Saturday, 8 June 2019

பணம் பண்ணலாம் வாங்க ... பார்ட் 1

பணம் பண்ணலாம் வாங்க ... பார்ட் 1.

பொருளாதாரத்தே புரிந்து கொள்வோம் ....




எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்??? பணம் -அது வைத்திருப்போரை மட்டும் எப்படி மேலும், மேலும் செல்வ செழிப்பு மிக்க வர்களாக ஆக்குகிறது ( சிலரை தவிர )? இந்த கேள்வி உங்களுக்கும் இருக்கும் இல்லையா ??

சரி, இப்போது ஒரு எடுத்துக்காட்டு உடன் விளக்குவோம் . x , y இரண்டு பேர் உள்ளனர் , இரண்டு பேரும் ஒரே பொருளை வாங்கி விற்கின்றனர் என கொள்வோம், x இடம் 100 ரூபாயும் , y இடம் 1000 ரூபாயும் உள்ளது என கொள்வோம், ஒரு பொருளின் வாங்கும் விலை 10 விற்கும் விலை 11 என கொள்வோம், x யின் வருமானம் 10, ஆனால் y யின் வருமானம் 100.இது ஒரு 10 நாளைக்கு x கு 100, y கு 1000. இங்கு கவனிக்கப்பட வேண்டியது , 100% இலாபம் இருவருக்கும் ஆனால் எண்ணிக்கை y கு அதிகம். 

இங்கு நாம் எடுத்துக்கொள்ளக்கூடியது - இதே பெரும்பாலும் நாம் கவனிப்பதே இல்லை, நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருள் மற்றும் அதன் விலை, அது இருவருக்குமே ஒன்றுதான், மற்ற பிற செலவுகளும் ஏறத்தாழ ஒரே போல் தான் இருக்கும் அவர்களின் செலவு முறைகளில் சிறிது மற்றம் இருக்கலாம். x இன் செலவு 50 எனில் y இன் செலவு x விட 50 மடங்கு அதிகம் என்றாலும் 250, ஆனால் ஈட்டிய வருமானம்  1000, எப்படி இருந்தாலும் 750 லாபம். ஆனால் x கு 50 மட்டுமே, மீண்டும் ஒரு 10 நாளைக்கு இது தொடர்ந்தால் யார் அதிகம் லாபம் ஈட்டுவார்கள்.

"லாபம் சதவிகிதம் ஒன்றுதான் ஆனால் எண்ணிக்கை எப்போதும் வேறு , அது முதலீடு அளவை பொறுத்தது".

இதுல இருந்து ஒன்னு மட்டும் நல்ல தெரியும், y கு எப்படியும் லாபம் வந்துகிட்டே இருக்கும் அவன் எந்த ஒரு தப்பான முடிவு எடுக்குற வரைக்கும். 
நாம இப்போ y ஐ தூக்கிருவோம் , x இவன் தான் நம்ம டார்கெட் , பல பேர் இந்த x காட்டக்ரி தான். x உடைய போகஸ் பெரும்பாலும் அவன் என்ன செய்கிறானோ அதில் மட்டும் தான் இருக்கும் ஒரு பாதுகாப்பு வளையத்தினுள். மருத்துவ செலவு, படிப்பு செலவு, வீடு , கார், இன்னும் பல அவன் எல்லை விரிந்து கொண்டே போகும். அவன் வருமானத்தில் பெரும்பகுதியை இந்த செலவே தின்று விடும்.

அதாவது x கு வேறு ஏதேனும் ஒரு கமிட்மென்ட் இருக்கும், அதனால் அவன் முழு லாபத்தையும் செலவு செய்ய முடியாது, அப்படி செலவு செய்தால் மீண்டும் தொடங்கியே இடத்துக்கே வந்துவிடுவான். இப்போது அவன் கடன் வாங்க வேண்டியே அவசியம் ஏற்படும். அவனும் நீண்ட கால அடிப்படையில் தற்ப்போது உள்ள சூழ்நிலையை மனதில் கொண்டு வங்கியும் விடுவான்.

