நாள் போராட்டத்துக்கு பிறகு அவள் அப்பாவை சமளிக்கறதுக்கு பட்ட பாடு சொல்ல முடியாதது. வேலைக்காக மட்டும் தான் அவள் அப்பா சம்மதித்தார். 

எண்ண ஓட்டங்கள் நீரோடை போன்றது அதன் எல்லை யாருக்கும் தெரியாது , முடியுமா ? முடியாத ? என்று.

மனிதன் எப்போதும் சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலைகளுக்கு அடிமையானவன். உணர்ச்சி யா ? அறிவா ? என்னும்போது பெரும்பாலும் உணர்ச்சி தான் அவனது கடைசி முடிவு . உண்மை நேர் எதிராக இருந்தாலும்.

அவன் கிட்டதட்ட அவன் முடிவே மாற்றியே விட்டான், அவள் கை இல் இருந்து விளகவே முயன்றான், ஆனால் அவள் விட பிடியாக மீண்டும் இறுக்கி பிடித்தாள். இப்போது அவன் கத்தியை விட்டான் " என்ன பண்ணுற ?", " வாழ்க்கையின் முடிவை தேட போகிறோம், நீதானா சொன்ன என்ன பண்ணுறதுனே தெரியலைனு , அதான் ஒரு முடிவை தேடுவோம் , என்னக்கு எண்ணமோ இதுதான் சரியான முடிவுன்னு நினைக்கிறேன் , உன் EMI கட்ட தேவை இல்லை, கந்து வட்டி கட்ட தேவை இல்லை , தங்கச்சிக்கு கல்யாணம் செய்ய வேணாம், என் அப்பா வ சமாளிக்க வேணாம்"..... ஒரு சிறிய இடைவெளிக்கு பின்  "ஒரு நிமிசம் நீ கொஞ்சம் கண்ணை முடி யோசிச்சு பாரேன்" என்றாள் , மாடி மீது நின்று கண்ணை முடி யோசிப்பதா . சின்ன தடங்கல் என்றாலும் உயிர் பொய் விடும் . அவள் பிடிவாதம் அவனுக்கு தெரியும். உயிர் பிரிய எவ்வளவு நேரம் ஆகும் சில நொடிகள் ........ பெரிய பயத்துடன் அவனும் கண்ணை மூடினான். அவளும் அவன் கையை பிடித்து குத்திதே விட்டாள்.

" மரணம் நேரும் என்று தெரிந்த அந்த ஒரு சில நொடிகள் கண்டிப்பாக மனம் ஏங்கும் இன்னும் வாழலாம் என்று - அது அவன் எவ்வளவு பெரிய பலசாலியாக இருந்தாலும் "

" மரணத்தை என்று கொள்ளும் பக்குவம் இங்கு யாருக்கும் இல்லை என்பதே ஒரு நிதர்சனமான உண்மை". 

" நாணயத்திற்கு எப்போதும் இரண்டு பக்கங்கள் உண்டு , டாஸ் வென்றவர்கள் தான் எப்போதும் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பது அவசியம் இல்லை".

நம் சிந்தனைகளும் அப்படித்தானே, நம்முடைய பார்வை பெரும்பாலும் ஒரு உணைர்ச்சி வசப்படும் நிலையிலே இருக்கும் , அறிவே அதற்கு தகுந்தாற் போன்று மாற்றுவது தன நமக்கு முன் உள்ள மிக பெரிய சவால். பெரும்பாலான மனிதர்கள் இந்த இடத்தில் தான் சறுக்கல்களை சந்திக்கின்றனர். சிலர் மீண்டு வருகின்றனர் பெரும் பகுதியினர் சிக்கி கொள்கின்றனர்.

இந்த கதையின் முடியும் உங்களுடையதே......

அவளுக்கும் இரண்டு பகுதிகள் இருந்தது ஒன்று முன் புறம் உள்ள, வாழ்க்கையை முடித்து வைக்கக்கூடிய பகுதி. மற்றொன்று பின் புறம் வெறும் இரண்டு அடியே உள்ள வாழ்க்கையின் வாழகூடிய பகுதி. ஆம் அவள் அவனை பிடித்து பின்புறம் கூட குதித்திருக்கலாம் . ......... 

  


















No comments:

Post a Comment

Thank you for sharing