" மோதி விடாதே நண்பா, மொத்தமும் கடன் " - சிந்திக்க வைத்த ஒரு ஆட்டோவின் பின்பக்க வசனம்.
4 மாதத்திற்கு முன்பு இந்த பக்கத்தில் எழுதிய 20 ரூபாய் இன்வெஸ்ட்மென்ட் டீ கடையில் இருந்து இப்போ ஆட்டோ.
ஆனா ஒரு சின்ன மாற்றம் அது, நஷ்டத்தில் இருந்து லாபமா மாத்தனும். இன்னும் தெளிவா சின்னனதில் இருந்து பெரிசா ...
அந்த சிறுமிக்கு பத்து வயசு இருக்கும் கஷ்டபட்டு அடம் பிடித்து மூனு ரூபாவை அப்பாவிடம் வாங்கியது. அதுக்கு கோசா பழம் ( water melon ) சாப்பிடிடனும்னு ரொம்ப நாள் ஆச, அப்பா குடுத்த அந்த ரூபாவ எடுத்துகிட்டு கடைகாரரிடம் ஓடி அண்ணா ஒரு பழம், அந்த கடைகாரர் அந்த பணத்தை பார்த்து " இதுக்கு எல்லாம் பழம் கொடுக்க முடியாது". அப்ப இதுக்கு என்ன தான் கிடைக்கும்." அங்க தெரியுது பார் பிஞ்சு அதுதான் கிடைக்கும் ". அந்த சிறுமி அந்த காச அந்த கடைகாரரிடம் குடுத்து அந்த பிஞ்ச நானே எடுத்துகிறேன் ஆனா 2 மாசதுக்கு அப்புறம்.
அந்த சிறுமி ஏதோ தெரியாம சொன்னதா தெரியலாம். ஆனா சின்ன குழந்தைகளுக்கு உள்ள சாமர்த்தியம் நமக்கு ...... அது ஒரு பெரிய கேள்வி குறி. எங்க இருந்து இன்வெஸ்ட்மென்ட ஆரம்பிக்கறது, எப்படி ஆரம்பிக்கறது, அப்படிங்கறதே மிகப் பெரிய கேள்வி.
20 ரூபாய் இன்வெஸ்ட்மெண்ட், ஆர்டிகள் பிறகு பங்கு சந்தை வளர்ச்சி மாதம் புதிய உச்சம். எக்கசக்கமான உள்நாட்டு முதலீடுகள் 500 பில்லியன் நம்ம முடிகிறதா? எண்ணற்ற வெளிநாட்டு முதலீடுகள் .
நம்ப முடியாத உண்மை என்னன்னா O. 967% முதலீட்டாலர்கள் மட்டுமே முழுமையாக முதலீடு செய்கின்றனர். புதிதாக எக்கசக்கமான SIP முதலீடுகள் . கன்னிசமான புதிய மியூச்சுவல் பண்ட்கள். ஒரு காலத்தில் இன்சுரன்ஸ் மக்களை சென்றடைந்தது போல பியூச்சுவல் பண்ட் சென்றடையும் என்பது வெகு தூரத்தில் இல்லை.
எடிசன் தன்னுடைய நிறுவனத்திற்கு ஆள் எடுக்க நேர்கானல் நடத்தி மூன்று முதல் ஐந்து பேர் வரை தேர்வு செய்வார், பின் அவர்களை இரவு விருந்திற்கு அழைத்து செல்வார், எடிசன் சாப்பிட்டு உப்பு குறைவாக இருக்கிறது என்பார். அந்த தேர்ந்தெடுக்கபட்டவர்கள் உடனடியாக உப்பை போட்டுக் கொண்டால், அவ்வளவுதான் அவன் ரிஜக்ட்.
இப்படி நிறைய பேர் தனக்கு என்ன வேண்டும், தன்னுடைய தேவை என்ன, எது சரியான நேரம், எவ்வளவு காலம் , என எதுவும் தெரியாமல் இன்வெஸ்ட் மெண்ட் ஆரம்பிப்பது. அவர் சொன்னார் இந்த பண்ட் செம ரிட்டர்ன் தரும், இவரு சொன்னார் இந்த பண்டு டபுள் ரிட்டர்ன். எடுத்துக்காட்டாக மார்கெட் புதிய உச்சத்தில் இருக்கும் போது லார்ஜ் கேப் முதலீடுகள் வெறும் 3 மாதத்தில் பெரிய ரிட்டர்ன் தரும் என்பது ஒரு பெரிய கேள்வி குறியே....
SIP ன் மிகச் சிறிய மாத முதலீடு 500 ரூ அதாவது நாளொன்றுக்கு 20 ரூபாக்கு குறைவு . 500 ரூபாக்கு என்னால் HDFC யோ Eicher யோ அல்லது Maruthi Suzuki யோ வாங்க முடியாது ஆனால் அந்த சேர்களில் முதலீடு செய்த மியூச்சுவல் பன்ட்களில் முதலீடு செய்யலாம் . அதற்கு தேவை நாம் நன்றாக பண்ட்களை தேர்வு செய்வது மட்டுமே.
நான் எப்போது முதலீடுகளை தொடங்குவது?
ஒரு ஞானியிடம் ஒரு சீடர் கேட்டார்.
" ஒருவன் எப்போது சாப்பிட வேண்டும்?"
ஞானியின் பதில்
" இருப்பவன் பசிக்கும் போது "
" இல்லாதவன் இருக்கும் போது "
- இன்வெஸ்ட்மெண்ட் வளரும்.....