" நினைவிருக்கட்டும், நீங்கள் வாங்கும் வட்டி விகிதங்கள் எப்போதும் பண வீக்கத்தை விட அதிகமாக தான் இருக்கும்"

" பொருள்கள், பணவீக்கத்திற்கு தகுந்தாற் போல் மாறிக்கொண்டே இருக்கும் உங்கள் வருமானமும் தான், அனால் உங்கள் வட்டிக்கு தகுந்தாற்போன்று அல்ல ...."

இன்னும் சிறப்பாக சொல்ல வேண்டுமானால், ஒருவன் 10000 சம்பளம் வாங்குகிறான் என கொள்வோம், அவர் 20000 கடனாக 10% வட்டிக்கு 5 வருடத்திற்க்கு கடன் வாங்கி இருக்கிறார். பண வீக்கம் 6%. wpi பொறுத்து அவரது சம்பளம் 5% உயருகிறது  என்றால் . அவரது உண்மையான சம்பளம் மீண்டும் 10000 மட்டுமே. 5% உயர்வு அத்தியாவசிய போர்களின் உயர்வுக்கு ஏற்றார் போலாவே மாற்றப்பட்டது. இதுவே சம்பள உயர்வு இல்லாதவர்களுக்கு அவர்களது சம்பளம் வெறும் 9500 மட்டுமே. மீண்டும் அவர்கள் வாழ்க்கை போராட்டம் ஆகி விடுகிறது.

பண வீக்கத்தை தாண்டிய சம்பளம் உயர்வு அல்லது வருமானம் வரவேண்டும். இல்லையேல் அவர்கள் இழந்த 5% திற்கு 100 % உழைத்தால் மட்டுமே பழைய நிலையை அதாவது 9500 ஐ அடைய முடியும், 10000 கு மேலும்  5 % கு மேல் உழைக்க வேண்டும் .

10000*95% = 9500,  9500*105.265% = 10000/-.. 

" தோல்வியில் இருந்து மீண்டு வந்து வெற்றி பெற்றவர்கள் எல்லாம் 100% மேல் உழைப்பை கொடுத்தவர்களாகத்தான் இருப்பார்கள் " 

சரி, எப்படி பணம் பண்ணுவது, "20-30 வருடங்களாக உழைச்சும் இன்னும் பணம் சேக்க முடியல ", எங்க இருந்து ஆரம்பிக்கிறது ? யார் சொல்லி குடுப்பா ?  எப்படி பல கேள்விகள்.. அனைத்து கேள்விகளுக்கு பதில் ஒன்றுதான் , பொருளாதாரத்தே புரிந்து கொள்வோம் ......

"பணம் எப்படி நம்மிடம் வந்து சேரும் என்பதற்கு முன் பணம் எந்தெந்த வழிகள் நம்மிடம் இருந்து செல்கிறது என்பது முக்கியம் " 

அடுத்தடுத்து அத்தியாயங்களில் பணம் எப்படி நாமேடமிருந்து தெரிந்தும் , தெரியாமலும் செல்கிறது என்பதயும், அதை எப்படி வளர்ப்பது , எங்கிருந்து தொடங்குவது என்பதை கதை வடிவில் பாப்போம்.....

" தோல்வியில் இருந்து மட்டும் அல்ல , செலவுகளில் இருந்தும் பாடம் கற்று கொள்ள வேண்டும். பணத்திற்காக முதல் பாடமே செலவு தான் ".

பணம் அவர் அவர் பார்வையில் வளரும் .................




  



















Sunday, 2 June 2019

ப்ளீஸ் இத படிக்காதீங்க..... part 2......

ப்ளீஸ் இத படிக்காதீங்க 2......

