வேர்ல்ட் கப் பீவர் - ஸ்டார்ட் அப் ஸ்டோரீஸ் - பார்ட் 2
எல்லோருக்கும் முன்பாக கிளம்பிவிடுங்கள், அப்போதுதான் தவறுகள் செய்தாலும் அதன் விலை குறைவாக இருக்கும் .
- சஞ்சீவ் பிக் சான்டனி ( Naukuri.com).
இரு நாடு இடையே மிகப்பெரிய போர் , ஒரு சிறிய படை , பெரியப்படையுடன் மோதுகிறது ( 300 படத்தில் வருவதுபோல்). சிறிய படை கொஞ்சம் கொஞமாக வலு இழந்து வந்தது , படைவீரர்கள் மத்தியில் ஒரு பயம், என்கே தோற்றுவிடுவோமா என்று ..... படை இன் பின் பகுதி வீரர்கள் சிறிது , சிறிதாக பின் வாங்குகின்றனர். முற்பகுதி வீரர்களும் செய்வதறியாது பின் வாங்குகின்றனர், இதை கவனித்த படை தளபதி , வீரர்கள் மத்தியில் வீர வசனம் பேசுகிறார் - எதுவும் பயனளிப்பதாய் தெரியவில்லை, ஒரு கட்டத்தில் புறமுதுகு காட்டி ஓட வேண்டிய நிலை - அரசன் கவனிக்கிறான் " வீரர்களே ! கிட்ட தட்ட நம் தோல்வி உறுதி செய்யப்படும் நிலையில் உள்ளது, உங்கள் பயம் எனக்கு தெரிகிறது , நாம் இறுதியாய் ஒரு முயற்சி செய்வோம், நான் இந்த நாணயத்தை சுண்டி விடுகிறேன், தலை விழுந்தால் போர் செய்வோம் , பூ விழுந்தால் வந்த வழியே திரும்புவோம் " வீரர்களும் தலை அசைக்க - அரசன் சுண்டி விட்டான் - 20000 பேர்--- கிரிக்கெட் கிரௌண்ட் இல் போடப்படும் டாஸ் பார்ப்பது போல அனைவரும் ஆவலாய் பார்க்க - விழுந்தது என்னவோ தலை எப்படியும் அரசன் விட மாட்டான் , சண்டை போடுவோம் - மீண்டும் விட்ட இடத்திலிருந்து ஆரம்பம் - கடந்த முறை நாட்டுக்காக ஆனால் இந்த முறை - ஒவொருவரின் உயிருக்காக - ஒருவன் தன் உயிருக்காக போராடும் பொது எப்போதும் இரண்டு மடங்கு சக்தியை வெளிப்படுத்துவான் என்பது அந்த அரசனுக்கு தெரிந்ததே அவன் காயின் இரண்டு பக்கமும் தலை இருக்குமாறு செய்த்திருந்தான் - போரின் முடிவு ----
சரியான கிரிக்கெட் பைத்தியம் , வேர்ல்ட் கப் பைனல் வேற , எப்போவுமே 8 மணிக்கு எந்திரிபவன் இணைக்கு -ஏர்லி மார்னிங் 3 மணிக்கே தூக்கம் வராம பெரண்டு பெரண்டு பைனல் ல இந்தியா ஜெயிக்குமா , 4 த் ஆம்பயர் ஆனது அவன் மூளை - காலைல 4 மணிலா இருந்து டிவில கிரிக்கெட் சேனல் போட்டு 10 மணிக்கு என்ன நடக்கும் ஜோசியம் பாத்தான் - கிட்டத்தட்ட 9.30 மணி , ரெண்டு கேப்டனுமும் டாஸ் போடா, காயின் வானத்தை நோக்கி ராக்கெட் ஆய் பறந்தது - சுவாரசியமாய் பாக்கும் போதே, ப்ளீஸ் ரிச்சார்ஜ் யுவர் டிஷ் டிவி - செம கோவம். "டேய் மறந்ததே போனேன் , கரண்ட் பில் கட்ட இன்னைக்கு லாஸ்ட் டேட் - டிவி ரிச்சார்ஜ் இன்னையோட காலி நீ போய் கரண்ட் பில் கட்டுநாய்ன்னா நான் டிவி ரிச்சார்ஜ் பண்ண பணம் தரேன்" - அப்பா. 11 வருசமா eb பில் லே கட்டுனது இல்ல , போன மாசம் கூட போக மாட்டேன் னு அடம் பிடிச்சு 2 நாளா கரண்ட் இல்லாம இருந்தது - ஆனா இன்னைக்கு எல்லாத்துக்கும் சேத்து வச்சு செஞ்சுடாரே ... ஏன் தான் இந்த அப்பங்களே இப்படி இருக்காங்களோ ....
"நம்ம பையன் கட்டிருவாங்க , இல்லைனா கிரிக்கெட் பக்க முடியாதே , இதுக்காக தான 4 மணி ல இருந்து காத்து கிடக்கான் " - அம்மா . 2 மாசத்துக்கு முன்னாடி அம்மாவோட அக்கா பொண்ணுக்கு கல்யாணம் காலைல 5 மணிக்கு போக அம்மா 4 மணி ல இருந்து எழுப்பி விட்டாங்க - ம்ம் எந்திரிக்கவே இல்லையே நான் போனதுக்கும் கல்யாணம் முடியரத்துக்கும் கரெக்டா இருந்த தே - அதுக்கெல்லாம் சேத்து பழி வாங்குற மாதிரியான ஒரு சிரிப்பு - என்ன ஒரு புத்திசாலித்தனம் . கட்டுறேன் எல்லாத்துக்கும் முடிவு கட்டுறேன் , பஸ்ட் பில்ல காட்டுறேன் அப்புறம் ஒன்னும் செய்ய முடியாது - கிரிக்கெட் பாக்குறேன் . ஐய்யயோ 30 நிமிஷம் தான் இருக்கு , ராகுல் வேற நான் எத பக்கலியோ அதைத்தானே சொல்லுவான். 30 நிமிஷம் eb லேயே செரியா போய்டுச்சு எவ்வளவு பெரிய கியூ ...... 10 மணி ரிச்சார்ஜ் கடைல அந்த ரி சார்ஜ் பண்ணுறவன் வர இன்னும் 15 நிமிஷம் ஆகுமாம் - அப்போதான் தெரிய்ஞ்சது ஒரு நிமிடத்தின் அருமை 15 நிமிஷம் ஆகுறதுக்குள்ள எவ்வளவு தடவ மணிபாக்குறது . ரி சார்ஜ் பண்ணுறவர் வந்தார் , கம்ப்யூட்டர் திறந்து ஏதேதோ பாத்து அட நெட்ஒர்க் இல்ல அப்படி இப்படினு 30 நிமிஷம் போச்சு. பாதி மேட்ச் காலி . போய் தொலை ஹயிலைட் ல பாத்துகலாம் --- என்னதான் இருந்தாலும் லைவ் ல பாக்குற மாதிரி வருமா? என்ன........
1.30 மணி நேரம் காலி , " இதெல்லாம் உக்காந்தா எடத்துல இருந்து 10 செகண்ட் குள்ள முடிஞ்சா எப்படி இருக்கும்" . ம்ம் நல்லாத்தான் இருக்கும் . போன தடவ பஸ்ட்10 நிமிஷம் பாக்கத்துக்கு நாம அவனை போட்டு அந்த வாங்கு வாங்குனமே , நாளைக்கு இந்த ராகுல் போடுற சீன பாக்க முடியாதே. நாளைக்கு என்ன பண்ண போறன்னோ ........