பணம் பண்ணலாம் வாங்க ... பார்ட் 1.
பொருளாதாரத்தே புரிந்து கொள்வோம் ....
பொருளாதாரத்தே புரிந்து கொள்வோம் ....
எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்??? பணம் -அது வைத்திருப்போரை மட்டும் எப்படி மேலும், மேலும் செல்வ செழிப்பு மிக்க வர்களாக ஆக்குகிறது ( சிலரை தவிர )? இந்த கேள்வி உங்களுக்கும் இருக்கும் இல்லையா ??
சரி, இப்போது ஒரு எடுத்துக்காட்டு உடன் விளக்குவோம் . x , y இரண்டு பேர் உள்ளனர் , இரண்டு பேரும் ஒரே பொருளை வாங்கி விற்கின்றனர் என கொள்வோம், x இடம் 100 ரூபாயும் , y இடம் 1000 ரூபாயும் உள்ளது என கொள்வோம், ஒரு பொருளின் வாங்கும் விலை 10 விற்கும் விலை 11 என கொள்வோம், x யின் வருமானம் 10, ஆனால் y யின் வருமானம் 100.இது ஒரு 10 நாளைக்கு x கு 100, y கு 1000. இங்கு கவனிக்கப்பட வேண்டியது , 100% இலாபம் இருவருக்கும் ஆனால் எண்ணிக்கை y கு அதிகம்.
இங்கு நாம் எடுத்துக்கொள்ளக்கூடியது - இதே பெரும்பாலும் நாம் கவனிப்பதே இல்லை, நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருள் மற்றும் அதன் விலை, அது இருவருக்குமே ஒன்றுதான், மற்ற பிற செலவுகளும் ஏறத்தாழ ஒரே போல் தான் இருக்கும் அவர்களின் செலவு முறைகளில் சிறிது மற்றம் இருக்கலாம். x இன் செலவு 50 எனில் y இன் செலவு x விட 50 மடங்கு அதிகம் என்றாலும் 250, ஆனால் ஈட்டிய வருமானம் 1000, எப்படி இருந்தாலும் 750 லாபம். ஆனால் x கு 50 மட்டுமே, மீண்டும் ஒரு 10 நாளைக்கு இது தொடர்ந்தால் யார் அதிகம் லாபம் ஈட்டுவார்கள்.
"லாபம் சதவிகிதம் ஒன்றுதான் ஆனால் எண்ணிக்கை எப்போதும் வேறு , அது முதலீடு அளவை பொறுத்தது".
இதுல இருந்து ஒன்னு மட்டும் நல்ல தெரியும், y கு எப்படியும் லாபம் வந்துகிட்டே இருக்கும் அவன் எந்த ஒரு தப்பான முடிவு எடுக்குற வரைக்கும்.
நாம இப்போ y ஐ தூக்கிருவோம் , x இவன் தான் நம்ம டார்கெட் , பல பேர் இந்த x காட்டக்ரி தான். x உடைய போகஸ் பெரும்பாலும் அவன் என்ன செய்கிறானோ அதில் மட்டும் தான் இருக்கும் ஒரு பாதுகாப்பு வளையத்தினுள். மருத்துவ செலவு, படிப்பு செலவு, வீடு , கார், இன்னும் பல அவன் எல்லை விரிந்து கொண்டே போகும். அவன் வருமானத்தில் பெரும்பகுதியை இந்த செலவே தின்று விடும்.
அதாவது x கு வேறு ஏதேனும் ஒரு கமிட்மென்ட் இருக்கும், அதனால் அவன் முழு லாபத்தையும் செலவு செய்ய முடியாது, அப்படி செலவு செய்தால் மீண்டும் தொடங்கியே இடத்துக்கே வந்துவிடுவான். இப்போது அவன் கடன் வாங்க வேண்டியே அவசியம் ஏற்படும். அவனும் நீண்ட கால அடிப்படையில் தற்ப்போது உள்ள சூழ்நிலையை மனதில் கொண்டு வங்கியும் விடுவான்.
" நினைவிருக்கட்டும், நீங்கள் வாங்கும் வட்டி விகிதங்கள் எப்போதும் பண வீக்கத்தை விட அதிகமாக தான் இருக்கும்"
" பொருள்கள், பணவீக்கத்திற்கு தகுந்தாற் போல் மாறிக்கொண்டே இருக்கும் உங்கள் வருமானமும் தான், அனால் உங்கள் வட்டிக்கு தகுந்தாற்போன்று அல்ல ...."
இன்னும் சிறப்பாக சொல்ல வேண்டுமானால், ஒருவன் 10000 சம்பளம் வாங்குகிறான் என கொள்வோம், அவர் 20000 கடனாக 10% வட்டிக்கு 5 வருடத்திற்க்கு கடன் வாங்கி இருக்கிறார். பண வீக்கம் 6%. wpi பொறுத்து அவரது சம்பளம் 5% உயருகிறது என்றால் . அவரது உண்மையான சம்பளம் மீண்டும் 10000 மட்டுமே. 5% உயர்வு அத்தியாவசிய போர்களின் உயர்வுக்கு ஏற்றார் போலாவே மாற்றப்பட்டது. இதுவே சம்பள உயர்வு இல்லாதவர்களுக்கு அவர்களது சம்பளம் வெறும் 9500 மட்டுமே. மீண்டும் அவர்கள் வாழ்க்கை போராட்டம் ஆகி விடுகிறது.
பண வீக்கத்தை தாண்டிய சம்பளம் உயர்வு அல்லது வருமானம் வரவேண்டும். இல்லையேல் அவர்கள் இழந்த 5% திற்கு 100 % உழைத்தால் மட்டுமே பழைய நிலையை அதாவது 9500 ஐ அடைய முடியும், 10000 கு மேலும் 5 % கு மேல் உழைக்க வேண்டும் .
10000*95% = 9500, 9500*105.265% = 10000/-..
" தோல்வியில் இருந்து மீண்டு வந்து வெற்றி பெற்றவர்கள் எல்லாம் 100% மேல் உழைப்பை கொடுத்தவர்களாகத்தான் இருப்பார்கள் "
சரி, எப்படி பணம் பண்ணுவது, "20-30 வருடங்களாக உழைச்சும் இன்னும் பணம் சேக்க முடியல ", எங்க இருந்து ஆரம்பிக்கிறது ? யார் சொல்லி குடுப்பா ? எப்படி பல கேள்விகள்.. அனைத்து கேள்விகளுக்கு பதில் ஒன்றுதான் , பொருளாதாரத்தே புரிந்து கொள்வோம் ......
"பணம் எப்படி நம்மிடம் வந்து சேரும் என்பதற்கு முன் பணம் எந்தெந்த வழிகள் நம்மிடம் இருந்து செல்கிறது என்பது முக்கியம் "
அடுத்தடுத்து அத்தியாயங்களில் பணம் எப்படி நாமேடமிருந்து தெரிந்தும் , தெரியாமலும் செல்கிறது என்பதயும், அதை எப்படி வளர்ப்பது , எங்கிருந்து தொடங்குவது என்பதை கதை வடிவில் பாப்போம்.....
" தோல்வியில் இருந்து மட்டும் அல்ல , செலவுகளில் இருந்தும் பாடம் கற்று கொள்ள வேண்டும். பணத்திற்காக முதல் பாடமே செலவு தான் ".
பணம் அவர் அவர் பார்வையில் வளரும் .................