அந்த நகரத்தின் உயந்த கட்டிடம் அதுதான், அவன் அவளிடம் சில நிமிடங்கள் அழுத்தவனாய் தன் முடிவே கூறினான்.அவனுக்கு அதுவே இறுதி முடிவை இருந்தது. உனக்கு அதுதான் என்றால் நானும் உன்னுடனே வருகிறேன் என்றாள் அவள்..... பின் சிறிது நேர அமைதிக்கு பின் அவள், அவன் கைகளை பற்றினாள், அவனை இழுத்தாள், சிறிது தூரம் அந்த மாடியில் சென்றான் , இப்போது அவள் கைகளில் ஒரு அழுத்தம் தெரிந்தது , அவனுக்கு தெரிந்து விட்டது அவள், அவனை அந்த மாடியின் ஓரத்திற்கு சென்றுகொண்டிருக்கிறாள் என்று.ஒரு இரண்டு அடி சுவர்தான் அந்த மாடியில், அதன் மீது தான் எற போகிறாள் , கண்டிப்பாக ஒரு முடிவு தேட ஆம் நிரந்தரமாய் , அவன் இப்போது அவளை இழுக்க முயற்சி செய்தான் அதற்குள் அவள் அந்த சுவர் மெது ஏறி இருந்தாள் அவனையும் ஏற்றி இருந்தாள். அவனுக்கு அவ்வளவு பயம். கண்டிப்பாக பிழைக்க வாய்ப்பு இல்லை .

வாழ்க்கை எப்போதும் ஒன்று போல் இருப்பது இல்லை , அதுவும் ஒரு முடிவை நோக்கியே பயணிக்கிறது - நிராதாரமான ஒன்றை . 

அவன் பெரிய விரக்தியில் இருந்தான், இரண்டு நாட்களாக எதுவும் சாப்பிடவில்லை, வெளியில் எங்கும் செல்லவில்லை , தன்னுடைய போர்வைக்குள் தலை கூட வெளியே தெரியாதவனாய், கூனி, குறுகி ஒரு பெரும் குற்றம் செய்தவனாய், விம்மி விம்மி அழுது கொண்டு. அவன் அந்த வருடத்தின் காஸ்டலி போன் வாங்கி இருந்தான், அவளுக்கும் அதே போன்று ஒன்றுதான்  அவள் பிறந்த நாளுக்கு பரிசளித்திருந்தான். இப்போது அது தான் அழுதது ( ஒலித்தது ). அவனுக்கு அனைத்தும் இப்போது எதிர்மறையாக தான் தெரிந்தது. அவள் தான் இப்போது அவளை தவிர வேறு யாரும் அவனுக்கு போன் செய்வது இல்லை.அரை மணி நேரத்திற்கு மும்புதான் பேசி இருந்தான் இருந்தாலும் அவனால் தங்கி கொள்ள முடியவில்லை. பல முறை அவன் அவளிடம் சொல்லி இருந்தான், ஆனால் அவள் காது கொடுத்து கேட்டது போல் தெரியவில்லை. இந்த முறை கண்டிப்பாக ஒரு முடிவு அது இவன் தான் சொல்ல போகிறான். "எனக்கு இதுக்கு மேல என்ன பண்ணுறது னு தெரியல , என் வாழ்க்கை அவ்வளவுதான் , நான் ஒரு முடிவு தேட போறேன் ", என்றதும் அவள் தான் அங்கு வர சொன்னாள். 

ஆண்டு 2008 ஒரு பெரிய பொருளாதார மந்தநிலையே நோக்கி உலகம் சென்று கொண்டிருந்தது. மிக பெரிய வேலை இழப்புகள். எங்கு சென்று முடியும் என்ற நிலை. இந்தியா வில் இருந்த மென்பொருள் இறக்குமதி குறைந்து கொண்டிருந்தது, சில வருடங்களுக்கு முன்புதான் இந்தியாவில் மென்பொருள் கட்டமைப்பு நிறுவனங்கலின் வளர்ச்சி ஏற்பட்டிருந்தது. தொண்டங்குவதற்குள் முடிந்தார் போன்ற ஒரு சறுக்கல், உலகம் முழுவதும்.

பெரிய வேலை இழப்புகள் இங்கும் விட்டு வைக்கவில்லை. அவனுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் வேலை கிடைத்திருந்தது, ஒரு வருடத்திலேயே onsite வாய்ப்பு வேறு, அந்த கம்பெனி இல் சராசரிக்கும் அதிகமான வருமானம், அதுவும் குறுகிய காலத்திலேயே, இப்போது இந்த சூறாவெளியில் இவ்வனும் திருப்பி  சொந்த அனுப்பப்பட்டான். கம்பெனியும் ப்ராஜெக்ட் எதுவும் இல்லாமல் இரண்டு காலாண்டுகள் முடித்திருந்தது. இப்போது கம்பெனியின் வளர்ச்சிக்கு அல்லது அடுத்த சில ஆண்டுகள் கம்பெனியே தாக்கு பிடிக்க எதாவது சீராக வேண்டிய நிலைமை. கிட்டத்தட்ட அணைத்து போர்டு ஒப்பி டிரேக்டர்ஸ் யும் , இன்வெஸ்ட்டர்ஸ் யும் வந்திருந்தனர் , இன்னும் சில மணி துளிகளில் கம்பெனியில் பெரிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

அனைத்து எம்பலாயீஸ் கும் தெரிந்திருந்தது , அது ஆட்குறைப்பு - இந்த மாதிரியான சமயங்களில் அணைத்து கம்பெனியிலும் எட்டுக்கும் முடிவு தான் அது. ஆனால்  அது அவனை எதுவும் பாதிக்க வில்லை - மிக பெரிய ப்ரொஜெக்ட்ஸ் எல்லாம் அவனே செய்துருந்தான் , நல்ல பேர் வேறு, இப்போதுதான் onsite சென்று வந்திருந்தான், கம்பெனியின் வளர்ச்சிக்கு அவனால் ஆக  சிறந்ததே செய்திருந்தான்.

பல மணி நேரங்களுக்கு பிறகு போர்டு மீட்டிங்கும் முடிந்திருந்தது, முடிவு எதிர்பார்த்ததே. அநேகமானோர் அடுத்த அடுத்த நாள்களில் வேலை இழந்தனர், முக்கால்வாசிக்கும் அதிகமானோர். அவன் நிறைய பேருக்கு ஆறுதல் வழங்கினான், வாழ்க்கையை போராடும் படி, விதியை ஏற்று கொள்ளும் படியும்- அறிவுரைகளையும் வழங்கினான்.

ஆனால் வாழ்க்கை மாறிக்கொண்டே தான் இருக்கிறது,மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் மனோ பக்குவமும் அப்படித்தானே - அது அறிவுரை சொல்லுபவராக இருந்தாலும்.

அடுத்த சில நாட்களில் அவனது வாழ்க்கையும் மாறியது, ஆம், அவனும் சில நாட்களில் வேலை இல்லாதவனாய், அவனும் பல விதங்களில் யோசித்துருந்தான் அவன் மனம் அவனை எப்போதும் சமாதானப்படுத்தியது, என்னதான் அவன் கல்லூரியில் முதல் மாணவனை வந்திருந்தாலும், உணர்ச்சி , அறிவை வென்றது, அவனால் அவன் வேலை இழப்பை தாங்க முடியவில்லை என்பது தான் உண்மை. சில நாட்களுக்கு முன்புதான் ஒரு அப்பார்ட்மெண்ட் வங்கியிருந்தான் பேங்க் EMI இல் , இன்னும் சில மாதங்களில் அது அவனுக்கு வந்துவிடும், தங்கச்சிக்கு அப்புறம் நகை வாங்கிக்கொள்ளலாம், அனைத்து நகைகளையும் தன் அக்காவுக்கு போட்டு சீரும் சிறப்புமாக திருமணம் முடித்து இருந்தான், "அவசரத்திற்கு பேங்க் கு எல்லாம் அலைய முடியாது நமக்கு தெரித்த ஒருத்தர் இருக்கார் னு 2 ரூபாய் வட்டிக்கு வாங்கிய  கடன் இரண்டு லட்சத்திற்கு இப்போதுதான் முதல் வட்டி கட்டியிருந்தான். இன்னும் தங்கை வேறு இருக்கிறாள். அவளுக்கு திருமணம் முடித்தால் மட்டுமே இவனுக்கு.

" இன்னும் ஒரு வருசம் தான் டைம், அது குள்ள என் பொண்ணை கல்யாணம் செய்துக்கணும் இல்லன்னா அவள மறந்துரு " - சில மாதங்களுக்கு மும்புதான் அவன் காதலியின் சொந்தக்காரர் அவள் அப்பா கிட்ட போட்டு குடுத்ததுக்கு - மூணு நாள் போராட்டத்துக்கு பிறகு அவள் அப்பாவை சமளிக்கறதுக்கு பட்ட பாடு சொல்ல முடியாதது. வேலைக்காக மட்டும் தான் அவள் அப்பா சம்மதித்தார். 

எண்ண ஓட்டங்கள் நீரோடை போன்றது அதன் எல்லை யாருக்கும் தெரியாது , முடியுமா ? முடியாத ? என்று.

மனிதன் எப்போதும் சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலைகளுக்கு அடிமையானவன். உணர்ச்சி யா ? அறிவா ? என்னும்போது பெரும்பாலும் உணர்ச்சி தான் அவனது கடைசி முடிவு . உண்மை நேர் எதிராக இருந்தாலும்.

அவன் கிட்டதட்ட அவன் முடிவே மாற்றியே விட்டான், அவள் கை இல் இருந்து விளகவே முயன்றான், ஆனால் அவள் விட பிடியாக மீண்டும் இறுக்கி பிடித்தாள். இப்போது அவன் கத்தியை விட்டான் " என்ன பண்ணுற ?", " வாழ்க்கையின் முடிவை தேட போகிறோம், நீதானா சொன்ன என்ன பண்ணுறதுனே தெரியலைனு , அதான் ஒரு முடிவை தேடுவோம் , என்னக்கு எண்ணமோ இதுதான் சரியான முடிவுன்னு நினைக்கிறேன் , உன் EMI கட்ட தேவை இல்லை, கந்து வட்டி கட்ட தேவை இல்லை , தங்கச்சிக்கு கல்யாணம் செய்ய வேணாம், என் அப்பா வ சமாளிக்க வேணாம்"..... ஒரு சிறிய இடைவெளிக்கு பின்  "ஒரு நிமிசம் நீ கொஞ்சம் கண்ணை முடி யோசிச்சு பாரேன்" என்றாள் , மாடி மீது நின்று கண்ணை முடி யோசிப்பதா . சின்ன தடங்கல் என்றாலும் உயிர் பொய் விடும் . அவள் பிடிவாதம் அவனுக்கு தெரியும். உயிர் பிரிய எவ்வளவு நேரம் ஆகும் சில நொடிகள் ........ பெரிய பயத்துடன் அவனும் கண்ணை மூடினான். அவளும் அவன் கையை பிடித்து குத்திதே விட்டாள்.

" மரணம் நேரும் என்று தெரிந்த அந்த ஒரு சில நொடிகள் கண்டிப்பாக மனம் ஏங்கும் இன்னும் வாழலாம் என்று - அது அவன் எவ்வளவு பெரிய பலசாலியாக இருந்தாலும் "

" மரணத்தை என்று கொள்ளும் பக்குவம் இங்கு யாருக்கும் இல்லை என்பதே ஒரு நிதர்சனமான உண்மை". 

" நாணயத்திற்கு எப்போதும் இரண்டு பக்கங்கள் உண்டு , டாஸ் வென்றவர்கள் தான் எப்போதும் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பது அவசியம் இல்லை".

நம் சிந்தனைகளும் அப்படித்தானே, நம்முடைய பார்வை பெரும்பாலும் ஒரு உணைர்ச்சி வசப்படும் நிலையிலே இருக்கும் , அறிவே அதற்கு தகுந்தாற் போன்று மாற்றுவது தன நமக்கு முன் உள்ள மிக பெரிய சவால். பெரும்பாலான மனிதர்கள் இந்த இடத்தில் தான் சறுக்கல்களை சந்திக்கின்றனர். சிலர் மீண்டு வருகின்றனர் பெரும் பகுதியினர் சிக்கி கொள்கின்றனர்.

இந்த கதையின் முடியும் உங்களுடையதே......

அவளுக்கும் இரண்டு பகுதிகள் இருந்தது ஒன்று முன் புறம் உள்ள, வாழ்க்கையை முடித்து வைக்கக்கூடிய பகுதி. மற்றொன்று பின் புறம் வெறும் இரண்டு அடியே உள்ள வாழ்க்கையின் வாழகூடிய பகுதி. ஆம் அவள் அவனை பிடித்து பின்புறம் கூட குதித்திருக்கலாம் . .........